திராவிடர் விடுதலைக் கழகம்
சுருக்கம் | தி.வி.க. |
---|---|
உருவாக்கம் | 12 ஆகத்து 2012 |
நோக்கம் | திராவிடம் தமிழ் தேசியம் |
பொது செயலாளர் | விடுதலை இராசேந்திரன் |
தலைவர் | கொளத்தூர் மணி |
வெளியீடு | புரட்சிப் பெரியார் முழக்கம் (வார ஏடு) |
வலைத்தளம் | http://dvkperiyar.com/ |
திராவிடர் விடுதலைக் கழகம் (Dravidar Viduthalai Kazhagam) கொளத்தூர் மணி அவர்களைத் தலைவராகவும், விடுதலை இராசேந்திரன் அவர்களைப் பொதுச் செயலாளராகவும் கொண்டு துவக்கப்பட்டது. புதிய அமைப்புக்கான அறிவிப்பு 12.08.2012 அன்று ஈரோடு செல்லாயி அம்மாள் திருமண மண்டபத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்டது. பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்த தோழர்கள் கொள்கையை முன்னெடுப்பதிலும் இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் எழுந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக தனியே பிரிந்து வந்து இந்தப் புதிய அமைப்பை உருவாக்கினர்.
பெரியார் திராவிடர் கழகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெரும்பான்மையினர் இதில் பங்கேற்று புதிய அமைப்பு உருவாக்கியுள்ளனர் என்று கொளத்தூர் மணி தெரிவித்தார்.
கொள்கை
[தொகு]தமிழ்நாட்டில் வாழும் திராவிடர்கள் (பார்ப்பனரல்லாதோர்) சமுதாயம், அரசியல், பொருளாதரம் ஆகியவற்றில் முழுவிடுதலை பெறச் செய்வது. திராவிடர்கள் ( பார்ப்பனரல்லாதோர் ) யாவரும் பெரியார் வகுத்த கொள்கைப்படி – கடவுள், மதம், சாஸ்திர சம்பிரதாயங்கள் அடிப்படையிலான ஜாதி, தீண்டாமை, பாலினப் பாகுபாடு போன்ற பிறவி உயர்வு தாழ்வுகள் ஒழிந்து – சமுதாயத்திலும், சட்டத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் சமஉரிமையும், சமவாய்ப்பையும் பெற்று – பகுத்தறிவுடன் கூடிய சுயமரியாதை – சமதர்ம வாழ்வு வாழச் செய்யப் பாடுபடுவது. பார்ப்பன – இந்திய தேசிய- பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளையை முறியடித்து – பொதுவுரிமை கொண்ட பொதுவுடைமைச் சமுதாயம் அமையப் பாடுபடுவது. திராவிட மக்களிடையே சமயம், பழக்க வழக்கம் என்பவைகளின் பெயரால் இருந்து வரும் ஜாதி, தீண்டாமை, பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கை ஆகியவைகளை ஒழித்து, அவர்களை மானமும் அறிவும் பெற்ற மக்களாக வாழச்செய்வது. மேலே குறிப்பிட்டுள்ள இலட்சியங்களில் வெற்றியடையவும் அதற்கு ஆதரவாக – ஜாதி ஒழிந்த சமுதாயம் உருவாகும்வரை, இடைக்கால ஏற்பாடாக, ஒவ்வொரு ஜாதிக்கும் அவரவர்களுக்கு உரிய எண்ணிக்கை, அவசியம் ஆகியவைகளுக்கு ஏற்ப எல்லா துறைகளிலும் வகுப்புவாரிப் பிரதிநித்துவம் கிடைக்கும்படி செய்யப்பாடுபடுவது. இவைகளுக்கும், இவைகளைப் போன்ற இதர இலட்சியங்களுக்கும் வேண்டியதுமான செயல்களை நிறைவேற்ற வேண்டியதற்கு அவசியமான நடைமுறைத் திட்டங்களை அவ்வப்போது வகுத்துக் கொள்வது
பிரகடனம்
[தொகு]இன்று தமிழ்நாட்டில் நிலவும் சமுதாயச் சிக்கல்களுக்குச் சரியான தீர்வானதும், கடந்த காலங்களில் புறக்கணித் தவர்களாலும், விமர்சித்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதும், எதிரிகள் எந்த முகமூடியோடு வந்தாலும் துல்லியமாக இனங்கண்டு துணிச்சலோடு அவர்களைச் சந்திக்கவல்லதும் ஆன பெரியாரியலை மக்களிடையே கொண்டு செல்வதும் அதன்வழியே புதிய சமுதாயத்தைப் படைப்பதும் ஒவ்வொரு பெரியார் தொண்டனுக்கும் முன்னுள்ள சமுதாயக் கடமையாகும்.
பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, சாதிச் சழக்குகளும் – இந்துத்துவ பேராபத்தும் எப்போதுமில்லாத அளவு வளர்ந்து நிற்கும் சூழலில், பெரியார் இயக்கத்தைத் தடம் புரளாமலும், வீரியத்தோடும் கொண்டு செலுத்தவேண்டியது அவசியமாகிறது. மாறிவரும் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப பார்ப்பன ஆதிக்கமும் வடிவம் மாறி வருகிறது. முற்போக்கு முகமூடி தரித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பெரியாரியம் தன்னைத் தகவமைத்து எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டதும், அவராலேயே பொரு ளாதார வளத்துடனும் கட்டமைப்பு வசதிகளுடனும் விட்டுச்செல்லப்பட்டதுமான திராவிடர் கழகம் சமுதாயப் புரட்சியைச் சரியான திசையில் முன்னெடுத்துச் செல்லாமலும் – பெரியார் கொள்கைகளை நீர்த்துப் போகச்செய்தும் பல்வேறு தருணங்களில் பெரியார் தத்துவங்களுக்கு முரணான நிலையை எடுத்ததோடு மட்டுமல்லாமல் சமுதாயப் பணிகளை முற்றுமுழுதாகப் புறக்கணித்து விட்டு, அதீத அரசியலில் அமிழ்ந்து போய் விட்டது.
ஆகையால், பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் திராவிடர் விடுதலைக் கழகம்.
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று, இனஉணர்வுச் சிந்த னையோடு – பெரியார் காலத்தில் அளித்ததைப் போன்று ஆதரவைக் கேட்டு நிற்கிறது எங்கள் கழகம். ஒடுக்கப்பட்ட மக்களே! மனிதஉரிமை ஆர்வலர்களே! சம உரிமைச் சிந்தனையாளர்களே! கொள்கை உறுதி ஒன்றை மட்டுமே தன் சொத்தாகக் கொண்டு களம் இறங்கி இருக்கிற இந்த எளிய தொண்டர்களின் இயக்கத்துக்கு தோள்கொடுங்கள். துணை நில்லுங்கள்! இணைந்து நிற்போம்! பெரியார் பணி முடிப்போம்!
உறுதிமொழி
[தொகு]பெரியாரியலை இலட்சியமாக ஏற்றுக்கொண்டுள்ள நான், அதை சமுதாயத்தில் பிரச்சாரம் செய்வதோடு நின்று விடாமல், எனது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றுவேன் என்று உறுதி ஏற்கிறேன்.
தீண்டாமை, சாதீய உணர்வுகளிலிருந்து முழுமையாக விடுவித்துக்கொண்டு சாதி, மத மறுப்பாளனாக வாழ்ந்து காட்டுவேன் என்றும், எனது குடும்பத்தில் சாதிமறுப்புத் திருமணங்களையே நடத்த முழுமையாக முயற்சிப்பேன் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையிலும், பெண்களுக்குச் சமஉரிமை வழங்குவதிலும் சொல்லொன்று செயலொன்றாக இல்லாமல் உண்மையாக நடந்துகொள்வேன் என்றும், உதட்டளவில் சாதி எதிர்ப்புப் பேசிக்கொண்டு உள்ளத்தில் சாதியவாதியாக இருக்கும் எவரும் பெரியாரியலுக்கு எதிரானவர்கள் என்றே கருதி வெறுப்பேன் என்றும் உறுதி ஏற்கிறேன்.
