மண்டூர் கந்தசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டூர் Murukan கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

கதிர்காமம், மற்றும் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படை­யெ­டுப்­புடன் சம்­பந்­தப்­பட்­டவை என்று கொள்­ளப்­ப­டு­கின்­றன. கந்தன் படை­யெ­டுப்பு இராமாயணப் போருக்கு முற்­பட்­டது எனவும் இது கி.மு. 1800 க்கு முற்­பட்­டது எனவும் கொள்­ளப்­ப­டு­கின்­றது. சூர­பத்­மனை சங்­காரம் செய்த வேலா­னது உக்­கிரம் தாங்க முடி­யாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்­டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்­த­ல­மா­னது என்றும் மட்­டக்­க­ளப்பு தமி­ழகம், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்கள் கூறு­கின்­றன.[1]

கோவில் அமைப்பு[தொகு]

இக்கோவில் 1215-1248 காலப்பகுதியில் கட்டப்பட்டது. கோவில் அமைப்பு கதிர்காமம் போன்று அமைந்துள்ளது. வெளி முற்றத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. ஒன்று தெய்வயானைக்கும் மற்றையது வள்ளிக்கும் ஆகும். பிள்ளையார், மற்றும் நாகதம்பிரானுக்கும் கோயில்கள் உள்ளன.

வழிபாட்டு முறைகள்[தொகு]

இங்குள்ள வழிபாட்டு முறைகள் பண்டைய மற்றும் கதிர்காமத்தை ஒத்து உள்ளன.

கதிர்­கா­மத்தில் திரு­வி­ழாவின் போது புறப்­படும் சுவா­மியின் வீதி­யுலா வள்­ளி­ அம்பாள் ஆலய முன்­றலைச் சென்­ற­டையும். பின்னர் யானையின் மீதுள்ள பேழையுள் இருக்கும் ஒரு பொருளை பூசகர் (கப்புறாளை) வள்­ளி­யம்பாள் ஆல­யத்­திலும் மறைவாக எடுத்துச் செல்வார். பூசை முடிந்­ததும் மீண்டும் மறை­வாக கொண்டு வந்து பேழையுள் வைத்­ததும் ஊர்­வலம் தொடரும். தீர்த்­தத்தின் போதும் இப்பொருளே தீர்த்­த­மாட மாணிக்க கங்கையுள் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது. இதே நடைமுறை மண்­டூ­ரிலும் பின்­பற்றப் படு­கின்­றது. இங்கு யானைக்குப் பதிலாக புட்பக விமானம் எனப்­படும் தேரினுள் வைத்தே அப்பொருள் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது. மண்டூர் முருகன் ஆல­யத்தில் இருந்து புறப்­படும் சுவா­மியின் வீதி­யுலா வள்­ளி­யம்பாள் ஆலய முன்­றலை அடைந்­ததும் புட்பக விமானம் அங்­குள்ள மேடையில் வைக்­கப்­படும். கப்­பு­கனார் (பூசகர்) அதனுள் இருக்கும் பொருளை மறை­வாக வள்­ளி­யம்பாள் ஆல­யத்­தினுள் எடுத்துச் சென்று பூசை செய்த பின்னர் மீண்டும் கொண்டு வந்து வைப்பார்.[1]

தீர்த்­தத்தின் போது புட்பக விமானம் ஆல­யத்­தி­லி­ருந்து புறப்­பட்டு மட்டக்களப்பு வாவிக்­ க­ரையில் உள்ள சபா மண்­ட­பத்தை சென்­ற­டையும். கப்­பு­கனார் அதனுள் இருக்கும் பொருளை மட்­டக்­க­ளப்பு வாவியில் சீலையால் மறைக்­கப்­பட்­டி­ருக்கும் பந்தருள் எடுத்துச் சென்று தீர்த்தம் ஆடுவார்.[1]

மண்­டூரில் பண்­டைய காலத்தில் கதிர்­காமம் போன்று தீ மிதிப்பும் இடம்­பெற்­றுள்­ளது. முத­லியார் எஸ். ஓ. கன­க­ரெத்­தினம் மட்­டக்­க­ளப்பு பற்றி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. திரு­வி­ழாவை ஆரம்­பிப்­ப­தற்­கான முதல் நிகழ்­வாக மாலையில் வீதி­யுலா வரும் பாதை­களில் சாட்­டை­யடி வீரர்கள் சாட்டை அடிப்பார். வெளிச்சம் இல்­லாத காலத்தில் காட்­டினுள் ஆலயம் இருந்­த­போது அரு­கி­லுள்ள மிரு­கங்­களை கலைப்­ப­தற்­காக சாட்டை அடிக்­கப்­பட்­டது. திருவிழாவின் போது மாலையில் ஆல­யத்தைச் சுற்றி சங்கு ஊதி சேகண்டி அடிப்­பது வழக்­க­மாகும். கம்­பி­களில் சீலையைச் சுற்றி தேங்காய் எண்­ணெயில் நனைத்து இங்கு இன்றும் ஒளியூட்டப்படுகின்றது.[1]

மேலும் வாசிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 கதிர்காமமும் - மண்டூரும், ஓர் ஒப்பு நோக்கு, இ. பாக்கியராஜன், வீரகேசரி ஆகத்து 11, 2013