கே. சி. கருப்பண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. சி. கருப்பண்ணன் (K.C.Karuppannan, பிறப்பு:ஆகத்து 20, 1957) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். பள்ளி இறுதிவரை படித்துள்ளார். இவரது தொழில் விவசாயம் மற்றும் கல்வி நிறுவனம் நடத்துதல் ஆகும்.[1] இவர் 1972இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு கிளைச் செயலாளராக அரசியல்வாழ்வைத் துவக்கினார். 2001 முதல் 2006வரை பவானி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர் பின் 2006 ஆண்டு தேர்தலில் பவானி தொகுதியில் தோல்வியுற்றார். 2011 ஆண்டு பவானி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு சட்டப்பேரவைக்கு பவானி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._கருப்பண்ணன்&oldid=2719525" இருந்து மீள்விக்கப்பட்டது