காங்கேயம்
காங்கேயம் | |
— இரண்டாம் நிலை நகராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | காங்கேயம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3] |
நகராட்சி தலைவர் | |
சட்டமன்றத் தொகுதி | காங்கேயம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 32,147 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
காங்கேயம் (ஆங்கிலம்:Kangeyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில உள்ள காங்கேயம் வட்டம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இவ்வூரைச் சேர்ந்த காளைகள் புகழ்பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் எனப்படுகின்றன.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,449 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 32,147ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.1%மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2811 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,000 மற்றும் 23 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.86% , இசுலாமியர்கள் 6.22% , கிறித்தவர்கள் 3.91% மற்றும் பிறர் 1.01% ஆகவுள்ளனர்.[4]
போக்குவரத்து[தொகு]
காங்கேயம் நகராட்சி போக்குவரத்தை பொறுத்தவரை முக்கிய பங்காற்றுகிறது. காங்கேயத்தில் இருந்து கோயம்புத்தூர், பல்லடம், சூலூர், பொங்கலூர், திருப்பூர், பழநி, தாராபுரம், முத்தூர், வெள்ளக்கோயில், கரூர், திருச்சி, குளித்தலை, வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், ஈரோடு, சென்னிமலை, பொள்ளாச்சி, அரசலூர், அரியலூர், மணப்பாறை,பெருந்துறை என தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நகர மக்கள்தொகை பரம்பல்