வெள்ளக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெள்ளக்கோயில்
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
வெள்ளக்கோயில்
இருப்பிடம்: வெள்ளக்கோயில்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 10°56′N 77°43′E / 10.94°N 77.71°E / 10.94; 77.71ஆள்கூறுகள்: 10°56′N 77°43′E / 10.94°N 77.71°E / 10.94; 77.71
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் வெள்ளக்கோயில்

தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்

ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்களவைத் தொகுதி வெள்ளக்கோயில்
மக்கள் தொகை

அடர்த்தி

40,359 (2011)

623/km2 (1,614/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 64.75 சதுர கிலோமீட்டர்கள் (25.00 sq mi)
இணையதளம் www.municipality.tn.gov.in/Vellakoil/


வெள்ளக்கோயில் (ஆங்கிலம்:Vellakoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் , திருப்பூர் மாவட்டத்தில், உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.சுமார் இருபத்து ஒன்று (21) மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இந்த நகராட்சி தனி தாலுக்காவாக இல்லாதது வேதனையான விஷயம் ஆகும். தாலுகா அலுவலக பணிக்காக காங்கயம் செல்வதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனி தாலுகா என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. தனி தாலுகாவானால் புதிய சட்டமன்ற தொகுதியும் உருவாகும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு உடனடியாக தனி தாலுகா உருவாக்க வேண்டும் என்பது இன்றளவும் கானல் நீராக உள்ளதால் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,157 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,359 ஆகும். மக்கள்தொகையில் 20,158ஆண்களும், 20,201 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 81.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,002 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3438 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,572 மற்றும் 22 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.64%, இசுலாமியர்கள் 0.92% , கிறித்தவர்கள் 2.02% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. வெள்ளக்கோயில் நகர மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளக்கோயில்&oldid=2855969" இருந்து மீள்விக்கப்பட்டது