இலங்கை ரூபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கை ரூபாய்
ශ්‍රී ලංකා රුපියල් (சிங்களம்)
Sri Lankan Rupee (ஆங்கிலம்)
ஐ.எசு.ஓ 4217
குறி LKR
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100 cents
குறியீடு රු, Rs, /=
வங்கிப் பணமுறிகள் Rs.10, Rs.20, Rs.50, Rs.100, Rs.200, Rs.500, Rs.1000, Rs.2000, Rs.5000
Coins
 Freq. used 50 cents, Rs.1, Rs.2, Rs.5, Rs.10
 Rarely used 1, 2, 5, 10, 25 cents
மக்கள்தொகையியல்
User(s) இலங்கை
Issuance
நடுவண் வங்கி இலங்கை மத்திய வங்கி
 Website www.cbsl.lk
Printer De la Rue Lanka Currency and Securities Print (Pvt) Ltd
 Website www.delarue.com
Mint ரோயல் மிண்ட்
 Website www.royalmint.com
Valuation
Inflation 19.7%
 Source இலங்கையின் பொருளாதாரம், 2007 ஆம் ஆண்டு மதிப்பீடு.

இலங்கை ரூபாய் (Sri Lankan Rupee) இலங்கையின் உத்தியோகபூர்வ நாணய அலகு ஆகும். இலங்கை மத்திய வங்கி அனேக நாடுகளிலுள்ளதை போன்றே நாணயங்களை வெளியிடும் ஏகபோக உரிமையை கொண்டது. இலங்கை ரூபாய் பொதுவாக ரூ எனறே குறிக்கப்படுவதுடன், இதன் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனக் குறியீடு (ஐ.எசு.ஓ 4217) LKR ஆகும்.

மேலோட்டம்[தொகு]

இலங்கை விடுதலையடைய முன்னர் புழக்கத்தில் இருந்த 10 சத நாணயத்தாள்.

இலங்கை ரூபாய் ஒன்று, 100 சதம் எனும் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புழக்கத்துக்கு நாணயங்களை விடும்போது அவை, ரூபாய் 10க்கு கூடிய பெறுமானம் கொண்டவையாயின் தாள் நாணயங்களாகவும், ரூபாய் 10க்கு குறைந்த பெறுமானம் கொண்டவையாயின் உலோக நாணயங்களாகவும், ரூபாய் 10 பெறுமானம் கொண்டவையாயின், இரு விதமாகவும் தயாரித்து பாவனைக்காக விடப்படுகின்றன.

உலோக நாணயங்கள் ஐக்கிய இராச்சிய நாணய வார்ப்பகத்தில் வார்க்கப்படுகின்றன. தாள் நாணயங்கள் வரையறுக்கப்பட்ட தோமஸ் டீ லா ரு கம்பனியால் அச்சிடப்படுகின்றன. தொடக்கத்தில் அளவில் பெரியதாக இருந்தாலும், இப்பொழுது அளவில் சிறியதாகவே அவை தயாரிக்கப்படுகின்றன. நாணய தயாரிப்பில் ஏற்படும் செலவை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ரூபாய் 500க்கு கூடிய பெறுமானம் கொண்ட தாள் நாணயங்கள் 1970 - 77 காலப்பகுதியில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.

வரலாறு[தொகு]

உள்ளடக்கம்[தொகு]

உலோக நாணயங்களின் தலைப்பாகத்தில் நாட்டின் பெயர், அது வெளியிடப்பட்ட ஆண்டு, நாணயத்தின் பெறுமதி என்பனவும், பூப்பாகத்தில் இலங்கையின் தேசியச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

தாள் நாணயங்களின் மேற்படி விபரங்களுக்கு மேலதிகமாக இயற்கை அழகு, பண்பாடு, வரலாறு போன்றவற்றைக் குறிக்கும் சித்திரங்கள் இரு பாகத்திலும் காணப்படுவதுடன், பூப்பாகத்தில் மத்திய வங்கியின் பெயர், கொடுப்பனவு விபரம், நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரின் கையொப்பங்களும் காணப்படுகின்றன.

இவற்றில் எண் குறியீடுகள் தவிர்ந்த ஏனையவை இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றிலும், ஆங்கில மொழியிலும் இடம் பெற்றுள்ளன. புதிதாக வெளியிடப்படும் நாணயங்களில் கண்பார்வையற்றோரின் நன்மை கருதி பிரேல் முறையிலும் பெறுமானம் பொறிக்கப்பட்டுள்ளது.

