தாயக மறுமலர்ச்சி கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாயக மறுமலர்ச்சி கழகம் (Thayaga Marumalarchi Kazhagam) என்பது தமிழ்த் திரைப்பட நடிகர் டி. ராஜேந்தரால் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சியை ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தொடங்கினார். 1991 சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி 2 இடங்களில் வென்றது. 1996இல் ராஜேந்தர் இக்கட்சியைக் கலைத்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். பின்னர் 2004இல் திமுகவை விட்டு வெளியேறி அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.[1][2][3]

டி. ராஜேந்தர் தி.மு.க.வில் இருந்த போது கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். தி.மு.க சார்பாக போட்டியிட்டு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் அவரது இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம், ஆட்சியில் இருந்த தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த போது, சிறுசேமிப்புத் துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1991 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம் accessed April 19, 2009
  2. Subramanian, T. S. (07 October 2005). "Another actor in politics". Frontline. The Hindu Group. 9 ஜூலை 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 January 2010 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  3. Subramanian, T. S. (30 July 2004). "The celluloid connection". Frontline. The Hindu Group. 1 ஜூன் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 January 2010 அன்று பார்க்கப்பட்டது.