உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

--Editor sandy erode (பேச்சு) 08:04, 4 மே 2016 (UTC)த.இ.க.வின் உதவியுடன் இந்து அறநிலையத் துறையிடமிருந்து சுமார் 38800 திருக்கோவில்/மடம்/அறக்கட்டளைகள் தொடர்பான தரவுகள் கிடைத்துள்ளன. அவற்றின் மாதிரித் தரவுகள் இங்கே உள்ளன. தற்போது என்னிடமுள்ள சீர்செய்யப்பட்ட தரவுகள் மொத்தமாக இங்கே உள்ளன(அணுக்கம் வேண்டின் தொடர்பு கொள்க). த.இ.க.வில் இத்தரவுகள் விரைவில் பொதுவுரிமத்தில் வெளியாகவுள்ளன. அதன்பின்னர் சமூக ஒப்புதலுக்குப் பின்னர் கட்டுரையை ஏற்றலாம்.[பதிலளி]

 • தரவுகள் சரியாக இருக்கும் அனைத்துக் கோவில்களையும் குறிப்பிடத்தக்கவையாகக் கொள்ளலாம் என்கின்றனர்.
 • ஊராட்சிக்கட்டுரைகள் போல இக்கோவில் கட்டுரைகளைத் தொடர் தானியங்கி இற்றைக்குட்படுத்த வேண்டியதில்லை என்பதால் முன்பு போல மாறிலிகள், குறிச்சொற்கள் தேவையில்லை. முதல்முறை தானியக்கக் கட்டுரை மட்டுமே என்று கொள்ளலாம்.
 • மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஏற்ப மாதிரிக் கட்டுரையை மாற்றிக் கொள்ளலாம்.
 • அரசுத் தரவுகளில் தமிழக ஊராட்சிகள் போலவே எழுத்துப்பிழைகள் உள்ளன. கூடுமானவரை சிறந்த நுட்பத்தைக் கொண்டு தானியக்கத்தில் பிழைகள் நீக்கப்பட்டு, கட்டுரையாக்கலாம்.
 • ஒரே கோவிலுக்கு இரண்டு வெவ்வேறு தரவுகள் உள்ளன. உதா:"அருள்மிகு விக்டோபா திருக்கோயில்,லோயர் பஜார், உதகை, நீலகிரி" இவ்வகை தரவுகளைக் கட்டுரையாக்காமல் இறுதியாக மறு ஆய்விற்கு விட்டுவிடலாம்.
 • தலைப்பிடல் முறையை இறுதி செய்ய வேண்டும். அரசு ஆவணம் என்பதால் கோவில்களின் முதன்மைப் பெயராக இதனைக் கொள்ளலாம் என்கின்றனர். மாதிரிக் கட்டுரையில் இருப்பதைப் போல வைத்தியநாதர் என்பதை வைத்தியநாதசுவாமி என்று முதன்மை பெயராக்கலாம் மற்றவை வழிமாற்றியாகக் கொள்ளலாம். ஊர்ப் பெயரும் தலைப்பில் இருப்பது பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கும்.
 • அரசுத் தரவுகளின்படி அனைத்துப் பிரிவிலும் தகவல்கள் இருப்பதில்லை. தரவில்லாத பிரிவுகளை வாக்கியமாக்காமல் தவிர்க்கலாம். உதாரணம்: வரலாறு இருந்தால் மட்டும் அதுதொடர்பான வரிகள் அக்கட்டுரையில் இடம்பெறவேண்டும். சராசரியான தகவல்களின் அடிப்படையில் முதல் மாதிரிக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
 • விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ள அறநிலையத்துறை வசமுள்ள கோவில் கட்டுரைகளைத் தவிர்த்து எழுதவேண்டும். தானியக்கத்தில் இதனைச் சோதிக்கமுயலலாம்.
 • NeechalBOT கணக்கின்வழியாகக் கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் நுட்பத்திலேயே தானியங்கியை ஏவலாம். அல்லது ஆர்வமுள்ள பிறரும் தானியங்கியை இயக்கலாம்.
 • இதுதொடர்பான மற்றும் இதர ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:13, 30 மார்ச் 2016 (UTC)

நீச்சல்காரன், முதலில் இதற்கான உங்கள் உழைப்புக்கும் சிறப்பாக உருவாக்கியுள்ள கருவிகளுக்கும் நன்றி. ஏற்கனவே தானியங்கிக் கட்டுரையாக்கம் தொடர்பான கொள்கை உரையாடல் புரிந்துணர்வின்படி, NeechalBOT கணக்கின்வழியாகக் கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் நுட்பத்திலேயே தானியங்கியை ஏவலாம். கட்டுரைகளைப் பதிவேற்ற உதவி தேவைப்பட்டால் இன்னும் பலர் இணைந்து செயற்படலாம். செப்பனிட்ட தரவுகளை pdf வடிவில் மட்டுமின்றி திறந்த மூலமாக அணுகும் வகையில் ஒரு தரவுத் தளத்தில் இட்டு வைப்பது நன்மை பயக்கும். இது தொடர்பாக இன்னும் பலர் இணைந்து செயற்பட முடியுமா என்று பார்ப்போம். கவனிக்க - @Tshrinivasan:

//தரவுகள் சரியாக இருக்கும் அனைத்துக் கோவில்களையும் குறிப்பிடத்தக்கவையாகக் கொள்ளலாம்// இத்தனைக் கோயில்களுக்கு உடனடியாக தரவுகளைச் சரி பார்ப்பதற்கான மாற்று மூலங்கள் உள்ளனவா என்பது ஐயமே. மாதிரிக்குச் சில (நூறு) கோயில்களைச் சரி பார்ப்பது இயலும். தரவுகள் இருப்பவை அனைத்தும் குறிப்பிடத்தக்கவை அல்ல. குறிப்பிடத்தக்கமை குறித்த உரையாடலை தனி இழையில் தொடர்வோம். கோயிலின் பழமை, அதாவது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது, என்பது ஒரு முக்கிய புறவயமான அளவுகோலாக இருக்கலாம்.--இரவி (பேச்சு) 15:39, 30 மார்ச் 2016 (UTC)

தேவைப்பட்டால் என்னாலும் உங்களுக்கு உதவ முடியும் நீச்சல்காரன். இங்கே அணுக்கம் தேவைப்படுகிறது. நன்றி-- மாதவன்  ( பேச்சு ) 10:43, 31 மார்ச் 2016 (UTC)

இற்றை[தொகு]

சீர் செய்யப்பட்ட இந்து அறநிலையத்துறை தரவுகள் த.இ.க. தளத்தில் பொதுவுரிமத்தில் வெளிவந்துள்ளது. [1] அதிகபட்ச தகவல்கொண்ட ஒரு கோவிலும், குறைந்தபட்ச தகவல்கொண்ட ஒரு கோவிலும் தற்போதைக்கு மாதிரிக் கட்டுரையாகவுள்ளது. நாளை இன்னும் பல மாதிரிக் கட்டுரையைத் தானியங்கியால் ஏவுகிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 07:57, 15 ஏப்ரல் 2016 (UTC)

