பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியக் குடியரசு
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
Emblem of India.svg
இந்திய தேசிய இலச்சினை
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லை இந்திய அரசு
தலைமையகம் சாசுத்திரி பவன்
, புது தில்லி

28°36′50″N 77°12′32″E / 28.61389°N 77.20889°E / 28.61389; 77.20889
அமைப்பு தலைமை அருண் ஜெட்லி, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
வலைத்தளம்
mca.gov.in

பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் (Ministry of Company Affairs, MCA) இந்திய அரசின் ஓர் அமைச்சரகம் ஆகும். இந்திய தனியார்த்துறை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் இந்திய நிறுமங்கள் சட்டம், 1956 மற்றும் தொடர்புடைய சட்டங்களை செயற்படுத்துவது இந்த அமைச்சகத்தின் பொறுப்பு ஆகும். இந்தியாவின் தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவனங்களை கட்டுப்படுத்தும் முதன்மை பொறுப்பு இந்த அமைச்சரகத்திற்கு உள்ளது. இதன் அமைச்சராக தற்போது அருண் ஜெட்லி பொறுப்பேற்றுள்ளார்.

நிர்வாகம்[தொகு]

இந்த அமைச்சகம் கீழ்வரும் சட்டங்களின் செயலாக்கத்தை நிர்வகிக்கிறது:

ஆகத்து 2013இல் இந்திய நிறுமங்கள் சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டது. இது பெருநிறுவனங்கள் ஈடுபடும் ஏமாற்றுக்களை கட்டுப்படுத்தும். இந்தியாவில் நிகழ்ந்த சத்தியம் நிறுவன ஊழல் போன்ற கணக்கு மரபு நயக்கேடுகளைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.[1] இது 21வது நூற்றாண்டுப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவியலாத 1956இன் நிறுமங்கள் சட்டத்திற்கு மாற்றாக அமையும்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Jen Swanson (August 15, 2013). "India Seeks to Overhaul a Corporate World Rife With Fraud" ("Dealbook" blog). The New York Times. http://dealbook.nytimes.com/2013/08/15/india-seeks-to-overhaul-a-corporate-world-rife-with-fraud/. பார்த்த நாள்: August 16, 2013. 
  2. "Parliament passes Companies Bill 2012(Update)". Yahoo! News India. ANI. 8 Aug 2013. http://in.news.yahoo.com/parliament-passes-companies-bill-2012-155346651.html. பார்த்த நாள்: 16 Aug 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]