காலி ஸ்ரீ மீனாஷி சுந்தரேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலி சிவன் கோயில் என்றழைக்கப்படும் இவ்வாலயம் 1850 இருந்து சிறுவேல் ஒன்றை வழிபடு தெய்வமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தவர் கதிர்வேலாயுத சுவாமி கோயில் என்று அழைக்கப்பட்டு வந்தது. பிறகு சுமார் 1873 இல் சிற்சில திருப்பணிகள் இடம்பெற்று ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயமாக உருப்பெற்றது. 1886 மேலும் பல திருப்பணிகள் நிறைவேறி மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்த ஆண்டில்தான் தற்போதுள்ள இலிங்க மூர்த்ததை அவிமுக்த ஷேத்திரமாகிய காசியினுன்றும் கொண்டுவந்து ஸ்தாபித்தாகக் கூறுகின்றார்கள். தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் இதுதான்.

1930 முதல் ஆலயத்தை பரிபாலிக்க தர்மார்த்தா சபை நிறுவப்பட்டு ஆலயபரிபாலானம் நடைபெற்றது. 1948 இலிருந்து 1965 க்குள் ஆலய விமானங்கள் பழுதுபார்க்கபபட்டு மேலும் திருப்பணிகள் நிறைவேறி 1955ஆம் ஆண்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

உசாத்துணை[தொகு]

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்