மாதிரி கட்டுரையின் அமைப்பு நன்றாகவே உள்ளது; ஒரு வாக்கெடுப்பை நடத்தி 38,800 கட்டுரைகளையும் ஏற்றலாமே!.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:01, 4 மே 2016 (UTC)[பதிலளி]
திருக்கோயில்கள் வெறும் வழிபாட்டு இடம் மட்டுமல்ல; அவை காலத்தின் அடையாளம், மனிதனின் வாழ்வியலை கடந்தகாலச் சமூக நிலைப்பாட்டில் கண்டெடுக்கும் / உணரவைக்கும் அடையாளம். தத்துவ ஆராய்ச்சி, கால வரிசையில் தமிழனின் கலை நுட்பம், அரசுகள் (வழங்கிய கொடை) நிலை ஆகியன குறித்த ஆராய்ச்சிகளுக்கு இவை பயனுள்ளதாக அமையும். வாக்கெடுப்பு நடத்தி இவற்றை விக்கியில் தரவேற்றம் செய்யலாமே.
கட்டுரை குறித்தான தரவு சரியாகவே உள்ளது. வாக்கெடுப்பை நடத்தி 38,800 கட்டுரைகளை தரவேற்றம் செய்யலாம். இது போன்ற கட்டுரைகள் வாயிலாக தமிழகத்தை குறித்தும், தமிழ்ப் பண்பாடு குறித்தும் அறிய இந்த திருக்கோயில் விக்கி கட்டுரைகள் வழிவகை செய்யும், இதனால் தமிழ் விக்கியில் அதிக பயனர்கள் பயன்பெற வழிவகை செய்யும். --சிவ. தினகரன் (பேச்சு) 07:34, 4 மே 2016 (UTC)[பதிலளி]
திருக்கோயில்கள் குறித்த தரவு தமிழுக்கு அணி சேர்க்கும் ஒன்றாகும். விக்கியில் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்தம் கோயில்களின் தரவுகள் ஏற்றப்படவேண்டும். 38,800 கட்டுரைகள் என்பது வியப்பான ஒன்றாகும். இக்கட்டுரைகளை உடனடியாகத் தரவேற்றம் செய்வது மக்களுக்கு பெரிய அளவில் உதவும். எனவே, ஒரு வாக்கெடுப்பை நிகழ்த்தி தமிழகத் திருக்கோயில் தரவுகளை ஏற்றலாம்.--Bodhi Gowtham (பேச்சு) 07:44, 4 மே 2016 (UTC)[பதிலளி]
மேற்கோள் அல்லது உசாத்துணையையும் ஒவ்வொரு கட்டுரையிலும் சேருங்கள். பகுப்பு:தமிழ்நாட்டுக் கோயில்கள் என்ற தாய்ப் பகுப்பிலுள்ள துணைப் பகுப்புகளுக்கேற்ப பகுப்புகள் சேர்க்க வேண்டும். இல்லாதவிடத்து புதிய உப பகுப்புகள் அதே வடிவில் சேர்க்க வேண்டும். தாய்ப் பகுப்பை ஒவ்வொரு கோயிலின் கட்டுரையிலும் சேர்க்காதீர்கள்.--Kanags \உரையாடுக 07:49, 4 மே 2016 (UTC)[பதிலளி]
@Kanags சொல்வதுபோல் பகுப்புகள் மிகத்தேவையான ஒன்று. 38,800 கட்டுரைகளையும் விக்கியில் சேர்த்தால் என்னிடமுள்ள பல திருக்கோயில்களின் ஒளிப்படங்களை ஏற்ற ஏதுவாக இருக்கும். கோயில் கட்டுரைகள் தமிழுக்கு தேவைப்படும் ஒன்றாகும்.--சுதர்சன்கிருஷ்ணன் (பேச்சு) 07:53, 4 மே 2016 (UTC)[பதிலளி]


அணைவரும் கூறுவது போல் இந்த 38,800 கட்டுரைகளையும் விக்கியில் சேர்த்தால் அனைவருக்கும் மிகவும் பயன் அளிபதாக இருக்கும். கோயில் கட்டுரைகள் மிகவும் அவசியமானது. என்னும் எனது கருத்து மிகவும் சரியாகும்--Editor sandy erode (பேச்சு) 08:04, 4 மே 2016 (UTC)[பதிலளி]

@kanags தமிழ கோயில்கள் குறித்து நிறைவான செரிவான சான்றுகளும் உசாத்துணைகளும் உள்ளன. திருக்கோயில்கள் கட்டுரை முழுவதும் விக்கியில் தரவேற்றம் செய்யப்பட்டால் சான்றாவணங்களை இணைக்கும் பணிகளை மிக எளிதில் செய்யலாம். --சிவ. தினகரன் (பேச்சு) 08:03, 4 மே 2016 (UTC)[பதிலளி]

தமிழகக் கோயில்கள் தனிச் சிறப்பும், தொன்மையும் வாய்ந்தவை. அவற்றைப் பற்றிய கட்டுரைகளை விக்கியில் சேர்த்தால் பந்நாடுகளில் வாழும் தமிழர்கள் அறிய உதவியாக இருக்கும். உலகில் எந்தப் பகுதியிலும் எந்த இனத்திற்கும், என்ன மொழி பேசுவோருக்கும் இத்தனையாயிரம் கோயில்களும் அவற்றின் தனிச்சிறப்பும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அக்கட்டுரைகள் சேர்க்கப்படுகிற பொழுது விக்கிப் பீடியாவே தனிக் கவனம் பெறும்.--Popurushothaman (பேச்சு) 09:27, 4 மே 2016 (UTC)[பதிலளி]

@Popurushothaman தமிழக அரசுச்சின்னத்தில் கோயில் படத்தை நீக்கிவிட்டு தமிழக வரலாறை எப்படி எழுத முடியாதோ அது போலவே தமிழக ஆலயங்களை தவிர்த்துவிட்டு தமிழ வரலாற்றை பாரக்க இயலாது ஏனெனில் ஒவ்வொரு ஆலயமும் அந்தந்த பகுதி மக்களின் சமூக, இன வரைவியல், பண்பாட்டு மெய்யியல் மற்றும் குடிமை வரலாற்றோடு தொடர்புடையதாக இருக்கிறது. எனவே தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள தமிழர் சார்ந்த சமய மரபுகளை ஆவணப்படுத்துவதின் தேவையை உணர்த்தும் தமிழ் விக்கி திருக்கோயில்கள் கட்டுரைகள் மக்கள் மரபுகளை ஆவணப்படுத்துவதற்கான அடிப்படை தொடக்கமாகும்--சிவ. தினகரன் (பேச்சு) 11:01, 4 மே 2016 (UTC)[பதிலளி]
@kanags இலங்கையில் இருக்கும் கோயில்கள் பற்றியான தரவுகள் தங்களிடம் உசாத்துணையுடன் இருப்பின் நீங்களும் பதிவேற்றம் செய்தல் நலம். கோயிலுக்குள்ளும் மொழி வரலாறு நிறைந்திருக்கிறது என்பது உண்மை--சிவ. தினகரன் (பேச்சு) 11:04, 4 மே 2016 (UTC)[பதிலளி]
கோயில்கள் அது சிறியனவோ பெரியனவோ அனைத்தும் பற்றி கட்டுரை எழுதுவது பற்றி எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் ஒரே நேரத்தில் தரவேற்றும் போது அவை ஆரம்பத்திலேயே அனேகமான அடிப்படைத் தகவல்களை உள்வாங்கி தரவேற்றப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பல்லாயிரக்கணக்கான் கட்டுரைகளைத் தரவேற்றி விட்டு ஒவ்வொன்றாகத் திருத்துவதற்கு பெருமளவு மனித உழைப்புத் தேவை.--Kanags \உரையாடுக 11:11, 4 மே 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:50, 4 மே 2016 (UTC)[பதிலளி]