நாணயங்கள்[தொகு]

உலோக நாணயங்கள்[தொகு]

இலங்கையின் 2 ரூபாய் நாணயம்)

இலங்கையில் உலோக நாணயங்கள் தற்போழுது 1, 2, 5, 10, 25, 50 ஆகிய பெறுமானம் கொண்ட சதங்களாகவும் 1, 2, 5, 10 ஆகிய பெறுமானம் கொண்ட ரூபாய்களாகவும் வார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

இலங்கையின் 50வது விடுதலை நாளை நினைவு கூறும் வகையில் 1998-ம் ஆண்டில் 1000 ரூபாய் பெறுமானம் கொண்ட வெள்ளி நாணயங்களும், 5000 ரூபாய் பெறுமானம் கொண்ட தங்க நாணயங்களும் வெளியிடப்பட்டன.

தற்காலத்தில் 1 சதம், 2 சதம், 5 சதம், 10 சதம், 25 சதம் ஆகியன மிக மிக அரிதாகவே புழக்கத்தில் உள்ளன.

நாணய வடிவங்கள்[தொகு]

இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள உலோக நாணயங்களில் 2 சதம், 10 சதம் ஆகியவை அலை போன்ற விளிம்புடன் கூடிய வட்ட வடிவானவை. 5 சதம் வளைந்த விளிம்புடைய சதுர வடிவானது. மற்றைய சதங்களனைத்தும் வட்ட வடிவானவை. 1 ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் ஆகியவை வட்ட வடிவானவை. 5 ரூபாயும் வட்ட வடிவானபோதும், சில சமயங்களில் மட்டும் ஐங்கோண வடிவமுடையது.

வார்க்கும் உலோகங்கள்[தொகு]

இலங்கை உலோக நாணயங்கள் தங்கம், வெள்ளி, நிக்கல், செம்பு, நிக்கல்-செம்பு, பித்தளை, நிக்கல்-பித்தளை, அலுமினியம், வெண்கலம், அலுமினிய-வெண்கலம் ஆகிய பல்வேறு உலோகங்களில் வார்க்கப்பட்டன. முன்னர் கால், அரை மற்றும் ஒரு சதம் போன்ற பெறுமதி குறைவான நாணயங்கள் செப்பு உலோகத்தில் வார்க்கப்பட்டன. 10 மற்றும் 20 சத பெறுமானம் கொணட நாணயங்கள் 1920களின் இறுதிவரையிலும், 50 சத நாணயங்கள் 1942 வரையும் வெள்ளியில் வார்க்கப்பட்டன. ஆனால் தற்பொழுது 5 ரூபாய், 10 ரூபாய் தவிர்ந்த அனைத்து நாணயங்களும் பெறுமதி குறைந்த அலுமினிய உலோகத்திலேயே வார்க்கப்படுகின்றன. 5 ரூபாய் செம்பிலும், 10 ரூபாய் செம்பு-வெண்கலத்திலும் வார்க்கப்படுகின்றன.

தாள் நாணயங்கள்[தொகு]

ஐம்பது ரூபாய் தாள் நாணயம்)

இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள தாள் நாணயங்கள் 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 ஆகிய பெறுமானங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.

இலங்கையில் வெளியிடப்படும் அனைத்து தாள் நாணயங்களும்(200 ரூபாய் தவிர்ந்த) விசேடமாக பண்படுத்தப்பட்டு இரும்பு நூல் கோர்த்த காதிதத்திலேயே அச்சிடப்பட்டுகின்றன. 200 ரூபாய் நாணயம் மட்டும் விசேட பிளாஸ்டிக் தாளில் அச்சிடப்பட்டுகின்றது. இந்த பிளாஸ்டிக் நாணயம் பல பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இலங்கை தாள் நாணயங்கள் பல வர்ணங்களிலும், தலைப்பாகம் அகலவாக்கிலும் அச்சிடப்படுவது தனித்துவமான விடயங்களாகும்.


தற்போதைய நாணயமாற்று விகிதம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

இலங்கை மத்திய வங்கி
இலங்கை நாணயங்கள் பற்றிய தகவல்
இலங்கையின் உலோக நாணயங்கள்
இலங்கையின் தாள் நாணயங்கள்
பலதரப்பட்ட நாணயமாற்று விகிதங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_ரூபாய்&oldid=2224069" இருந்து மீள்விக்கப்பட்டது