வெள்ளோட்டம்பரப்பு
வெள்ளோட்டம்பரப்பு | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | கொடுமுடி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
7,621 (2011[update]) • 565/km2 (1,463/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/vellottamparappu |
வெள்ளோட்டம்பரப்பு (ஆங்கிலம்:Vellottamparappu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும். இப்பேரூராட்சிக்கு வடக்கே கிளாம்பாடி ஊராட்சியும், தெற்கே கொளத்துப்பாளையம் ஊராட்சியும், கிழக்கே நஞ்சை கொளாநல்லி ஊராட்சியும் மற்றும் மேற்கே பழமங்கலம் ஊராட்சியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த பேரூராட்சி, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலைக் கொண்டது.
அமைவிடம்[தொகு]
வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 30 கி.மீ.; கிழக்கே நாமக்கல் 60 கி.மீ.; மேற்கே திருப்பூர் 75 கி.மீ.; தெற்கே கரூர் 30 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
13.50 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 59 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,431 வீடுகளும், 7,621 மக்கள்தொகையும் கொண்டது. [4]
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 8,129 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளோட்டம்பரப்பு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 75%; பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளோட்டம்பரப்பு மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vellottamparappu Population Census 2011
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007.