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. வாக்கெடுப்பு என்பது தானியக்கக் கட்டுரை ஏற்ற நடைமுறையின் ஒரு பகுதி மட்டுமே. கோயில் கட்டுரைகளை ஏற்றுவதற்குப் பொதுவான இணக்கப்பாடு இருப்பதாகவே தோன்றுகிறது. வாக்கெடுப்பில் முழு ஆதரவு பெற்றாலும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை ஏற்றுவதற்கு முன் முதல் தொகுப்பிலேயே முடிந்த அளவு விக்கியாக்கம் உட்பட அனைத்து விசயங்களையும் கவனித்து, பல மாதிரிக் கட்டுரைகளை உருவாக்கி, கருத்துகளுக்கு ஏற்ப திருத்தி முன்னகர்வது நன்று. பகுப்பு உருவாக்கம் பற்றிய Kanags கருத்தையும் இங்கு நான் கூறியுள்ள கருத்துகளையும் @Neechalkaran: கவனிக்க வேண்டுகிறேன். கோயில்களின் வகை, தரவுகளின் இருப்புக்கு ஏற்ப இன்னும் பல மாதிரிக் கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 15:10, 5 மே 2016 (UTC)[பதிலளி]

தானியக்கத்திட்டம்[தொகு]

இதுவரை காலதாமதம் ஏற்படுத்திய ஐ.பி. நுட்பச்சிக்கல் நேற்றுடன் தீர்வுகண்டுவிட்டது. இனி கோவில் கட்டுரைகளைப் பதிவேறுவதற்குத் தானியங்கி தயாராக உள்ளது. "அருள்மிகு" என்ற அடைமொழியின்றி ஊர்ப்பெயர் + கோவில் பெயர் என்பது தலைப்பிடல் முறையாகக் கொண்டுள்ளது. அரசுத்தரவு என்பதால் ஒருங்குறி சிக்கலைத் தவிர மற்ற பெயர்களுக்குத் தலைப்பை மாற்ற வேண்டியதில்லை. ஒவ்வொரு கட்டுரை பதிவாகும் முன்னர் opensearch ஏ.பி.ஐ. மூலம் இத்தானியங்கி சுயமாகத் தேடல் செய்து அக்கட்டுரை ஏற்கனவே இல்லை என்பதை உறுதி செய்யும். சந்தேகிப்பவற்றை எனது பார்வையில் உறுதி செய்வேன். இப்படி ஒரே கோவில்கள் மீண்டும் வருவதைத் தவிர்க்கலாம். திருவிழாக்கள், ஆழ்வார்கள், ஆகமம் என அனைத்து குறிச்சொற்களுக்கு உள்ளிணைப்பு தரமுடியாவிட்டாலும் இயன்றவரை இச்சொற்களுக்கு உள்ளிணைப்பு தரப்படும். மாதிரிக்கட்டுரைகள் இங்கே உள்ளன. கோவில்கள் மாவட்டம்வாரியாகவும், பெருந்தெய்வம்வாரியாகவும் பகுப்புகள் படிப்படியாக உருவாக்கப்படும். இக்கட்டுரைகளுக்கான அடிப்படை வார்ப்புரு திருக்கோவில்2 இருந்தாலும் கொஞ்சம் இயல்மொழிபகுப்பாய்விற்குட்பட்டு ஒருமை, பன்மை பிழையின்றி கட்டுரை உருவாகும். ஊராட்சிக் கட்டுரை போல எதிர்கால இற்றை இவற்றிற்குத் தேவையில்லை என்பதால் எந்தக் தானியக்கக்குறிச்சொல்லும் கட்டுரையில் இருக்காது, பயனர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம். கட்டுரைகளின் கீழே மாவட்டத்து இதரபெருந்தெய்வம்வாரியான கோவில் பட்டியல்கொண்ட வார்ப்புருவும் இணைக்கப்படும். பயர்பாக்ஸ் உலாவியில் மேற்கோள் பக்க முகவரியில் வழு வருகிறது, தானியக்கம் தொடங்கும் முன்னர் த.இ.க. இணையத்தளத்தில் இவ்வழுவை நீக்குகிறேன்.

வாக்கெடுப்பு[தொகு]

இத்தானியக்கத்தை தமிழ் விக்கிப்பீடியா சார்பாக NeechalBOT வழியாக இயக்க அனுமதியைக் கோருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 07:23, 8 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

 1. மதனாகரன் (பேச்சு) 13:13, 8 சூன் 2016 (UTC)[பதிலளி]
 2. தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 07:23, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 3. சிவ. தினகரன் (பேச்சு) 07:38, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 4. போதி கௌதம் (பேச்சு) 07:45, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 5. புருசோத்தமன் போத்தி (பேச்சு) 07:59, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 6. வித்யா தருண். இரா (பேச்சு) 08:13, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 7. --Skumaran2005 (பேச்சு) 08:24, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 8. சசிகலா கோ (பேச்சு)
 9.  மாதவன்  ( பேச்சு ) 12:59, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 10. --மணியன் (பேச்சு) 13:03, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 11. --அருளரசன் (பேச்சு) Arulghsr (பேச்சு) 14:25, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 12. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:44, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 13. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:02, 18 சூலை 2016 (UTC)[பதிலளி]
 14. பகுதி பகுதியாகவும் 100,000ஆவது கட்டுரையாக்கத்திற்கு இடைவெளி விட்டும் பதிவேற்ற ஆதரவளிக்கின்றேன். --சிவகோசரன் (பேச்சு) 07:30, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]
 15. --உழவன் (உரை) 11:56, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]
 16. --Kanags \உரையாடுக 06:14, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]
 17. --நந்தகுமார் (பேச்சு) 08:46, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு[தொகு]

நடுநிலை[தொகு]

கருத்துகள்[தொகு]

