குண்டடம் ஊராட்சி ஒன்றியம்
குண்டடம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்திநாலு பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குண்டடத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 71,781 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,114 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 25 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:
- ஆரத்தொழுவு
- பெல்லம்பட்டி
- எல்லப்பாளையம்புதூர்
- கெத்தல்ரேவ்
- ஜோதியம்பட்டி
- கண்ணன்கோயில்
- கொக்கம்பாளையம்
- கொழுமங்குழி
- குருக்கம்பாளையம் [3]
- மருத்தூர்
- மொலராப்பட்டி
- முத்தியம்பட்டி
- நந்தவனம்பாளையம்
- நவநாரி
- பெரியகுமாரபாளையம்
- பெருமாள்புரம்
- புங்கந்துறை
- சடையபாளையம்
- சங்கரானந்தம்பாளையம்
- செங்கோடம்பாளையம்
- சிறுகிணறு [4]
- சூரியநல்லூர்
- வடசின்னாரிபாளையம்
- வேலாயுதம்பாளையம்
அருகில் உள்ள நகரங்கள்[தொகு]
குண்டடம் நகரின் சுற்றுவட்டார பிற ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளது. அவ்வகையில் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
போக்குவரத்து[தொகு]
பல்லடம்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குண்டடம். இங்கிருந்து தாராபுரம், பல்லடம், கோயம்புத்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை, தேனி, திருநெல்வேலி, இராமேஸ்வரம், தூத்துக்குடி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, சூலூர், காங்கயம், செம்பட்டி, வத்தலக்குண்டு, விருதுநகர், ராஜபாளையம், மேட்டுப்பாளையம் என தமிழக தென் மாநில பகுதிகளுக்கும் மேற்கு தமிழக மாவட்டங்களுக்கும் தாராள போக்குவரத்து வசதி உள்ளது. இந்த பேருந்துகளின் தலைமையிடமாக கோயம்புத்தூர் உள்ளது. மேலும் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கும் இங்கிருந்து தான் பேருந்து வசதி உள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
- திருப்பூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க[தொகு]
- ஊதியூர்
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
- ↑ 2011 Census of Tiruppur district Panchayat Unions
- ↑ TnPanchayat (2020-12-25). "குருக்கம்பாளையம் ஊராட்சி - காங்கேயம் சட்டமன்றத் தொகுதி" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2020-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201227080040/https://tnpanchayat.com/kurukkampalayam-panchayat-kangayam-assembly-constituency/.
- ↑ "வருவாய் கிராமங்கள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India" (in ta-IN). https://tiruppur.nic.in/ta/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/.