அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அ.தி.மு.க. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
All India Anna Dravida Munnetra Kazhagam
சுருக்கக்குறிஅஇஅதிமுக
தலைவர்
நிறுவனர்எம். ஜி. இராமச்சந்திரன்
பொதுச்செயலாளர்காலியிடம்
நாடாளுமன்ற குழுத்தலைவர்மு. தம்பிதுரை
மக்களவைத் தலைவர்ப. இரவீந்திரநாத் குமார்
மாநிலங்களவைத் தலைவர்ஏ. நவநீத கிருஷ்ணன்
தொடக்கம்17 அக்டோபர் 1972
(48 ஆண்டுகள் முன்னர்)
 (1972-10-17)
பிரிவுதிராவிட முன்னேற்றக் கழகம்
தலைமையகம்புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை,
226, அவ்வை சண்முகம் சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 600014, தமிழ்நாடு, இந்தியா
செய்தி ஏடுநமது புரட்சித் தலைவி அம்மா (தினசரி நாளிதழ்)
நியூஸ் ஜெ (தொலைக்காட்சி அலைவரிசை)
மாணவர் அமைப்புஅஇஅதிமுக மாணவரணி
இளைஞர் அமைப்புஎம். ஜி. ஆர். இளைஞரணி
பெண்கள் அமைப்புஅஇஅதிமுக மகளிரணி
தொழிலாளர் அமைப்புஅண்ணா தொழிற் சங்கம்
உறுப்பினர்Green Arrow Up.svg 10 மில்லியன் உறுப்பினர்கள்
கொள்கைசமூக ஜனநாயகம்
ஜனரஞ்சகம்[1]
பிராந்தியவாதம்[2]
கூட்டாட்சி[2]
திராவிடவாதம்[3]
அரசியல் நிலைப்பாடுமையம்[4]
நிறங்கள்     பச்சை
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி[5]
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி : (1998–1999, 2019–தற்போது வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
8 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவைகள்)
தேர்தல் சின்னம்
Two Leaves
இணையதளம்
அஇஅதிமுக

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அ.இ.அ.தி.மு.க. அல்லது அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. தி.மு.க.விலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. (ஜானகி அணி) மற்றும் (ஜெயலலிதா அணி)களாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாகப் பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்றத் தலைவராக, ௭டப்பாடி கே. பழனிசாமி 'முதல்வர்' பதவியில் உள்ளார்.

வரலாறு

சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்டதால்[சான்று தேவை] கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர்., அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அ.தி.மு.க.’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன், இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[6] இக்கட்சி, பின்னர், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (அ.இ.அ‌.தி.மு.க.) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர். காலம்

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன்

எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7] அதைத் தொடர்ந்து, 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[8] நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.

எம்.ஜி.ஆர்.-ஐப் போலவே என்.டி. இராமராவும் திரைப்பட உலகில் இருந்து, அரசியலுக்கு வந்து, ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர். ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது, பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.

கொடியின் வரலாறு

அ.தி.மு.க.வின் துவக்க காலக் கொடியாக, தாமரைச் சின்னமும், அதன் பின்னால் கருப்பு சிவப்பு நிறங்களும் இருந்தன.[9] மதுரையில், ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972ஆம் ஆண்டு அ.திமு.க.வின் கொடி ஏற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் [சான்று தேவை]தாமரை படமிட்ட கொடியை கட்சிக் கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு, எம்.ஜி.ஆர்., அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து, அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை, அண்ணா தோற்றுவித்த தி.மு.க.வின் கருப்பு, சிவப்பு கொடியோடு இணைத்து, அண்ணா தி.மு.க.வின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.

எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலோடு, நடிகர் பாண்டு, அ.தி.மு.க. கொடியை உருவாக்கினார்.[10][11]

பெயர் மாற்றம்

'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரை, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்று எம்.ஜி.ஆர். மாற்றினார். இதை, கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர். 'பொதுச்செயலாளர்' பதவியை விட்டு விலகுவதாக அறிவித்த பின், எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும்

பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா

தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன், திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது? என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்.ஜி.ஆர். இன் மனைவி ஜானகி இராமச்சந்திரன், முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அ.இ.அ.தி.மு.க.வில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும், ஜானகியை ஆதரித்தார்.

புதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தி.மு.க., இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும், ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே, சட்டமன்றத்தில் சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர், ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன், அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக, ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.

சனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால், தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து, மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அ.தி.மு.க. கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே, இரு தொகுதிகளிலும் வென்றது.[12] பின்பு ஜெயலலிதா தலைமையில், 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் வென்று, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவைத் தேர்தலையும், 2016 சட்டமன்றத் தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது.

ஜெயலலிதா மறைவு

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதலமைச்சராக, பதவியிலிருக்கும் போது, 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.[13] அதற்குப் பின்னர், 29 டிசம்பர் 2016 அன்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அ.தி.மு.க. கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.[14][15][16]

5 பிப்ரவரி 2017 அன்று, அ.இ.அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[17][18] இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[19] விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை, ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.

7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னைக் கட்டாயப்படுத்தியதால், பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாகத் தெரிவித்தார்.[20] இதனைத் தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க‌.வின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அ.இ.அ.தி.மு‌.க. பிரிந்தது. ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால், அ.தி.மு.க.வில் இருந்து, ஓ.பிஎ.ஸ். ஆதரவாளர்கள் அனைவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.

பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால், ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால், அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி, எடப்பாடி க. பழனிசாமி யை சட்டமன்றக் குழுத்தலைவராகவும், டி.டி.வி. தினகரனை, துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராய் பதவியேற்று 6 மாதங்களில் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது. ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசின் துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். சசிகலாவால் நீக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டனர். மேலும், பெங்களூர் சிறையிலிருந்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் வி .கே. சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள், கட்சியின் அவசர பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதன்பின் சசிகலாவிற்கு ஆதவராக, 19 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்தனர். இவர்களை விசாரித்து, பதவிநீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு, அ.தி.மு.க. சட்டசபை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இவர்களுள் உறுப்பினர் ஜக்கையன் மட்டும் மன்னிப்பு கடிதம் வழங்கினார், மீதமுள்ள 18 உறுப்பினர்களின் பதவிகள் சபாநாயகரால் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து 18 உறுப்பினர்களின் மேல்முறையிட்டு மனுக்களும் தோல்வி அடைந்தன. மேலும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உட்பட 4 சட்டசபை உறுப்பினர்கள் மறைவால் தமிழகத்தில் 22 தொகுதிகள் வெற்றிடமாகின. 2019 மே மாதம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலும் நடந்தது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் சசிகலா ஆதரவாளர்கள் 22 இடங்களிலும் அ.தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்டனர். ஆனால் அ.தி.மு.க. 12 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்தது; சசிகலா ஆதரவாளர்கள் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தனர்.

அ.இ.அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள்.

எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அஇஅதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.

வரிசை எண் பெயர் தொடக்கம் முடிவு முறை கட்சி
1 எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980 1 அ.இ.அ.தி.மு.க
2 எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984 2 அ.இ.அ.தி.மு.க
3 எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987 3 அ.இ.அ.தி.மு.க
4 இரா. நெடுஞ்செழியன் 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க
5 ஜானகி இராமச்சந்திரன் 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க (ஜானகி அணி)
6 ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996 1 அ.இ.அ.தி.மு.க
7 ஜெ. ஜெயலலிதா[21] 14 மே, 2001 21 செப்டம்பர், 2001 2 அ.இ.அ.தி.மு.க
8 ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002 1 அ.இ.அ.தி.மு.க
9 ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006 3[21] அ.இ.அ.தி.மு.க
10 ஜெ. ஜெயலலிதா 16 மே, 2011 27 செப்டம்பர், 2014 4[21] அ.இ.அ.தி.மு.க
11 ஓ. பன்னீர்செல்வம் 29 செப்டம்பர், 2014 22 மே, 2015 2 அ.இ.அ.தி.மு.க
12 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2015 22 மே, 2016 5 அ.இ.அ.தி.மு.க
13 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2016 5 திசம்பர், 2016 6 அ.இ.அ.தி.மு.க
14 ஓ. பன்னீர்செல்வம் திசம்பர் 6, 2016 பிப்ரவரி 16, 2017 3 அ.இ.அ.தி.மு.க
15 எடப்பாடி க. பழனிசாமி பிப்ரவரி 16, 2017 தற்போது 1 அ.இ.அ.தி.மு.க

