மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் (Makkal Dravida Munnetra Kazhagam) 1977ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து வி. ஆர். நெடுஞ்செழியன் மற்றும் க. இராசாராம் ஆகியோர் இணைந்து இந்த கட்சியைத் தொடங்கினர்.

கட்சி தொடக்கம்[தொகு]

அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[1]

1969- சூலை மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.1977 இந்தியப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களில் 34 இடங்களை வென்றது.பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன்,ராசராம், மாதவன் , ப. உ.சண்முகம் போன்ற கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பொதுத்தேர்தலில் திமுகவின் தோல்விக்கு கருணாநிதியைக் குற்றம்சாட்டி விட்டு, கருணாநிதி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.மேலும் "மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற அமைப்பை உருவாக்கினர்.மக்கள் திமுகவின் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும், துணை பொதுச் செயலாளராக ராசராமும் இருந்தனர்.

தேர்தலில் போட்டி[தொகு]

1977ஆம் ஆண்டுத் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணியில், மக்கள் தி.மு.க. இடம்பெற்றது.

கட்சி கலைப்பு[தொகு]

சட்டசபை தேர்தலில் அதிமுக வென்ற பிறகு கட்சியை அதிமுகவிடம் இனணத்தனர்.

  1. நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 657-661