தளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தளி
தளி
இருப்பிடம்: தளி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17ஆள்கூற்று: 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,303 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


367 metres (1,204 ft)

தளி (Dhali), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367 மீட்டர் (1204 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6303 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தளி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு[தொகு]

தமிழகத்தில், உடுமலை அருகே திருமூர்த்திமலை அருவிக்கு செல்லும் வழியில் உள்ளது தளி பேரூராட்சி. இந்தப் பகுதியை "பாளையக்காரர்கள்" செல்வ செழிப்புடன் ஆட்சி செய்துள்ளனர். இதற்கு ஆதாரமாக இன்றும் பல்வேறு சிலைகளும், பழங்கால பொருட்களும் உள்ளன.

"யானை கட்டி போரடித்த களம்" இன்றும் இப்பகுதியில், பழமை மாறாமல் உள்ளது. தளி பொன்னாலம்மன் சோலை பகுதி ஆங்கிலேயர்களையே எதிர்த்த "தளி பாளை பட்டு" தலைமையிடமாக இருந்தது. பாளையக்காரர்கள் வேட்டைக்கு செல்வதற்கு இப்பகுதியை தான் பயன்படுத்தியுள்ளனர்.

இப்பகுதிக்கு பொன்னாலம்மன் கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும்; வேட்டைக்குச் செல்வதாக இருந்தாலும், யானைகள் மேல் சவாரி செய்து வருவது பாளையக்காரர்கள் வழக்கம். விளையும் தானியப்பொருட்கள், மலைப்பகுதியிலுள்ள நெல்லிக்காய், தேன், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லவும் யானைகளே பயன்படுத்தப்பட்டது.

தட்டை பாறைகளை "அல்வா" போல் குடைந்து இரண்டு பக்கமும் துவாரம் போன்று அதன் மூலம் சங்கிலி பிணைத்து யானைகளில் கால்களில் கட்டியுள்ளனர். விளையும் தானியங்களை பாறைகளில் காய வைத்து, தானியங்களை பிரிக்கவும் யானைகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்காக, யானைகளை கட்டும் வகையில், நான்கு இடங்களில், குழிகள் அமைக்கப்பட்டது. தோற்றத்தில், யானைகளின் முகத்தை போல் இக்குழிகள் உள்ளன. இதை "யானை கட்டும் பாறை" என அழைக்கப்படுகிறது.

பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், பயன்படுத்தப்பட்ட இப்பாறை காலப்போக்கில், குடியிருப்பாக மாறியுள்ளது. ஆனாலும், யானை கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தட்டை பாறை குழிகள் மட்டும் இன்றும் அழியாமல் அப்படியே உள்ளன[5].

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "Dhali". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. யானை கட்டிப் போரடித்த பாளையக்காரர்கள் பாரம்பரியம் உடுமலை அருகே புதைந்துள்ளது ஒரு வரலாறு, தினமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளி&oldid=1536368" இருந்து மீள்விக்கப்பட்டது