போட்டியிட்ட தேர்தல்கள்

இந்திய பொதுத் தேர்தல்கள்

அம்மா அன்பு மாளிகை, ராயப்பேட்டை
மக்களவை தேர்தல்கள்
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1977 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 21
18 / 542
Green Arrow Up Darker.svg 18 2.90% Straight Line Steady.svg 5,480,378 அரசு
1980 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 24
2 / 542
Red Arrow Down.svg 16 2.36% Red Arrow Down.svg 0.54% 4,674,064 எதிரணி
1984 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 12
12 / 533
Green Arrow Up Darker.svg 10 1.69% Red Arrow Down.svg 0.67 3,968,967 அரசு
1989 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 11
11 / 545
Red Arrow Down.svg 1 1.50% Red Arrow Down.svg 0.19 4,518,649 எதிரணி
1991 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 11
11 / 545
மாற்றங்கள் இல்லை 1.62% Green Arrow Up Darker.svg 0.12 4,470,542 அரசு
1996 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 10
0 / 545
Red Arrow Down.svg 11 0.64% Red Arrow Down.svg 0.98 2,130,286 தோல்வி
1998 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 23
18 / 545
Green Arrow Up Darker.svg 18 1.83% Green Arrow Up Darker.svg 1.19% 6,731,550 அரசு
1999 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 29
10 / 545
Red Arrow Down.svg 8 1.93% Green Arrow Up Darker.svg 0.10 7,046,953 எதிரணி
2004 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 33
0 / 543
Red Arrow Down.svg 10 2.19% Green Arrow Up Darker.svg 0.26 8,547,014 தோல்வி
2009 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 23
9 / 543
Green Arrow Up Darker.svg 9 1.67% Red Arrow Down.svg 0.52 6,953,591 மற்றவை
2014 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 40
37 / 543
Green Arrow Up Darker.svg 28 3.27% Green Arrow Up Darker.svg 1.60% 18,111,579 மற்றவை
2019 தேர்தல் எடப்பாடி பழனிசாமி 21
1 / 543
Red Arrow Down.svg 36 1.28% Red Arrow Down.svg 1.99% 7,830,146 அரசு

