திருப்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருப்பூர்
மாவட்டம்
Amaravathi Dam and reservoir - panoramio (3).jpg
அமராவதி அணை
India Tamil Nadu districts Tiruppur.svg
திருப்பூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் TamilNadu Logo.svg தமிழ்நாடு
தலைநகரம் திருப்பூர்
பகுதி கொங்கு நாடு
ஆட்சியர்
திரு. க. விஜய கார்த்திகேயன்
இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திருமதி. திஷா மிட்டல்
இ.கா.ப
மாநகராட்சி 1
நகராட்சிகள் 5
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 9
பேரூராட்சிகள் 16
ஊராட்சி ஒன்றியங்கள் 13
ஊராட்சிகள் 265
வருவாய் கிராமங்கள் 350
பரப்பளவு 5087.26 ச.கி.மீ
மக்கள் தொகை
24,79,052 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
வாகனப் பதிவு
TN-39, TN-42, TN-78
இணையதளம் https:///tiruppur.nic.in/

திருப்பூர் மாவட்டம் (Tiruppur district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பூர் ஆகும். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர் [1], அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய வருவாய் வட்டங்களையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய வருவாய் வட்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.[2] இந்த மாவட்டம் 5087.26 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. தாராபுரம் தான் மாவட்டத்தின் மிகப்பெரிய தாலுகா ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 33 உள்வட்டங்களும் மற்றும் 350 வருவாய் கிராமங்களும், 13 ஊராட்சி ஒன்றியங்களும், 265 கிராம ஊராட்சிகளும், திருப்பூர் மாநகராட்சியும், 4 நகராட்சிகளும், 17 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.

வருவாய் கோட்டங்கள்[தொகு]

வருவாய் வட்டங்கள்[தொகு]

உள்ளாட்சி அமைப்புகள்[தொகு]

மாநகராட்சிகள்[தொகு]

பெரு நகராட்சிகள்[தொகு]

சிறு நகராட்சி[தொகு]

பேரூராட்சிகள்[தொகு]

ஊராட்சி அமைப்புகள்[தொகு]

இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும்[5], 265 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[6]

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1901 5,16,618 —    
1911 5,53,598 0.00%
1921 5,88,291 0.00%
1931 6,55,837 0.01%
1941 7,54,273 0.01%
1951 8,84,545 0.01%
1961 9,49,859 0.00%
1971 11,30,940 0.01%
1981 13,24,480 0.01%
1991 15,31,983 0.01%
2001 19,20,154 0.01%
2011 24,79,052 0.01%
சான்று:[7]

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 24,79,052 ஆகும். இதில் ஆண்கள் 12,46,159; பெண்கள் 12,32,893 ஆகும். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 29.11% கூடியுள்ளது. மக்கள்தொகை அடரத்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 478 பேர் வாழ்கின்றனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.68% ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2,41,351 ஆக உள்ளனர். மாவட்ட மக்கள்தொகையில் 15,21,111 (61.36%) மக்கள் நகரப்புறங்களில் வாழ்கின்றனர்.[8]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 91.92% ஆகவும், கிறித்தவர்கள் 5.00% ஆகவும், இசுலாமியர்கள் 2.82% ஆகவும், மற்றவர்கள் 0.24% ஆகவும் உள்ளனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்[தொகு]

தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

 • சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - திருப்பூர் மாநகராட்சி,
 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - அவிநாசி,
 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பல்லடம்,
 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - உடுமலைப்பேட்டை,
 • அரசு கலைக் கல்லூரி - காங்கேயம்,
 • LRG அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி - திருப்பூர் மாநகராட்சி.

அரசியல்[தொகு]

மக்களவைத் தொகுதிகள்[தொகு]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

 1. திருப்பூர் வடக்கு
 2. திருப்பூர் தெற்கு
 3. அவிநாசி
 4. பல்லடம்
 5. காங்கேயம்
 6. தாராபுரம்
 7. உடுமலைப்பேட்டை
 8. மடத்துக்குளம்

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தின் திருப்பூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனியன், ஜட்டி போன்ற பின்னலாடை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியால் வெளிநாட்டு செலாவணி ஈட்டுகிறது. இம்மாவட்டத்தில் பாயும் அமராவதி ஆறு மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டங்களால், திருப்பூர் மாவட்டத்தின் சில வட்டங்கள் செழிப்புடன் விளங்குகிறது. உடுமலைப்பேட்டை வட்டத்தின், மேற்கு தொடர்ச்சி மலையில் அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளது.

வேளாண்மை[தொகு]

திருப்பூர் மாவட்டத்தில் உழைக்கும் மக்கள் தொகையில் சுமாா் 30 விழுக்காடு மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 472629 எக்டரில் 184645 எக்டரை சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான அரசின் கொள்கைகளும், நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன.[9] விவசாய உற்பத்தியை உயர்த்தவேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும், அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர்கொள்கிறது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்தவும், ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவலாக்கல் தொழில் நுட்பங்களுடன், நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் (NMSA) – மானாவாரி பகுதி மேம்பாடு, நீடித்த வறட்சி நில வேளாண்மை (MSDA), கூட்டுப் பண்ணையம், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளா்ச்சி செயல்பாடுகள், நுண்ணீா் பாசனம் வாயிலாக நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிர் உரங்கள் மூலம் மண்வள வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை (INM), ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM) போன்ற தொழில் நுட்பங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.

உள்கட்டமைப்புகள்[தொகு]

பாப்பான்குளத்தில் அரசு விதைப்பண்ணை உள்ளது. கருவிதைகள் மற்றும் ஆதார விதைகளைக் கொண்டு விதைப்பண்ணை அமைத்து விதை பெருக்கம் செய்து, வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்து விவசாயிகள் நிலங்களில் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகளை பெருக்கம் செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தரமான சான்று பெற்ற விதைகளை விநியோகம் செய்வதே மாநில விதைப்பண்ணைகளின் நோக்கமாகும். நெல் மற்றும் உளுந்து பயிர்களுக்கான விதை பண்ணைகள் பாப்பான்குளத்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் அமைக்கப்படுகிறது.

அவிநாசியில், உயிர் உரங்கள் உற்பத்தி மையம் செயற்படுகிறது. அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைாில்லம் (இதர), ரைசோபியம் (பயறு வகைகள்), ரைசோபியம் (நிலக்கடலை), மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிா் உரங்கள் திட நிலைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி, இரசாயன உரங்கள் பயன்படுத்துவதை குறைத்து மண்வளத்தை மேம்படுத்துவதே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தின் நோக்கமாகும்.

திருப்பூரில், மண்பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வலை சட்ட முறையில் மண்மாதிரிகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமிருந்தும், சேகரிக்கப்பட்டு மண்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் முடிவறிக்கையின்படி மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவின்படி பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்கள் பயன்படுத்துவதனால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு ரசாயன உரங்கள் பயன்பாடு குறைந்து உற்பத்தி செலவினமும் குறைகிறது.[10]

பல்லடத்தில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் செயல்படுகிறது. இந்த நடமாடும் பரிசோதனை நிலையம் மூலம் மாதந்தோறும் முன் பயண அறிக்கை தயார் செய்யப்பட்டு வட்டாரங்களுக்கு சென்று நேரடியாக மண் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உடன் ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது. ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவின்படி பயிர்களுக்கு தேவையான இரசாயன உரங்கள் பயன்படுத்துவதனால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு ரசாயன உரங்கள் பயன்பாடு குறைந்து உற்பத்தி செலவினமும் குறைகிறது.

திருப்பூரில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயற்பாடுகளால், ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியினை குறைத்து ஒரு பாலமாக செயல்பட்டு தொழில் நுட்பங்களை செயல்விளக்கங்கள், பயிற்சிகள் மற்றும் கண்டுணர்தல் சுற்றுலா மூலம் விவசாயிகளுக்கு எடுத்து செல்வதே இதன் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

தேவாரத் திருதலங்கள்[தொகு]

அவிநாசி அவிநாசியப்பர் கோயில், திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் என தேவாரம் பாடல் பெற்ற இரு சிவாலயங்கள் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பூர்_மாவட்டம்&oldid=3097293" இருந்து மீள்விக்கப்பட்டது