எம். பி. சாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். பி. சாமிநாதன் (M. P. Saminathan) என்பவர் தமிழக நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அமைச்சராவார். இவர் ஈரோட்டில் 5 மே 1964 பிறந்தவர். இவர் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் ஆகும். இவர் கலைப்பிரிவில் தன் இளங்கலைப் படிப்பை முடித்தவர். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு வெள்ளகோயிலில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருப்பூர் மாவட்ட தி. மு. க செயலாளராக இருந்தவர்.[1]

இவர் முன்னாள் அமைச்சர் துரை. ராமசாமியை தோற்கடித்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] முன்னாள் அமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது இவர் பெற்ற வாக்குகள் 33800 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. M. P. Saminathan profile at TN government website
  2. "Tamil Nadu 2006". myneta.info. பார்த்த நாள் 5 பெப்ரவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._சாமிநாதன்&oldid=2444900" இருந்து மீள்விக்கப்பட்டது