ஒழியட்டும் சாதி அமைப்பு!
மடியட்டும் பெண்ணடிமை!
வெல்லட்டும் பெரியாரியப் பண்பாட்டுப் புரட்சி!
ஜாதி எதிர்ப்பு உறுதிமொழி
[தொகு]“பெரியாரின் ஆணையை ஏற்று அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை 1957ஆம் ஆண்டு நவம்பர் 26ல் 10,000 பேர் எரித்து, 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைவாசத்தை ஏற்ற கருஞ்சட்டை மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
சிறைக்குள்ளேயும், விடுதலையான ஒரு மாதத்துக்குள் சிறைக்கு வெளியிலும் சிறைக் கொடுமையால் உடல் நலம் பாதித்து வீரமரணத்தைத் தழுவிய 18 போராளிகளின் லட்சிய நெருப்பை நெஞ்சில் ஏந்துகிறோம்.
ஜாதி ஒழிப்புக்காக பெரியார் விட்டுச் சென்ற போராட்ட மரபை முன்னெடுக்கவும், சுயஜாதி மறுப்பு உணர்வோடு- ஜாதி ஆதிக்க- ஜாதி வெறி சக்திகளை எதிர்த்துக் களமாடவும் உறுதி ஏற்கிறோம்.
வாழ்க பெரியார்!
வீழட்டும் பார்ப்பனிய ஜாதியமைப்பு”
கடவுள் மறுப்பு உறுதிமொழி
[தொகு]கடவுள் இல்லை! கடவுள் இல்லை!
கடவுள் இல்லவே இல்லை!!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்!
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்!
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!
ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம் ஆகியவைகளை கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன்!!
1967இல் திருவாரூர் மாவட்டம் விடயபுரத்தில் தந்தை பெரியார்
சமூக நீதி நாள் உறுதிமொழி
[தொகு]பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்து அமையப் போகும் எதிர்கால தமிழ்நாட்டின் இலக்கினை அடையாளம் காட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி செலுத்துகிறோம். பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கீழே கொடுத்துள்ளோம்.
—–
“ஜாதி, மத அடையாளங்களைக் காட்டி பாகுபாடு காட்டுவது,
பெண்களின் உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்குவது,
அறிவியலுக்கு எதிரான சடங்குகளை, நம்பிக்கைகளை – பண்பாட்டுப் பெருமைகளாக பேசி வளர்ச்சிக்கான சிந்தனைகளை முடக்குவது, ஒன்றியத்தை ஒற்றை ஆட்சியாக மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதாரம்,
விவசாயம், சுற்றுச்சூழல், அரசியல் உரிமைகளை பறிப்பது, சமஸ்கிருத பண்பாட்டைத் தேசிய பண்பாடாக மாற்றுவது” உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளும் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதே ஆகும்.
இம்முயற்சிகளை முறியடிக்க பெண்கள் ஆண்கள் அடங்கிய இளைய சமூகத்தை அணிதிரட்டி சமூக நீதியை நோக்கி முன்னேறிச் செல்ல உறுதியேற்கிறோம்.
இந்த பணிகளுக்காக நான் சார்ந்துள்ள இயக்கத்திற்கு மேலும் கூடுதலாக எனது ஆற்றலையும், பங்களிப்பையும் வழங்குவதோடு எதிர்காலத் தமிழ்நாடு ‘சமூக நீதி நாடு’ என்று உலகுக்குக் காட்ட உறுதியேற்கிறோம்.
வாழ்க பெரியார்!
வெல்லட்டும் சமூக நீதி!
