கண்டி செல்வ விநாயகர் ஆலயம்
கண்டி செல்வ விநாயகர் ஆலயம் கண்டியில், கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான சாலையில் கண்டி நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இது கட்டுக்கலை பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.[1]
விழாக்கள்[தொகு]
இங்கு பங்குனி உத்தரத்தில் முடிவடையும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். தீர்த்தோற்சவம் தன்னகும்புர மகாவலி கங்கையில் நடைபெறுவதோடு அதே தினத்தன்று மாலை திருக்கல்யாணத் திருவிழாவும் கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறும். தேர்த்திருவிழா அன்று பஞ்சரத பவனி கண்டி நகர் வீதிகள் வழியாக வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கண்டியில் வருடாவருடம் ஆடி மாதத்தில் நடைபெறும் பெரஹர வின் போது திய கப்பன மங்கல்யய என்று சிங்களத்தில் கூறப்படும் (ஆங்கிலம்: Water cutting ceremony) தீர்த்த வைபவம் முடிந்தபின் ஊர்வலம் திரும்பிச் செல்லும்போது கட்டுக்கலை பிள்ளையார் ஆலயத்தில் தரித்து, சில கிரியைகள் நடைபெறும்.[2]
இந்த ஆலய விழாக்களுக்கு மத்திய மாகாண இந்து சங்கம் (ஆங்கிலம்: Central Province Hindu Association) உதவி வருகிறது.[3]
உசாத்துணைகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kandy Pillaiyar Kovil". 2013-12-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Final Maha Randoli Perahera today
- ↑ "Central Province Hindu Assn preserves cultural heritage". 2013-04-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-22 அன்று பார்க்கப்பட்டது.