திருமுருகன்பூண்டி
திருமுருகன்பூண்டி | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | அவிநாசி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
31,528 (2011[update]) • 2,174/km2 (5,631/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 14.5 சதுர கிலோமீட்டர்கள் (5.6 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thirumuruganpoondi |
திருமுருகன்பூண்டி (ஆங்கிலம்:Thirumuruganpoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். திருப்பூர் மாநகராட்சிக்கு மிக அருகாமையில் உள்ள வளர்ந்து வரும் பேரூராட்சி திருமுருகன்பூண்டி பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் சிற்பக்கலை கூடங்கள் மூலம் பல்வேறு சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இப்பேரூராட்சியில் தொல்பொருள் துறைக்குச் சொந்தமான பழமை வாய்ந்த திருமுருகநாத சுவாமி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். இப்பேரூராட்சி அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்ட பேரூராட்சியாகும். மேலும் புகழ் பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமையப்பெற்ற அவினாசி பேரூராட்சிக்கு மிக அருகில் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இது வரலாற்றில் இடைக்கால ஆட்சியில் ஆறைநாடு ஆட்சிப் பரப்புக்கு உட்பட்டிருந்தது. [3]
அமைவிடம்[தொகு]
திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு தெற்கில் திருப்பூர் 12 கிமீ; வடக்கில் அவிநாசி 5 கிமீ; கிழக்கில் பெருந்துறை 45 கிமீ; கோயம்புத்தூர் 52 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
14.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 132 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,789 வீடுகளும், 31,528 மக்கள்தொகையும் கொண்டது.[5]
திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில்[தொகு]
- இங்கு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகிய திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
- கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. சித்தபிரமை, பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவர்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கொங்கு மண்டல சதகம், பாடல் 15, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 14
- ↑ திருமுருகன்பூண்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Thirumuruganpoondi Population Census 2011
வெளி இணைப்புகள்[தொகு]
- திருமுருகன்பூண்டி தல வரலாறு
- தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
- முருகன்பூண்டி பன்னிரு திருமுறை
- விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்
மேற்கோள்கள்[தொகு]