இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். முந்தைய தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்தாண்டுகள் (பதவிக்காலம் முழுவதும்) நீடித்தது. இந்திய வரலாற்றில் ஐந்தாண்டுகள் நீடித்த முதல் காங்கிரசு அல்லாத அரசு இதுவே. இந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு “இந்தியா ஒளிர்கிறது” என்ற பிரச்சாரத்தை இத்தேர்தலில் பாஜக மேற்கொண்டது. ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரசு கூட்டணி அதிக இடங்களில் வென்றது. காங்கிரசின் வலுவான மாநிலக் கட்சிகளின் கூட்டணியும் நகர மக்களிடம் மட்டுமே செல்லுபடியான “இந்தியா ஒளிர்கிறது” பிரச்சாரமும் பாஜகவின் தோல்விக்குக் காரணங்களாக சொல்லப்பட்டன. காங்கிரசு கூட்டணி தேர்தலுக்குப் பிறகு இன்னும் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி”யாக உருவானது. இதற்கு இடதுசாரிக் கட்சிகளின் 60 உறுப்பினர்களும் வெளியிலிருந்து ஆதரவளிக்க முன் வந்தனர். ஆனால் காங்கிரசு தலைவி சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காதவர் என்று காரணம் சொல்லி அவரை பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்று அன்றைய இந்திய குடியரசு தலைவரான அப்துல் கலாமிடம் எதிர்கட்சியில் பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்திய உயர் நீதிமன்றம் சோனியா காந்தி பிறப்பால் இட்டாலியர் ரோமானிய பிரஜை என்றாலும் ராஜீவ் காந்தியை மணந்து கொண்டதால் அவரின் இரத்த உறவால் இந்திய பிரஜை என்று தீர்ப்பளித்து சோனியா காந்தி பிரதமராக நாடாளும் தகுதி உடையவர். என்று தீர்ப்பளித்தது என்றாலும் எதிர் கட்சியினரின் பலமான விமர்சனங்களை காரணம் காட்டி பெருந்தன்மையாக தனக்கு பதிலாக காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்.