மாநில சட்டமன்றத் தேர்தல்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்[22]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1977 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 200
130 / 234
Green Arrow Up Darker.svg 130 30.36% Straight Line Steady.svg 5,194,876 அரசு
1980 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 177
129 / 234
Red Arrow Down.svg 1 38.75% Green Arrow Up Darker.svg 8.39% 7,303,010 அர்சு
1984 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 155
132 / 234
Green Arrow Up Darker.svg 3 37.03% Red Arrow Down.svg 1.72% 8,030,809 அரசு
1989 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 202
29 / 234
Red Arrow Down.svg 103 21.77% Red Arrow Down.svg 15.26% 5,247,317 எதிரணி
1991 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 168
164 / 234
Green Arrow Up Darker.svg 135 44.39% Green Arrow Up Darker.svg 22.62% 10,940,966 அரசு
1996 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 168
4 / 234
Red Arrow Down.svg 160 21.47% Red Arrow Down.svg 22.92% 5,831,383 மற்றவை
2001 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 141
132 / 234
Green Arrow Up Darker.svg 128 31.44% Green Arrow Up Darker.svg 9.97% 8,815,387 அரசு
2006 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 188
61 / 234
Red Arrow Down.svg 71 32.64% Green Arrow Up Darker.svg 1.20% 10,768,559 எதிரணி
2011 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 165
150 / 234
Green Arrow Up Darker.svg 89 38.40% Green Arrow Up Darker.svg 5.76% 14,150,289 அரசு
2016 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 234
135 / 234
Red Arrow Down.svg 14 40.77% Green Arrow Up Darker.svg 2.37% 17,616,266 அரசு
2021 தேர்தல் எடப்பாடி பழனிசாமி 191
66 / 234
Red Arrow Down.svg 69 33.29% Red Arrow Down.svg 7.48% 15,390,974 எதிரணி
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள்[23]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1974 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 21
12 / 30
Green Arrow Up Darker.svg 12 27.83% Straight Line Steady.svg 60,812 அரசு
1977 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 27
14 / 30
Green Arrow Up Darker.svg 2 30.96% Green Arrow Up Darker.svg 3.13% 69,873 அரசு
1980 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 18
0 / 30
Red Arrow Down.svg 14 18.60% Red Arrow Down.svg 12.36% 45,623 தோல்வி
1985 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 10
6 / 30
Green Arrow Up Darker.svg 6 15.75% Red Arrow Down.svg 2.85% 47,521 அரசு
1990 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 13
3 / 30
Red Arrow Down.svg 3 18.17% Green Arrow Up Darker.svg 2.42% 76,337 எதிரணி
1991 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 10
6 / 30
Green Arrow Up Darker.svg 3 17.34% Red Arrow Down.svg 0.83% 67,792 அரசு
1996 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 10
3 / 30
Red Arrow Down.svg 3 12.53% Red Arrow Down.svg 4.81% 57,678 எதிரணி
2001 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 20
3 / 30
மாற்றங்கள் இல்லை 12.56% Green Arrow Up Darker.svg 0.03% 59,926 அரசு
2006 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 18
3 / 30
மாற்றங்கள் இல்லை 16.04% Green Arrow Up Darker.svg 3.48% 90,699 எதிரணி
2011 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 10
5 / 30
Green Arrow Up Darker.svg 2 13.75% Red Arrow Down.svg 2.29% 95,960 அரசு
2016 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 30
4 / 30
Red Arrow Down.svg 1 16.82% Green Arrow Up Darker.svg 3.07% 134,597 எதிரணி
2021 தேர்தல் எடப்பாடி பழனிசாமி 5
0 / 30
Red Arrow Down.svg 4 4.14% Red Arrow Down.svg 12.68% 34,623 தோல்வி
கருநாடக சட்டமன்றத் தேர்தல்கள்[24]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1978 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 7
0 / 224
மாற்றங்கள் இல்லை 0.18% Straight Line Steady.svg 22,310 தோல்வி
1983 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 1
1 / 224
Green Arrow Up Darker.svg 1 0.13% Red Arrow Down.svg 0.05% 16,234 அரசு
1989 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 1
1 / 224
மாற்றங்கள் இல்லை 0.18% Green Arrow Up Darker.svg 0.05% 32,928 அரசு
1994 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 4
1 / 224
மாற்றங்கள் இல்லை 0.24% Green Arrow Up Darker.svg 0.06% 50,696 எதிரணி
1999 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 13
1 / 224
மாற்றங்கள் இல்லை 0.18% Red Arrow Down.svg 0.06% 39,865 அரசு
2004 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 2
0 / 224
Red Arrow Down.svg 1 0.07% Red Arrow Down.svg 0.11% 16,737 தோல்வி
2008 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 7
0 / 224
மாற்றங்கள் இல்லை 0.03% Red Arrow Down.svg 0.04% 9,088 தோல்வி
2013 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 5
0 / 224
மாற்றங்கள் இல்லை 0.03% மாற்றங்கள் இல்லை 10,280 தோல்வி
2018 தேர்தல் எடப்பாடி பழனிசாமி 3
0 / 224
மாற்றங்கள் இல்லை 0.01% Red Arrow Down.svg 0.02% 2,072 தோல்வி
கேரள சட்டமன்றத் தேர்தல்கள்[25]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1977 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 2
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.02% Straight Line Steady.svg 2,114 தோல்வி
1980 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 1
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.00% Red Arrow Down.svg 0.02% 224 தோல்வி
2006 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 29
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.12% Green Arrow Up Darker.svg 0.12% 19,078 தோல்வி
2011 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 4
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.01% Red Arrow Down.svg 0.11% 2,448 தோல்வி
2016 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 7
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.17% Green Arrow Up Darker.svg 0.16% 33,440 தோல்வி
2021 தேர்தல் எடப்பாடி பழனிசாமி 1
0 / 140
மாற்றங்கள் இல்லை 0.05% Red Arrow Down.svg 0.12% 10,376 தோல்வி
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள்[26]
ஆண்டு கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு சதவீதம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு
1978 தேர்தல் எம். ஜி. ராமச்சந்திரன் 9
0 / 294
மாற்றங்கள் இல்லை 0.19% Straight Line Steady.svg 38,691 தோல்வி
1994 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 2
0 / 294
மாற்றங்கள் இல்லை 0.05% Red Arrow Down.svg 0.14% 14,251 தோல்வி
1999 தேர்தல் ஜெ. ஜெயலலிதா 5
0 / 294
மாற்றங்கள் இல்லை 0.02% Red Arrow Down.svg 0.03% 7,281 தோல்வி

