எலத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலத்தூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கோபிச்செட்டிப்பாளையம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,827 (2011)

432/km2 (1,119/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 18.13 சதுர கிலோமீட்டர்கள் (7.00 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/elathur

எலத்தூர் (ஆங்கிலம்:Elathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.

அமைவிடம்[தொகு]

நம்பியூர் - சத்தியமங்கலம் சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 58 கிமீ உள்ளது; இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 25 கிமீ; மேற்கில் சத்தியமங்கலம் 22 கிமீ; தெற்கில் நம்பியூர் 3 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

18.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை மற்றும் அமைப்பு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 மக்கள்தொகையும் கொண்டது. <ref>Elathur Population Census 2011

  இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது.
  இங்கு,
    1.அருள்மிகு சொழீஸ்வரர் கோவில்
    2.அருள்மிகு கூத்தாண்ட மாரியம்மன் கோவில்
    3. அருள்மிகு அனைய குமாரசுவாமி கோவில்
    4. அருள்மிகு கரிய காளியம்மன் கோவில்
    5.நாகமலை
    6.அருள்மிகு பிள்ளையார் கோவில்
    7.அருள்மிகு மாகாளியம்மன் கோயில்
    என, பல வழிபாட்டு தலங்கள் உள்ளன

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 3. எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=எலத்தூர்&oldid=2819711" இலிருந்து மீள்விக்கப்பட்டது