தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
Appearance
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை | |
---|---|
தலைவர் | உ.தனியரசு |
தொடக்கம் | மார்ச் 14 2001, கோவை, தமிழ்நாடு, இந்தியா. |
தலைமையகம் | கொங்கு அறிவாலயம், 4/127, பல்லடம் சாலை, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு. |
கொள்கை | தமிழ் மொழி பற்று, தமிழ் சமூக ஒருங்கிணைப்பு |
கூட்டணி | 2011அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
இணையதளம் | |
www.thaniyarasu.in | |
இந்தியா அரசியல் |
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி 2001ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோவையில் உ. தனியரசு என்பவரால் உருவாக்கப்பட்டது.[1] இந்த அமைப்பு 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளரான உ. தனியரசு பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]
கொடி
[தொகு]தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு என பச்சை சிவப்பு வர்ணத்தில் அதன் நடுவில் புலி சின்னமும் கொண்டு கொடியை உருவாக்கி அதனை கோவையில் உ.தனியரசு அவர்கள் 2001ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் ஏற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-26. பார்க்கப்பட்ட நாள் 2018-02-09.
- ↑ https://tamil.oneindia.com/news/tamilnadu/bio-datas-thiruppur-dist-admk-candidates-252105.html
- ↑ http://m.dinamalar.com/detail.php?id=1451355