 1. தமிழகத் திருக்கோவில்கள் குறித்த தானியங்கிக் கட்டுரையாக்கம் இணையப்பரப்பில் தமிழை வலுவாக்கமு என்பதில் ஐயமில்லை. இப்பணி தமிழகத் திருக்கோவில்கள் குறித்து நல்லதொரு ஆவணவாக்கத்தின் கூரிய முனைப்பாகும். --Thamizhpparithi Maari (பேச்சு) 07:29, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 2. கோயில்கள் வரலாற்று சின்னங்கள். வரலாற்று சின்னங்களை கொண்டே ஒரு மொழி, இனம், தொன்மை அளவிடப்படும். எனவே இக்கட்டுரைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தேவையான ஒன்று. கட்டுரைகளை தரவேற்றம் செய்யப்பட வேண்டும். --சிவ. தினகரன் (பேச்சு) 07:42, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 3. தமிழகத் திருக்கோவில்களை தமிழ் விக்கிப்பீடியாவில் தன்னியக்கமாகத் தரவேற்றுவது தமிழ் உள்ளடக்க முனைப்பின் சிறப்பானப் பணியாகும், இப்பணியில் ஈடுபட்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.--Bodhi Gowtham (பேச்சு) 07:49, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 4. கோயில்கள் தொடர்பான கட்டுரைகளைப் பதிவேற்ற கொள்கை அளவில் ஆதரவு உண்டு. ஆனால், தானியக்கமாக ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் பதிவேற்றும் நிலைக்கு நகரும் முன் இன்னும் சில மேம்பாடுகளைச் செய்ய வேண்டி உள்ளது. இங்கு உள்ள கருத்தைகளைக் கவனித்து மற்ற பயனர்கள் மேம்பாடுகளையும் கருத்துகளையும் அளிக்க நேரம் வேண்டும். இம்மாற்றங்களைச் செயற்படுத்திய பின் தொடர்ந்து 50, 100, 500 என்று இடைவெளி விட்டு கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டும். அப்போது புதிய கட்டுரைகளில் வரும் பல்வேறு வகையான பிழைகளையும் கவனித்துத் திருத்தி அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். --இரவி (பேச்சு) 07:55, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
  👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 13:08, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 5. கோயில்களுக்கான புற இணைப்புகளை அளிப்பதின் வாயிலாகர, ஒவ்வொரு கோயில் குறித்தும் கூடுதல் தகவல்களை பெற வாய்ப்பாக அமையும்.--Purushothaman Pothi (பேச்சு) 08:03, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 6. கோயில்கள் சார்ந்த ஒளிப்படங்களும் காணொலிகளும் பக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.--வித்யா தருண். இரா (பேச்சு) 08:15, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
 7. //50, 100, 500 என்று இடைவெளி விட்டு கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டும்.// ஆம், அல்லது இடவாரியாகப் பதிவேற்றலாம். ஒரு தொகுதி முடிந்ததும் நிறுத்திவிட்டு, மதிப்பிடுதல் அவசியம். கட்டுரை எண்ணிக்கை 99,900 ஐ அண்மித்ததும் நிறுத்திவிட்டு 100,000 கட்டுரை உருவாக்குபவரை ஊக்குவிக்கலாம். --AntanO 08:24, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
  👍 விருப்பம் கடைசி நூறுக்கு போட்டி கூட வைக்கலாம் ! --மணியன் (பேச்சு) 13:06, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]
  👍 விருப்பம் - பகுதி பகுதியாகவும், 100,000ஆவது கட்டுரைக்கு இடைவெளி அளித்தும் பதிவேற்றலாம். --சிவகோசரன் (பேச்சு) 07:28, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]
  👍 விருப்பம் - 99,000 எண்ணிக்கையுடன் பதிவேற்றலை இடை நிறுத்தி விடலாம்.--Kanags \உரையாடுக 01:25, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]
 8. த. இ. க. அளித்த மூலத்தரவை அனைவரும் பார்க்க வழிசெய்ய இயலுமா? அப்பொழுதே நீச்சல்காரன் உழைப்பை/மேம்பாட்டை உணரமுடியும். நீச்சலார் அளித்த இரண்டு மாதிரி கட்டுரைகளும் சிறப்பாகவே உள்ளன. வித்யா கூறியது போல, நிழற்படங்கள், நிகழ்படங்கள் இணைப்புக்கான விக்கிநுட்பத்தை இப்பொழுதே இணைக்கக் கோருகிறேன். படம் பொதுவகத்தில் இல்லையென்றால், இங்கு தெரியாது. ஊடகங்கள், பொதுவகத்தில் ஏற்றம் அடையும் போது, இங்கு தானாகவேத் தெரியும். அதற்குரிய மாதிரியை விக்கிமூலத்தில் மதனாவும், நானும் 4, 5 மாதங்களுக்கு முன்னமே செய்துள்ளோம். காண்கs:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1({{#ifexist:Media:{{PAGENAME}}.pdf|[[படிமம்:{{PAGENAME}}.pdf|150px]]|}}) ஒன்றிற்கு மேற்பட்ட படங்கள் தரப்பட்டால் அவற்றை காட்சியக அடிப்படையில் இணைத்து விடலாம். இப்பொழுது அத்தேவை இல்லையென்றே எண்ணுகிறேன். இரு மாதிரிகள் உள்ளதால் இரு தொகுதிகளாக பிரித்து ஆயிர கணக்கில் பதிவேற்றலாம். இதில் விருப்பம் இல்லாதவர், நீச்சலாரிடம் இருந்து 50, 100, 500 என பெற்றுக் கொண்டு, செய்து காட்டக் கோருகிறேன்.. பதிவேற்றிய பிறகு விக்கி தானூலாவி கொண்டு திருத்துதல் எளிது. அதற்கு தேதி அடிப்படையில் பகுப்புகள் இட்டால், அதை அக்கருவி வழியே மீட்டெடுத்து மேம்படுத்த உதவும். பைவிக்கிதானியங்கி, இப்பொழுது விக்கிவழங்கியிலேயேஅமைத்துவிட்டதால், எத்தடையும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் மேம்படுத்துவது மிக மிக எளிது. ஒரு தரமான கட்டுரை வளர்ச்சி என்பது ஓரிரு பதிவுகளில், எம்மொழியிலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பதிவேற்றிய பின், அவ்வப்போது மேம்படுத்துதல் எளிதே. எனவே, வேறு உதவிகள் தேவைப்படின், உடன் உதவ மிக ஆவலாக உள்ளேன். வணக்கம்---- உழவன் (உரை) 12:34, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]
  //இரு தொகுதிகளாக பிரித்து ஆயிர கணக்கில் பதிவேற்றலாம். இதில் விருப்பம் இல்லாதவர், நீச்சலாரிடம் இருந்து 50, 100, 500 என பெற்றுக் கொண்டு, செய்து காட்டக் கோருகிறேன்.// இது தேவையற்ற பேச்சு. ஆயிரக்கணக்கில் முதல் தொகுதியில் பதிவேற்றினால் யார் சரிபார்ப்பது? தற்போது எத்தனை பேர் சுற்றுக்காவல் செய்கிறீர்கள்? --AntanO 02:15, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]
 9. ஊராட்சிக் கட்டுரைகள் போலல்லாமல், கோயில்கள் கட்டுரைகளில் மாறிச் சரங்கள் இல்லாதிருக்க வேண்டும். ஊராட்சிக் கட்டுரைகளில் மாறிச் சரங்கள் உள்ளதால் அவற்றைத் திருத்துவது அல்லது மேம்படுத்துவது வெகு சிரமமாக உள்ளது. மாறிச் சரங்கள் கட்டாயம் தேவை என நீங்கள் கருதினால், இத்திட்டத்துக்கு எனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.--Kanags \உரையாடுக 01:32, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]
ஊராட்சியைப் பற்றி தகவல்கள் இற்றை செய்வதற்காக அம்முறை பயன்படுத்தினோம், எதிர்காலத்தில் அவற்றை விக்கித்தரவு வழியாக இணைத்து மாறிச் சரங்களை நீக்கவேண்டும் என்பதே திட்டம். இக்கோவில்களுக்கு அவ்வாறு எதுவும் தேவையும் இல்லை. சாதாரணக் கட்டுரை போலவே இருக்கும்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:12, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]
நன்றி நீச்சல்காரன்.--Kanags \உரையாடுக 06:15, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]

//த. இ. க. அளித்த மூலத்தரவை அனைவரும் பார்க்க வழிசெய்ய இயலுமா? அப்பொழுதே நீச்சல்காரன் உழைப்பை/மேம்பாட்டை உணரமுடியும்.//

ஆம், இத்திட்டத்துக்கு மட்டுமன்று ஏற்கனவே செய்த தமிழக ஊராட்சிகள் திட்டத்துக்கும் அனைத்துப் பணி நிலைகள், திட்டமிடலையும் ஆவணப்படுத்துமாறு ஏற்கனவே கோரி உள்ளோம். அதன் மூலம் பலரும் இத்தகைய பணிகளைக் கற்றுக் கொண்டு இணைந்து செயற்பட முடியும்.

//நீச்சலார் அளித்த இரண்டு மாதிரி கட்டுரைகளும் சிறப்பாகவே உள்ளன. //

ஊராட்சிகள், ஊர்கள் தொடர்பான கட்டுரைகளில் ஊர் பெயர்களும் தரவு எண்களும் மட்டும் தான் மாறும். ஒரே ஒரு மாதிரிக் கட்டுரையை உருவாக்கினாலு் போதும். ஆனால், இங்கு ஒவ்வொரு கோயிலுக்கும் வெவ்வேறு தரவுகள் உள்ளன. அவை எண்களாக மட்டும் அல்லாமல் பல்வேறு சொற்கள், சொற்றொடர் அமைப்புகள் கொண்டவையாக உள்ளன. இவற்றின் பல்வேறு வரிசை மாற்றங்கள், சேர்வுகளைக் காண 50, 100, 500 என்று முதற்கட்டத்தில் சிறுகச் சிறுகச் செய்வதே நலம். இதனை இவற்றில் காணும் பிழைகளைப் படிப்படியாக களைந்து உறுதிப்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்த நிலைகளில் 1000, 2000, 5000, 10000 என்று கூட ஏற்றலாம். இந்தப் படிநிலைகளுக்கு இடையில் பல்வேறு நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் முனைப்பாக இணைந்து செயற்பட்டு ஓரிரு நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரலாம்.

//பதிவேற்றிய பிறகு விக்கி தானூலாவி கொண்டு திருத்துதல் எளிது. அதற்கு தேதி அடிப்படையில் பகுப்புகள் இட்டால், அதை அக்கருவி வழியே மீட்டெடுத்து மேம்படுத்த உதவும். பைவிக்கிதானியங்கி, இப்பொழுது விக்கிவழங்கியிலேயேஅமைத்துவிட்டதால், எத்தடையும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் மேம்படுத்துவது மிக மிக எளிது. //

2009இல் உருவாக்கப்பட்ட 1000+ கூகுள் கட்டுரைகளையே இன்னும் சீர்திருத்த முடியாத சிறு சமூகமாகத் தான் நாம் இன்னும் உள்ளோம். தானியங்கியால் சீராக்க முடியாத பிழைகளும் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும் (எடுத்துக்காட்டு: கோயில்களின் காலம் குறித்த முரணான தகவல்கள். இவற்றைச் சுட்டிக்காட்டியும் இதற்குப் போதிய எதிர்வினை இல்லை). எனவே, முடிந்த அளவு பிழைகளைத் தவிர்க்கவும் பதிவேற்றும் முன்னரே கட்டுரைகள் சிறந்த நிலையில் அமைவதையும் உறுதி செய்ய வேண்டும்.

//ஒரு தரமான கட்டுரை வளர்ச்சி என்பது ஓரிரு பதிவுகளில், எம்மொழியிலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பதிவேற்றிய பின், அவ்வப்போது மேம்படுத்துதல் எளிதே. //

https://en.wikipedia.org/wiki/Three_Laws_of_Robotics பாருங்கள். மனிதர்கள் எழுதும் கட்டுரைகளில் பிழைகள் உள்ளதைத் தான் விக்கி ஏற்றுக் கொள்கிறது. தானியங்கி ஏற்றத்துக்கு 100% பிழையற்ற நிலையை எட்டுவதற்கான முயற்சியாவது வேண்டும். இதில் அவசரமோ அழுத்தமோ தேவை இல்லை. தானியங்கி கொண்டு 40,000 கட்டுரைகள் ஏறுகின்றன என்பதைக் காட்டிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள 31% கட்டுரைகளில் (40,000/1,26,000) பிழைகள் மண்டியுள்ளன என்ற நிலை வருமானால் அது கவலைக்குரியது.

//வித்யா கூறியது போல, நிழற்படங்கள், நிகழ்படங்கள் இணைப்புக்கான விக்கிநுட்பத்தை இப்பொழுதே இணைக்கக் கோருகிறேன். படம் பொதுவகத்தில் இல்லையென்றால், இங்கு தெரியாது. //

இது தேவையற்றது. பொதுவகத்தில் படங்கள் இருந்தாலும், பொருத்தமான படம் எது என்று பார்த்து இணைப்பது தமிழ் விக்கிப்பீடியர்கள் கூட்டாகச் செய்யும் பங்களிப்பாக இருக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியா ஒரு காட்சியகம் அன்று.

//இதில் விருப்பம் இல்லாதவர், நீச்சலாரிடம் இருந்து 50, 100, 500 என பெற்றுக் கொண்டு, செய்து காட்டக் கோருகிறேன்..//

விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி. --இரவி (பேச்சு) 07:36, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]

கனடாவில் இருந்து திரும்பிய நீச்சல்காரனுடன் பேசினேன். 50, 100, 500 போன்ற படிநிலைக்கு மாற்றாக, ஒரு கற்பனைக் கோயிலுக்கான கட்டுரையை உருவாக்கி அதில் அனைத்து வகையான தரவு மாதிரிகளுக்கான சொற்றொடர்களையும் இட எண்ணியுள்ளோம். இதில் பிழைகளைக் களைந்து உறுதிப்படுத்துவதன் மூலம், விரைந்து தானியக்கப் பணிகளைத் தொடங்க முடியும். சூன் 30க்குள் இதனைச் செய்ய இயலும் என்று எதிர்பார்க்கிறோம். --இரவி (பேச்சு) 12:13, 23 சூன் 2016 (UTC)[பதிலளி]

வெவ்வேறு பணிகள் இருந்ததால் இதில் கவனம் செலுத்தமுடியவில்லை. அனைத்து தரவுகளும் இருக்கும் வகையில் ஒரு கற்பனை மாதிரிக் கட்டுரையை விரைவில் உருவாக்குகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு)

கட்டற்ற மற்றும் திறந்த தரவுகளாகப் பகிர்தல்[தொகு]

தமிழ் விக்கிக்குப் கட்டுரையாக்கத்துக்கு என்று கிடைக்கும் தரவுகளை நாம் ஒழுங்கமைத்து திறந்த தரவுகள் ஆகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆய வேண்டும். தரவுகளைப் பகிர்வதே ஒரு நல்ல output/பணி ஆகும்.

 • இவற்றை விக்கி தரவுகளில் பதிவேற்றலாமா?
 • இவற்றை github இல் அல்லது அது போன்ற தளங்களில் பகிரலாமா?
 • இவற்றின் உரிமை என்ன?

மேலும், தரவுகளை முறையாகத் தொகுத்தபின், கட்டுரையாக்கத்துக்குப் போதுமான அவகாசம் எடுத்துச் செய்யலாம்.

--Natkeeran (பேச்சு) 19:16, 23 சூன் 2016 (UTC)[பதிலளி]

இங்கும் இங்கும் உள்ளது போன்ற தரவுகள் கட்டற்ற உரிமத்தில் கிடைப்பதாகக் கொள்ளலாம். தமிழகக் கோயில்கள் விக்கித்தரவுத் திட்டம் பார்க்கவும். நீச்சல்காரன், தரவைச் செப்பனிடும் பணியை முடித்தவுடன், அவற்றை வினவி விடை அறியக்கூடிய தரவு மூலங்களிலும் விக்கித்தரவிலும் ஏற்றும் பணிக்கு துறை அறிவு உள்ளோர் உதவலாம். ஆனால், கட்டுரைகளை முதலில் ஏற்றி விட்டு அடுத்த கட்டப் பணியாக இவற்றைச் செயற்படுத்தலாம். --இரவி (பேச்சு) 13:21, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

இற்றை[தொகு]

மாவீரர், மகா, அன்னை, மகாத்மா போன்ற அடைமொழிகள் சிறப்பு கருதி வழங்குவது மரபு. தகவல் பெட்டியில் மட்டும் அருள்மிகு என்ற அடைமொழியுடன் வழங்குவது மரபைச் சிதைக்காமல் இருக்கும். அருள்திரு, அருட்தந்தை, புனித போன்ற மொழிகள் ஏற்கனவே விக்கியிலும் உள்ளன புனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு). "மாவடடத்தில் உள்ள", "கோவில் ஆகும்" என்று பதம் பிரிக்காமல் "மாவட்டத்திலுள்ள", "கோவிலாகும்" என்பது போல எழுதுவதே சிறப்பென நினைக்கிறேன். தகவல் பெட்டியில் "19 ஆம் நூற்றாண்டு" என்று சுருக்கமாகவும், கட்டுரையில் "பத்தொன்பதாம் நூற்றாண்டு" என்று விரிவாகவும் இருவகையிலும் இருந்தால் தேடுபொறி இணக்கமாக இருக்கும்.

அதிகம் பயன்படுத்திய சொல்லை ஆராய்ந்தெடுக்கையில் ஆகமம் மற்றும் திருவிழாக்கள் தொடர்பாகச் சில மேம்பாடுகள் செய்யலாம் என முயல்கிறேன். மற்ற அரசுத் தரவில் நான் கவனித்தவற்றை மட்டும் தானியத்தில் திருத்தவைக்கிறேன். இல்லாதவை அவ்வாறே கட்டுரையாகும். பின்னர் யாரும் நேரடியாகக் கட்டுரையில் திருத்திக் கொள்ளலாம். மற்ற மாதிரிக் கட்டுரைகளை உருவாக்கிக் காட்டும் செயலியை இங்கு அமைத்துள்ளேன். எந்தக் கோப்பு, எத்தனையாவது வரி என்று கொடுத்தால் 10/15 நொடிகளில் மாதிரிக் கட்டுரையைக் காட்டும். உதா: Thirchi 50, Thirchi 55-நீச்சல்காரன் (பேச்சு) 04:19, 10 சூலை 2016 (UTC)[பதிலளி]

பன்னிரு கோப்பையும் முன்று பகுதியாக சுளகின் வழியாக இங்கு இற்றை செய்துள்ளேன் 1, 2, 3 -நீச்சல்காரன் (பேச்சு) 05:03, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]
எதற்கு என்று தெரியாமலே சில முக்கிய தலைப்புகளில் கட்டுரை எழுதப்பயன்படும் என்ற ரீதியிலேயே அரசுக் கோப்பில் உள்ள சொற்களை எல்லாம் இங்கே பட்டியலிட்டேன். அனைத்துச் சொற்களையும் சரிபார்த்து மாற்றுச் சொல் வழங்குவது அதிக மனித உழைப்பைக் கோரும், மேலும் அதைமீண்டும் கணினிக்குப் புரியவைப்பதும் சவாலானது. அதிகப் பயன்பாடுள்ள பிழையான சொற்களை மட்டுமே மாற்ற வேண்டும். விக்கி நடையில் இல்லை என்று ஒவ்வொரு சொல்லாக மாற்றுவது நடைமுறை சாத்தியமில்லை மேலும் தனிமைப்படுத்திவிடும். தவிர மற்ற பிழைகளை அந்தந்தக் கட்டுரையில் மேம்படுத்துவதே சரி. கோயில் என்பதும் கோவில் என்பதும் மரபு. தலைப்பு கோயில் என்றும் இதர வாக்கியங்கள் கோவில் என்றும் பயன்படுத்த வேண்டுமென நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 01:22, 17 சூலை 2016 (UTC)[பதிலளி]

இற்றை - திசம்பர் 2016[தொகு]

த. இ. க. வின் தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டத்தில் கோயில்கள் தொடர்பான 18,000+ கட்டுரைகள் ஏற்றப்பட்டுள்ளன. இப்பதிவேற்றத்தின் மூலம் பல மேம்பாடுகளுக்கான தேவையை அறிய முடிந்ததாக நீச்சல்காரனும் பரிதியும் கருதுகின்றனர். இது குறித்த கூடுதல் தகவலைப் பகிர்ந்து கொண்டால் தமிழ் விக்கிப்பீடியர் சமூகமும் எவ்வாறு உதவலாம் என்று பார்க்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 10:25, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

அருள்மிகு[தொகு]

கோயில்கள் தொடர்பான கட்டுரைகளில் கடவுள் பெயர்கள் முன்பு அருள்மிகு என்று குறிப்பிடுவது தேவையற்றது என்று முன்பே கருத்து கூறப்பட்டது. எனினும், Mother Teresa, Swami Vivekananda, Saint Joseph என்றெல்லாம் கட்டுரைகள் இருக்கும் போது, ஏன் அருள்மிகு என்று குறிப்பிடக்கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. Mother Teresa, Swami Vivekananda என்பவை பொதுவாக அவர்கள் அழைக்கப்படும், அறியப்படும் பெயர்கள் என்பதால் ஏற்கப்பட்டுள்ளன. ஒரு கோயில் தொடர்பான கட்டுரையில் அருள்மிகு என்று குறிப்பிடாமல்விட்டால் வேறு எவரையும் எண்ணிக் குழம்பும் சூழல் இல்லை. மக்கள் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும் அனைத்து இடங்களிலும் அருள்மிகு என்ற முன்னொட்டுடனேயே எப்போதும் சொல்வதில்லை. தமிழ் விக்கிப்பீடியா முதன்மைக் கட்டுரைத் தலைப்புகள் கூட பார்வதி, சரசுவதி என்றே உள்ளது. முன்னே அருள்மிகு முன்னொட்டு இல்லை. Mary, Jesus என்ற ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் எல்லாம் எந்தவிதமான முன்னொட்டும் இல்லாமல் பெயர்களை மட்டுமே கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். தவிர, அருள்மிகு என்று குறிப்பிடுவது நாத்திகர்களின் பார்வையில் நடுநிலை நோக்குடையதாகவும் இல்லை. எனினும், முற்றிலும் இந்தச் சொல்லைத் தவிர்ப்பது தமிழ் விக்கிப்பீடியா இந்து சமயத்துக்கு எதிராக இருப்பதாகவும் திரிக்கப்பட வாய்ப்புள்ளதால், கட்டுரையின் தகவல் பெட்டித் தலைப்பில் மட்டும் அருள்மிகு என்ற சொல்லைப் பயன்படுத்தி, இதர இடங்களில் தவிர்க்கலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். @Neechalkaran:--இரவி (பேச்சு) 17:49, 19 பெப்ரவரி 2017 (UTC)

 1. //தமிழ் விக்கிப்பீடியா இந்து .. திரிக்கப்பட வாய்ப்புள்ளதால்// தகவல் பெட்டித் தலைப்பில் மட்டும் அருள்மிகு//👍 விருப்பம்--உழவன் (உரை) 01:06, 20 பெப்ரவரி 2017 (UTC)
 2. //தமிழ் விக்கிப்பீடியா இந்து .. திரிக்கப்பட வாய்ப்புள்ளதால்// தகவல் பெட்டித் தலைப்பில் மட்டும் அருள்மிகு//👍 விருப்பம்--பாலாஜி (பேசலாம் வாங்க!) 01:26, 20 பெப்ரவரி 2017 (UTC)
 3. தகவல்பெட்டியில் மட்டும் தரலாம். அதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 07:03, 21 பெப்ரவரி 2017 (UTC)
 4. அருள்மிகு என்பது வேவையற்ற சுமை தகவல்பெட்டியில் மட்டும் தரலாம்.--Arulghsr (பேச்சு) 09:49, 21 பெப்ரவரி 2017 (UTC)
 5. கடவுளர்களின் பெயர்களின் முன் அருள்மிகு தேவையில்லை. ஆனால் கோயில்களை பெயரிடும் போது வரும் அருள்மிகு எனும் முன்னொட்டு காணப்படுமாயின் அது அப்பெயரின் பதிவுடன் அல்லது அலுவல்முறை பெயரிடலுடன் சம்பந்தப்படுவதால் இடுவதே சரி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:36, 21 பெப்ரவரி 2017 (UTC)
 6. தலைப்பில் அருள்மிகு தேவையில்லை. தகவல் பெட்டியில் இருக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:32, 22 பெப்ரவரி 2017 (UTC)

வேறு ஏதும் கருத்துகள் இல்லா நிலையில், தகவற் பெட்டியின் தலைப்பு தவிர்த்த பிற இடங்களில் அருள்மிகு என்ற சொற்பயன்பாட்டைத் தவிர்க்கலாம் என்பதை இணக்க முடிவாக முன்வைக்கிறேன். தகவற் பெட்டியின் தலைப்பில் இடம்பெறும் போதும், அதுவே அலுவல் முறை பெயராக அரசு குறிப்புகளில் இருந்தால் ஒழிய நாமாக எல்லா தலைப்பிலும் அருள்மிகு என்று சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:38, 24 பெப்ரவரி 2017 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:13, 24 பெப்ரவரி 2017 (UTC)
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:28, 24 பெப்ரவரி 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:10, 25 பெப்ரவரி 2017 (UTC)
👍 விருப்பம்--உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:33, 28 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவு[தொகு]

இத்தானியக்கப் பதிவேற்றத் திட்டத்தில் விக்கித்தரவு குறித்து கவனிக்க வேண்டிய விசயங்கள் யாவை?

