உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத் திருக்கோவில்கள் தொடர்பான இந்து சமய அறநிலையத் துறைத் தரவுகளைக் கொண்டு கலைக்களஞ்சிய முறைமைக்கு ஏற்ப தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டமாகும். இக்கட்டுரைகள் அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழக முயற்சியால் சுமார் 12500 கட்டுரைகள் NeechalBOT தானியங்கிக் கணக்கால் உருவாக்கப்படுகிறது.

திட்டத்தின் நிலை

[தொகு]
  • தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா கூட்டுச் செயல்பாடுகளின் விழைவாக இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அரசால் தரக்கூடிய சிறந்த வடிவம் தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில் சுமார் 38800 கோவில்/அறக்கட்டளை/மடம் சார்ந்த அரசுத் தரவுகள் பன்னிரண்டு எக்சல் கோப்பில், ஔவையார் எழுத்துருவில் மார்ச் 11 அன்று கிடைத்தன. இவையனைத்தும் ஓவன் நுட்பத்தால் ஒருங்குறியாக மாற்றப்பட்டு விக்கிப்பீடியாவில் மாதிரிக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியச் சமூக ஒப்புதலுக்காகத் தற்போது விவாதிக்கப்பட்டுவருகிறது.

அரசு மாதிரித் தரவுகள் மாதிரிக் கட்டுரை ஒன்று

  • வாக்கெடுப்பு நிறைவுற்று சொற்பட்டியல் பிழை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சொற்பட்டியல் பிழை திருத்தம்

[தொகு]

தமிழகக் கோவில்கள் தானியக்கத் திட்டம் தொடர்பான 33 சொற்பட்டியல்கள் இப்பகுப்பில் உள்ளன. இவற்றை அனைவரும் முன்னுரிமை தந்து திருத்தித் தர வேண்டுகிறேன். பட்டியலாக இருக்கும் போதே திருத்த முடியாவிட்டால், இவை கட்டுரைகளில் இடம் பெற்ற பின் கவனித்துத் திருத்துவது மிகவும் சிரமமானது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

ஒவ்வொரு முறை மாற்றுச் சொற்களைத் தந்து சேமிக்கும் போதும், உறுதியாக ஏற்புடைய சொற்களின் வரிசைகளை நீக்கி விடுங்கள். இதனால் ஒவ்வொரு முறையும் பட்டியல் சிறிதாகிக் கொண்டே வந்து கவனம் குவிக்கவும் பிறகு ஒன்று திரட்டி உரையாடவும் உதவும். எடுத்துக்காட்டுக்கு, இந்த மாற்றத்தைக் காணுங்கள். சில ஊர் பெயர்கள், சொற்கள் ஏற்புடையன போல தோன்றும். ஆனால், சிறு பிழை இருக்கக் கூடும். எனவே, கவனித்து உறுதிப்படுத்தி நீக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, கீழ்வேளுர் தவறு. கீழ்வேளூர் சரி. விருத்தாசலம் புழக்கத்தில் உள்ளது. ஆனால், முதன்மைக் கட்டுரை விருத்தாச்சலம் என்றே உள்ளது.--இரவி (பேச்சு) 14:47, 26 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

வரும் செப்தம்பர் 30 தமிழ் விக்கிப்பீடியாவின் பிறந்த நாளுக்கு முன் இத்தானியக்கப் பணியை முடிக்க முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 14:47, 26 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கடந்த வாரம் இது தொடர்பான தொடர் தொகுப்பு நிகழ்வின் போது, இவ்வாறு பல்லாயிரக்கணக்கான சொற்களுக்கு அட்டவணையை மட்டும் பார்த்து மாற்றுச் சொற்களைப் பரிந்துரைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று உணர்ந்தோம். எனவே, 30 முறைக்கு மேல் பயன்படும் சொற்களில் பிழையாக இருக்கக்கூடியனவற்றுக்கு மட்டும் மாற்றுச் சொற்களைப் பரிந்துரைத்துள்ளோம். தமிழ் விக்கிப்பீடியா நடைப் படி ஒவ்வொரு சொல்லுக்கும் மாற்றுச் சொல் பரிந்துரைப்பதும் இணக்க முடிவு காண்பதும் தற்போதைய நிலையில் சிரமமானது. எனவே, கட்டுரைப் பதிவேற்றத்துக்குப் பிறகு AWB துணை கொண்டு உரிய சொற்ககளை மாற்றலாம். --இரவி (பேச்சு) 12:22, 21 பெப்ரவரி 2017 (UTC)