சென்னிமலை
சென்னிமலை | |
— சிறப்பு நிலை பேரூராட்சி — | |
அமைவிடம் | 11°10′03″N 77°36′15″E / 11.167600°N 77.604200°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | பெருந்துறை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
21,539 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi) • 330 மீட்டர்கள் (1,080 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/chennimalai |
சென்னிமலை (ஆங்கிலம்:Chennimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கைத்தறிநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும்.விடுதலைப் போராட்ட வீரரான திருப்பூர் குமரன் பிறந்ததும் இவ்வூரேயாகும்.இந்த ஊரில் நெசவாளர்கள் முன்னேற சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்டெக்ஸ்) சுதந்திரத்திற்கு முன்பே நெசவாளர் காவலர் பத்மஸ்ரீ எம்.பி.நாச்சிமுத்து அவர்களால் உருவாக்கப்பட்டது.
இங்கு புகழ்பெற்ற சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருப்பதால், கூடிய விரைவில் நகராட்சி ஆகும் தகுதியும் உள்ளது.
அமைவிடம்
[தொகு]சென்னிமலை பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 8 கி.மீ. தொலைவில் உள்ள ஈங்கூர் ஆகும்.. இதன் கிழக்கில் அரச்சலூர் 10 கி.மீ.; மேற்கில் ஊத்துக்குளி 18 கி.மீ.; வடக்கில் பெருந்துறை 13 கி.மீ.; தெற்கில் காங்கேயம் 18 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,682 வீடுகளும், 15,500 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 11°10′N 77°37′E / 11.17°N 77.62°E ஆகும்.[6] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 330 மீட்டர் (1082 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்கவும்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சென்னிமலை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Chennimalai Population Census 2011
- ↑ "Chennimalai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)