மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவிலுள்ள ஒரு பழமை வாயந்த முருகன் கோயில் ஆகும்.

இலங்கையில் காணப்படும் சைவ சமயத்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தர். விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டு கி. பி. 1795 ஆம் ஆண்டு ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது.