பாசூர்
| பாசூர் | |||||||
| ஆள்கூறு | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| வட்டம் | கொடுமுடி | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
3,670 (2011[update]) • 595/km2 (1,541/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 6.17 சதுர கிலோமீட்டர்கள் (2.38 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/pasur | ||||||
பாசூர் (Pasur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இங்கு மஞ்சள், நெல், வாழை, கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இப்பேரூராட்சி வழியாகச் செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், வேளாண்மைக்குப் பெரும் பங்கு வகிக்கிறது. பாசூர் - சோழசிராமணிக்கு கரைகளுக்கும் இடையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பேரேஜ் நீர்மின் திட்டம் செயல்படுகிறது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி காவேரி ஆறு செல்கிறது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]6.17 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும்,[3] ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,120 வீடுகளும், 3,670 மக்கள்தொகையும் கொண்டது.[5]
அமைவிடம்
[தொகு]பாசூர் பேரூராட்சி ஈரோடு - கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் ஈரோட்டிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்குச் செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, பேருந்து (எண்: 30, 6A) வசதிகளும் உண்டு. முக்குடி வேலம் பாளையம், பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். பழனி கவுண்டன் பாளையம், பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/06/tn-assembly-election-2021-modakurichi-constituency-3575676.html. பார்த்த நாள்: 19 February 2026.
- ↑ பாசூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pasur Population Census 2011