சின்னம் முடக்கம்

அஇஅதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.[27] பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.[28]

மேற்கோள்கள்

  1. "Immigration and Refugee Board of Canada". Responses to Information Requests (20 May 2016).
  2. 2.0 2.1 Geetha, V.. "The Dravidian consensus".
  3. Subramaniam, T.S (29 August 2011), "Palani excavation triggers fresh debate", The Hindu, Chennai, India, 8 September 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது, 8 October 2015 அன்று பார்க்கப்பட்டது
  4. "Why We Need to Be Wary of the Political Centrists". 14 August 2017. https://thewire.in/politics/political-centrists-leftists-rightist-centrism. 
  5. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). மூல முகவரியிலிருந்து 24 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது.
  6. http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article6561928.ece?homepage=true
  7. Duncan Forrester (1976). "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971". Asian Survey 16 (3): 283–296. http://www.jstor.org/stable/2643545. 
  8. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் accessed April 19, 2009
  9. When MGR arrived in Madurai to launch ADMK
  10. http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/10/அ.தி.மு.க.-கொடியை-வடிவமைத்த-நடி/article3424494.ece அ.தி.மு.க. கொடியை வடிவமைத்த பாண்டு.
  11. The man who designed the ‘Two Leaves’ symbol
  12. http://www.valaitamil.com/political-tamilnadu-election-history-1989th-tamil-nadu-assembly-election-articles103-166-6599-0.html
  13. "Panneerselvam sworn in as Tamil Nadu Chief Minister for third time". தி இந்து (6 டிசம்பர் 2016). பார்த்த நாள் 6 டிசம்பர் 2016.
  14. "அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்". தமிழ் இந்து. பார்த்த நாள் 29 திசம்பர் 2016.
  15. Chinnamma Sasikala named AIADMK General Secretary
  16. ஜெயலலிதா மறைவுக்கு பின் கூட்டப்பட்ட அவசர பொதுக்குழுவில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்
  17. "A roller-coaster ride: After party, Sasikala to take full control of government". டைம்சு ஆப் இந்தியா. பார்த்த நாள் பெப்ரவரி 5, 2017.
  18. "Sasikala Natarajan appointed Legislative Party leader of AIADMK, set to be Tamil Nadu chief minister". இந்தியன் எக்சுபிரசு. பார்த்த நாள் பெப்ரவரி 5, 2017.
  19. "தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா". தி இந்து (தமிழ்) (6 பிப்ரவரி 2017). பார்த்த நாள் 6 பிப்ரவரி 2017.
  20. "OPS revolts, says he was forced to quit". தி இந்து (8 பிப்ரவரி 2017). பார்த்த நாள் 12 பிப்ரவரி 2017.
  21. 21.0 21.1 21.2 On செப்டம்பர் 21, 2001, a five-judge constitutional bench of the Supreme Court of India ruled in a unanimous verdict that "a person who is convicted for a criminal offence and sentenced to imprisonment for a period of not less than two years cannot be appointed the Chief Minister of a State under Article 164 (1) read with (4) and cannot continue to function as such". Thereby, the bench decided that "in the appointment of Ms. Jayalalithaa as Chief Minister there has been a clear infringement of a Constitutional provision and that a writ of quo warranto must issue". In effect her appointment as Chief Minister was declared null and invalid in retrospect. Therefore, technically, she was not the Chief Minister in the period between மே 14, 2001 and செப்டம்பர் 21, 2001 (The Hindu — SC unseats Jayalalithaa as CM பரணிடப்பட்டது 2004-11-28 at the வந்தவழி இயந்திரம், full text of the judgment from official Supreme Court site).
  22. "Tamil Nadu Assembly Election Results". Election Commission of India.
  23. "Puducherry Assembly Election Results". Election Commission of India.
  24. "Karnataka Assembly Election Results". Election Commission of India.
  25. "Kerala Assembly Election Results". Election Commission of India.
  26. "Andhra Pradesh Assembly Election Results". Election Commission of India.
  27. "EC freezes 'two leaves' for R.K. Nagar bypoll". இந்து. பார்த்த நாள் மார்ச் 22, 2017.
  28. "Panneerselvam gets ‘electricity pole’, ‘hat’ for Sasikala in RK Nagar bypoll". டைம்சு ஆப் இந்தியா. பார்த்த நாள் மார்ச் 23, 2017.