உடுமலை கே. ராதாகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (Udumalai K. Radhakrishnan, பிறப்பு: 23-10-1965 ) என்பவர் தமிழக அரசியல்வாதியாவார். 2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழக அமைச்சரவையில் வீட்டுவசதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [1]

இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி என். ஜி. எம். கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். இவருக்கு ஆர். கிருஷ்ணபிருந்தா என்ற மனைவியும், ஆர். ஜெயபிரனிதா என்ற மகளும், ஆர். நிவாஸ்ரீ என்ற மகனும் உள்ளனர். இவர் திருப்பூர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளராக இரண்டு முறையாக இருந்து வருகிறார். அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக இருந்தார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்!". ஒன் இந்தியா. 21 மே 2016. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. 29 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]