இயக்க ஏடு
[தொகு]வார ஏடு - புரட்சிப் பெரியார் முழக்கம்
மாத இதழ் - நிமிர்வோம்
வெளியிட்ட புத்தக பட்டியல்
[தொகு]குடிஅரசு தொகுப்பு
ஜாதி ஒழிப்பு மலர்
திராவிட இயக்க வரலாற்று சுவடுகள் – தஞ்சை மருதவாணன்
அயோக்கிய சிகாமணி அருகோவின் அண்ட புளுகும் ஆகாசப் புளுகும் (திராவிடர் கழகம் பெயர் மாற்றம்) – கவி
ஆர் எஸ் எஸ் கேள்விக்கு அதிரடி பதில் – தடா சுந்தரம்
அறிவறிந்த மூடர்கள் – செங்குட்டுவன்
ஆரியச் சுரண்டல் – சிற்பி இராசன்
ஆரியம் அழித்த ஆட்சி பீடங்கள்
இதோ பெரியாரில் பெரியார் – பட்டுக்கோட்டை அழகிரிசாமி
இமயத்தில் பெரியார் – திவிக வெளியீடு
இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு! – கலி. பூங்குன்றன்
இரவிக்குமாரின் அண்ட புளுகு ஆகாச புளுகு
இராவணகாவியம் படைத்த புலவர் குழந்தை – திவிக வெளியீடு
இராவண பெரியார் – தொகுப்பாசிரியர் கவி
இல்லாத இந்து மதம் – திவிக வெளியீடு
பெரியார் வரலாற்றுச் சுருக்கம் – தஞ்சை மருதவாணன்
காந்தி கொலை வழக்கு
கீதை-ஒரு சமுதாய விரோத நூல் – செங்குட்டுவன்
‘குடி அரசு’ இதழ் – பெரியாரின் போர்வாள் – நெ.து. சுந்தரவடிவேலு
குடிஅரசு வழக்கு – முழு தகவல்கள்
சமதர்ம அறிக்கை – தொகுப்பாசிரியர் கவி
சமஸ்கிருத படையெடுப்பு – திவி கழக வெளியீடு
தமிழ் இலக்கியங்களில் வர்ணாசிரமம் – புலவர் இமயவரம்பன்
தமிழ்நாட்டில் ஜாதி தீண்டாமைக் கொடுமைகள் ஒரு கள ஆய்வு – எவிடென்ஸ்
தமிழர்களின் உரிமைக்கு எதிரி யார்? – திவிக வெளியீடு
தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் – வடநாட்டுக்காரர்கள் – திவிக வெளியீடு
தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்? – திவிக வெளியீடு
திராவிட இயக்கத் தலைவர்கள் – இளந்தமிழன் கட்டுரைகள் – தொகுப்பாசிரியர் கவி
திராவிடம் தமிழ்த்தேசியம் ஒரு விளக்கம் – கருமலையப்பன்
திராவிடர் இயக்க வரலாற்றுக் குறிப்புகள் – கவி
திராவிடர் விடுதலைக் கழக 20 ஆண்டு பணிகள்
நாளை விடியும் குடிஅரசு
பள்ளியில் இருந்து குழந்தைகளை விரட்டும் புதிய கல்விக் கொள்கை
பன்முக பார்வையில் பெரியாரியம் – கருத்தரங்க உரை தொகுப்பு
பார்ப்பன அரசு – அருந்ததிராய்
பிஜேபியின் உண்மைமுகம்
பெரியார் அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு – ஆ. இராசா
பெரியார் ஒரு வாழ்க்கை நெறி – கவிஞர் கலி.பூங்குன்றன்
பெரியார் தமிழ்தேசத் தந்தை – கவி
பெரியார் தமிழினத்தின் பகைவரா? – வாலாசா வல்லவன்
பெரியார் நாடு உருவாகும்! – அதி அசுரன்
பெரியாரிய களப்போராளி தோழர் பத்ரியின் நினைவுச் சுவடுகள்
பேய் பில்லி-சூனியம் பொய் – திவி கழக வெளியீடு
மதம் விளைவித்த மாச்சர்யம் – செங்குட்டுவன்
மனு சாஸ்திர எரிப்பு ஏன் – துண்டறிக்கை
மெக்காலே மீட்டு தந்த கல்வி உரிமை – திவிக வெளியீடு
வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள் – அப்துல் சமது
வரலாற்று வன்முறையாளர் பெ.மணியரசன் – கருமலையப்பன்
விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும் செங்குட்டுவன்
விஞ்ஞானிகளை அழித்த மதவெறி – திவி கழக வெளியீடு