நெருஞ்சிப்பேட்டை
| நெருஞ்சிப்பேட்டை | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | அந்தியூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
6,791 (2011[update]) • 649/km2 (1,681/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 10.47 சதுர கிலோமீட்டர்கள் (4.04 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/nerinjipettai |
நெருஞ்சிப்பேட்டை (ஆங்கிலம்:Nerunjipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இதன் கிழக்கில் காவிரி ஆறு எல்லையாகவும், மேற்கில் பாலமலையும், வடக்கில் சேலம் மாவட்டமும், தெற்கில் அம்மாபேட்டை பேரூராட்சியும் அமையப்பெற்றுள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் காவிரி ஆறு ஓடுவதாலும், மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பாசனத்தாலும் கரும்பு, நெல் வாழை ஆகிய பணப்பயிர்களும் மேட்டுப்பகுதியில் மானாவாரியாக சோளம், கடலை, ஆமணக்கு, கொள்ளு, துவரை போன்ற பயிர்கள் விளைகின்றன.
அமைவிடம்
[தொகு]நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சிக்கு தெற்கில் ஈரோடு 45 கி.மீ.; வடக்கில் மேட்டூர் 16 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 64 கி.மீ.; கிழக்கில் சேலம் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]10.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 50 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,961 வீடுகளும், 6,791 மக்கள்தொகையும் கொண்டது. [4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nerunjipettai Population Census 2011