 • ஏற்கனவே ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளுக்கு விக்கித்தரவு இணைப்புகளைச் சேர்த்தல்.
 • புதிதாக உருவாகும் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரகளுக்கு விக்கித்தரவு உருப்படி தொடங்குதல். இதனை விக்கித்தரவுத் தானியங்கிகள் கவனித்துக் கொள்ளும். நாம் செய்ய வேண்டியதில்லை. இந்தப் புரிதல் சரிதானா? @Kanags, Info-farmer, and Balajijagadesh: உறுதிப்படுத்த வேண்டுகிறேன்.
 • விக்கித்திட்டம் விக்கித்தரவின் கீழ் கோயில் தொடர்பான உருப்படிகளுக்கு கூடுதல் தகவல் சேர்த்தல். ஆனால், இதனைப் பதிவேற்றப் பணிக்குப் பிறகு கூட செய்யலாம். --இரவி (பேச்சு) 11:31, 21 பெப்ரவரி 2017 (UTC)
 1. விக்கித்தரவு குறித்து பாலாஜிக்கு அதிகம் தெரியும். அவரும் விக்கித்தரவில் ஒரு தானியங்கியை இயக்குகிறார். நமக்கு நாமே செயற்படும் போது சிறப்பாக இருக்கும். ஏனெனில், விக்கித்தரவில் தமிழ் சார்ந்த இணைப்புப் பிழைகள், பலவற்றை கனகு களைந்திருக்கிறார். நான் சிலவற்றை களைந்துள்ளேன். ஆங்கில கட்டுரைகளின் தலைப்புகள் தந்தால், அவற்றின் தற்போதுள்ள தமிழ் பெயர்களையும், விக்கிதரவு எண்ணையும் என்னால் எடுத்துத்தர இயலும். ஆங்கில விக்கியின் பகுப்புகளைத்தந்தாலும், அப்பகுப்புகளில் உள்ள தமிழ் கட்டுரைகளின் பெயரை எடுக்க இயலும். அதற்கான நிரல் அணியமாக உள்ளது. {{commons}} வார்ப்புரு போல, விக்கித்தரவுக்கும் ஒரு வெளிப்படையான வார்ப்புரு இருப்பின், கட்டுரையைப் பார்த்து,இங்குள்ள தரவுகளை, விக்கித்தரவில் நிரப்ப வசதியாக இருக்கும். இது புதியவர்களுக்கும், பயிலரங்குகளில் அறிமுகம் படுத்தலாம். அவர்கள் கட்டுரைகள் எழுதுவதை விட, இதுபோன்ற பங்களிப்புகளை ஆர்வத்துடன் செய்வர். --உழவன் (உரை) 11:44, 21 பெப்ரவரி 2017 (UTC)
புதிதாக உருவாகும் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு தானியங்கள் தானாகவே விக்கிதரவு உருப்படிகளை தொடங்கிவிடும். ஆனால் ஏற்கனவே வேறு மொழிகளில் அக்கோயில்கள் இருந்தால் நாமே விக்கிதரவில் இரண்டு உருப்படிகளை இணைக்க வேண்டும். Infobox இல் இடம் பெறப்போகும் தகவல்களை தானியங்கி மூலம் விக்கித்தரவில் நாம் பதிவேற்றலாம். இதன் மூலம் பல நன்மைகள் உண்டு. இவ்விரண்டு வேலைகளையும் பக்கம் உருவாக்குவதற்கு முன்பும் செய்யலாம் பின்பும் செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:28, 22 பெப்ரவரி 2017 (UTC)
//புதிதாக உருவாகும் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு தானியங்கள் தானாகவே விக்கிதரவு உருப்படிகளை தொடங்கிவிடும்.// இது கோயில்களுக்கான தானியங்கிக் கட்டுரைகளுக்கு மட்டுமா அல்லது அனைத்துக்குமா? அனைத்துப் புதிய கட்டுரைகளுக்கும் இவ்வாறு உடனடியாகவே புதிய உருப்படியை இணைப்பது நல்லதல்ல. இதனால், ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுப்பது சிரமமாகிவிடும். பெரும்பாலானோருக்கு இரு உருப்படிகளை எவ்வாறு இணைப்பது என்பது தெரியாது மட்டுமல்ல, இரட்டிப்பு வேலையும் கூட. எனவே கோவில்கள் தானியங்கிக் கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய கட்டுரைகளுக்கு சில காலம் பொறுத்து விக்கித்தரவில் இணைப்பது சிறந்தது. அதுவே இப்போதுள்ள நடைமுறை.--Kanags \உரையாடுக 05:56, 22 பெப்ரவரி 2017 (UTC)
//புதிதாக உருவாகும் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு தானியங்கள் தானாகவே விக்கிதரவு உருப்படிகளை தொடங்கிவிடும்.// இது, பொதுவாக அனைத்து கட்டுரைகளுக்கும் உள்ள நிலையைக் குறிக்கிறது என்றே நினைக்கிறேன். கோயில் கட்டுரைகளுக்கு விக்கித்தரவு இணைப்பதற்கு என்று நாம் தனியாக தானியங்கி ஏவத் தேவையில்லை. அதே வேளை, ஒட்டு மொத்தமாக ஆயிரக்கணக்கான கட்டுரைகள் பதிவேறும் நிலையில், ஆங்கில விக்கிப்பீடியாவில் இணையான கட்டுரைகள் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து உடனுக்குடன் சேர்க்கும் பணியில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

@Info-farmer:, //ஆங்கில கட்டுரைகளின் தலைப்புகள் தந்தால், அவற்றின் தற்போதுள்ள தமிழ் பெயர்களையும், விக்கிதரவு எண்ணையும் என்னால் எடுத்துத்தர இயலும். ஆங்கில விக்கியின் பகுப்புகளைத்தந்தாலும், அப்பகுப்புகளில் உள்ள தமிழ் கட்டுரைகளின் பெயரை எடுக்க இயலும். அதற்கான நிரல் அணியமாக உள்ளது. // தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் இந்தக் கோயில் திட்டத்துக்கும் இதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று விளக்க முடியுமா? ஒவ்வொரு விக்கிப்பீடியா கட்டுரைக்கும் ஒரு விக்கித்தரவு உருப்படி இணைப்பு இடப்பக்கப் பட்டையில் தானாகவே தெரியும் என்பதால் {{commons}} வார்ப்புரு போன்று இடுவது தேவையற்றது. --இரவி (பேச்சு) 10:15, 24 பெப்ரவரி 2017 (UTC)

@Ravidreams: //இத்தரவுகளை விக்கித்தரவில் ஏற்றும் பணியில் ஈடுபடுவோம். கட்டுரைகள் பதிவேற்றத்துக்குப் பிறகு இதனைச் செய்வோம். // ஆம். பின்னர் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போதுள்ள கட்டுரைகளின் பட்டியல், பதிவேற இருக்கும் கட்டுரைகளின் பட்டியல் என இருவகையாகக் கொண்டால், அவற்றில் ஒரு கோயிலுக்கான பெயர், வேறுபட்ட பெயர்களுடன் இரு பட்டியல்களிலும் இருக்கலாம். அவைகளை கண்டறிவது எப்படி? என்பது பற்றியும்நாம் எண்ண வேண்டும்.--உழவன் (உரை) 06:43, 25 பெப்ரவரி 2017 (UTC)

@Balajijagadesh:, நிச்சயம் இத்தரவுகளை விக்கித்தரவில் ஏற்றும் பணியில் ஈடுபடுவோம். கட்டுரைகள் பதிவேற்றத்துக்குப் பிறகு இதனைச் செய்வோம். @Neechalkaran: இது போன்ற தேவைகளுக்காக கட்டுரைகளைப் பதிவேற்றும் போது செய்யும் திருத்தங்களை மூலத் தரவிலும் சேமிப்பது நல்லது. இத்தகைய தரவு செயலிகள் உருவாக்கம் உட்படப் பலவாறும் பயன்படும். நன்றி. --இரவி (பேச்சு) 10:15, 24 பெப்ரவரி 2017 (UTC) {{

விக்கித்தரவு குறித்த தனிப் பயிற்சிப் பட்டறையை நடத்திடலாம் எனவும் இங்கே பரிந்துரைக்க வேண்டுகிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:49, 28 பெப்ரவரி 2017 (UTC)

இப்போது வரை பதிவேற்றப்பட்ட கட்டுரைகளுக்கு(10k+) விக்கிதரவு உருப்படி உருவாக்கப்பட்டுவிட்டது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:18, 17 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 21:15, 17 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]