ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டத்தின் சார்பில், ஈரோட்டில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஈரோட்டிலிருந்து வெளியூர்களுக்குத் தனியாகவும் மாநகரப் பேருந்துகள் தனியாகவும் இயக்கப்படுகின்றன.
மாநகர்ப் பேருந்துகள் நகரிலிருந்து 35 கி.மீ. தூரம் வரை இயக்கப்படுகின்றன. ஈரோடு மாநகரை ஒட்டியுள்ள நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.
ஈரோடு மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஈரோடு சோலார் பேருந்து நிலையம் தான் மாநகரின் முக்கிய போக்குவரத்துக் கேந்திரமாக விளங்குகிறது. 2014 கணக்கின்படி ஈரோட்டில் 153 மாநகரப் பேருந்துகள் மூலம் 112 வழித்த்டங்களில் தினசரி சுமார் 1,640க்கும் அதிகமான மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[1]
பேருந்து பணிமனைகள்[தொகு]
ஈரோட்டின் போக்குவரத்து பெரும்பாலும் இந்தப் பேருந்து சேவைகளின் மூலமே நடைபெறுகிறது. இதற்கென போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் கீழ்க்கண்ட பேருந்து பணிமனைகள் செயல்படுகின்றன.
- காசிபாளையம் (ஈரோடு) - 1
- பள்ளிபாளையம் (ஈரோடு) - 2
- காசிபாளையம் (ஈரோடு) - 3
- பெருந்துறை
- பவானி
- கொடுமுடி
- கரூர்
- கவுந்தப்பாடி
- அந்தியூர்
- கோபிச்செட்டிபாளையம்
- நம்பியூர்
- சத்தியமங்கலம்
- தாளவாடி
மேலும், பள்ளிப்பாளையத்தில், பேருந்து கூண்டு கட்டும் பணிமனையும் செயல்படுகிறது. இதில், காசிபாளையம்- 1, 2, பள்ளிப்பாளையம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, கவுந்தப்பாடி ஆகிய பணிமனைகளின் மூலம் மாநகர்ப் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்டுகின்றன.
மாநகர்ப் பேருந்து வழித்தடங்களின் பட்டியல்[தொகு]
மாநகரப் பேருந்து வழித்தடங்கள் [2]