சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்
சென்னிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு |
அமைவிடம்: | இச்சிப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பெருந்துறை |
மக்களவைத் தொகுதி: | திருப்பூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | பழனியாண்டவர் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு |
இணையத்தளம்: | http://www.chennimalaitemple.tnhrce.in/ |

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும்.[1][2]
ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோயில், ஈரோட்டிலிருந்து 30 கி மீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி மீ தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி மீ தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது.
மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேஸ்வரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு சன்னதிகள் உள்ளன. நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது.
செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தில் உள்ள மணிகட்டிசடையன் கோத்திர பங்காளிகள் குலதெய்வமாக வழிபடுகிறார்கல்.
சிறப்புகள்[தொகு]
- தேவராய சுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சஷ்டி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.[3]
- இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
விழாக்கள்[தொகு]
- தைப்பூசத் தேர்த்திருவிழா
- திங்கட்கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம், அமாவாசை மற்றும் பௌர்ணமி சிறப்பு பூசை நாட்கள்
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்[தொகு]
![]() |
த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க. |
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.
- ↑ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (தண்டாயுதபாணி) திருக்கோயில்
- ↑ சஷ்டியை நோக்க சரவணபவனார்... கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை முருகன் கோயில்
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.