முத்தூர்
| முத்தூர் | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| வட்டம் | காங்கேயம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
13,212 (2011[update]) • 404/km2 (1,046/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 32.70 சதுர கிலோமீட்டர்கள் (12.63 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/muthur |
முத்தூர் (ஆங்கிலம்:Muthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, காங்கேயம் - கொடுமுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் திருப்பூர் 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 18 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 20 கி.மீ.; தெற்கில் வெள்ளக்கோயில் 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 3,948 வீடுகள், 13,212 மக்கள்தொகை கொண்டதைக் குறிக்கிறது.[4]
கோயில்கள்
[தொகு]முத்தூர் பேரூராட்சிப் பகுதியில், குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Muthur Population Census 2011