சீதை அம்மன் கோவில்
Jump to navigation
Jump to search
சீதை அம்மன் கோவில் (Seetha Amman Temple) இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள சீதைக்கான ஒரு கோவிலாகும். இக்கோவில் நுவரெலியா மாவட்டத்தில் "சீதா எலிய" என்ற இடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 5 கிமீ தொலைவிலும், கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது.[1][2] இவ்விடத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் வட்ட அழுத்தங்கள் இராவணனின் யானையின் கால்தடங்கள் எனவும் கூறப்படுகிறது.