உள்ளடக்கத்துக்குச் செல்

திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் திருநெல்வேலி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவில்.

ஆலய அமைப்பு[தொகு]

இவ்வாலயம் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், ஸ்தம்ப மண்டபம், கொடி மரம், வசந்த மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, வாகனசாலை, களஞ்சிய அறை, இராஜகோபுரம், கோபுர மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விநாயகர், சந்தான கோபாலர், நாகபூசனி, முருகன், சனீஸ்வரன், துர்க்கை, பைரவர், சண்டேஸ்வரீ, காத்தவராயர் ஆகிய பரிவார மூர்த்திகளும் அவற்றிற்கான தனியான கோயில்களையும் கொண்டு விளங்குகின்றது.

ஆலய பரிபாலனமும் குருமார்களும்[தொகு]

இவ்வாலயமும் சைவக்குருமார்களின் பரிபாலனத்தில் உள்ள ஆலயங்கள் ஒன்று.