உள்ளடக்கத்துக்குச் செல்

சலங்கப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலங்கப்பாளையம்
  பேரூராட்சி  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பவானி
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 14,456 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/salangapalayam

சலங்கப்பாளையம் (ஆங்கிலம்: Salangapalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

நெல், கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. மேலும் கால்மிதியடிகள் அதிகளவில் உற்பத்தியாகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அமைவிடம்

[தொகு]

சலங்கபாளயம் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே பவானி 14 கி.மீ.; மேற்கே கோபிச்செட்டிப்பாளையம் 13 கி.மீ.; வடக்கில் அந்தியூர் 30 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 18 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

24.24 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 112 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 4,668 வீடுகளும், 15,609 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சலங்கபாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Salangapalayam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலங்கப்பாளையம்&oldid=4514089" இலிருந்து மீள்விக்கப்பட்டது