அம்மாப்பேட்டை, ஈரோடு மாவட்டம்
அம்மாப்பேட்டை, (Ammapettai, Erode), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இவ்வூரில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
இப்பேரூராட்சியில் 15 கிராமங்களும் விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாகக் கொண்டுள்ளன. காவிரி ஆறு இப்பகுதியின் வேளாண்மைக்கு ஆதாரமாய் விளங்குகிறது. மேலும் மேட்டூர் வலது கரை கால்வாய் இப்பகுதிகளின் வழியே செல்வதால், இப்பகுதியில் நெல், கரும்பு, பருத்தி ஆகியவை பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]அம்மாபேட்டை பேரூராட்சிக்கு கிழக்கில் ஈரோடு 40 கி.மீ.; மேற்கில் அந்தியூர் 20 கி.மீ.; வடக்கே மேட்டூர் 20 கி.மீ.; தெற்கே பவானி 20 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]23.67 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி, 2,758 வீடுகளும், 9,677 மக்கள்தொகையும் கொண்டது. [2]