தாளவாடி வட்டம்
தாளவாடி வட்டம் (Thalavadi taluka), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பத்து பத்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] கோபிச்செட்டிப்பாளையம் வருவாய் கோட்டத்தில் அமைந்த தாளவாடி வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தாளவாடியில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 21 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]
தாளவாடி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் இயங்குகிறது.
தோற்றம்
[தொகு]சத்தியமங்கலம் வட்டத்தில் இருந்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டு தாளவாடி வருவாய் வட்டம் 8 நவம்பர் 2016ல் புதிதாக நிறுவப்பட்டது.[3] [4]
புவியியல்
[தொகு]தாளவாடி வட்டத்தில் மக்கள்தொகை குறைந்திருப்பினும், அடர்ந்த காப்புக்காடுகளில் வாழும் மலைவாழ் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இவ்வட்டம் உருவாக்கப்பட்டது. சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் பகுதியில் தாளவாடி வட்டத்தின் பெரும்பகுதிகள் கொண்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாளவாடி வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 63,359 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,444 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,900 ஆக உள்ளது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ERODE DISTRICT - Revenue Administration
- ↑ THALAVADI TALUK – REVENUE VILLAGES
- ↑ ஈரோடு மாவட்டத்தில் 3 தாலுகா உதயம்
- ↑ "Kodumudi, Modakurichi and Thalavadi taluks take off". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/kodumudi-modakurichi-and-thalavadi-taluks-take-off/article8329438.ece. பார்த்த நாள்: 17 December 2016.
- ↑ Census of Erode District Panchayat Unions
வெளி இணைப்புகள்
[தொகு]- ஈரோடு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2018-03-30 at the வந்தவழி இயந்திரம்