உள்ளடக்கத்துக்குச் செல்

பவானி

ஆள்கூறுகள்: 11°26′50″N 77°41′02″E / 11.447100°N 77.684000°E / 11.447100; 77.684000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானி
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
பவானி
இருப்பிடம்: பவானி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°26′50″N 77°41′02″E / 11.447100°N 77.684000°E / 11.447100; 77.684000
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பவானி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
சட்டமன்றத் தொகுதி பவானி
சட்டமன்ற உறுப்பினர்

கே. சி. கருப்பண்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

39,225 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi)

193 மீட்டர்கள் (633 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/bhavani/


பவானி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி வட்டம் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். பவானி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்[தொகு]

இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும், பவானி, கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 39,225 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பவானி நகர மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி&oldid=4022480" இலிருந்து மீள்விக்கப்பட்டது