உள்ளடக்கத்துக்குச் செல்

2022 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

← 2017 6 ஆகத்து 2022 2027 →
வாக்களித்தோர்92.95% (5.26%)
 
வேட்பாளர் ஜகதீப் தன்கர் மார்கரட் அல்வா
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தே.ஜ.கூ. ஐக்கிய எதிரணி
சொந்த மாநிலம் இராசத்தான் கருநாடகம்

தேர்வு வாக்குகள்
528 182
விழுக்காடு 74.37% 25.63%
மாற்றம் 6.48% Increase 6.48%


முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

வெங்கையா நாயுடு
பா.ஜ.க

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

ஜெகதீப் தன்கர்
பா.ஜ.க


2022 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் (2022 Indian vice presidential election) என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 56(1) இந்தியத் துணைக் குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுக் காலத்திற்குப் பதவி வகிப்பவரை 6 ஆகத்து 2022 அன்று தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலாகும்.[1] இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்குப் பதிலாகப் பதவியேற்பார். 16 சூலை 2022 அன்று, மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பாரதிய ஜனதா கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார்.[2] இத்தேர்தலில் ஜக்தீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று 346 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.[3]

தேர்தல் முறை

[தொகு]

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர்களால் துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குறிப்பிடப்பட்ட அவையின் நியமன உறுப்பினர்களும் தேர்தல் செயல்பாட்டில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.[4] ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அட்டவணை

[தொகு]

குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் சட்டம் 1952-ன் பிரிவு (4)-ன் துணைப்பிரிவு (1)-ன் கீழ், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை 29 சூன் 2022.[1]

வ.எண். நிகழ்வு தேதி நாள்
1. தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு 5 சூலை 2022 செவ்வாய்
2. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 19 சூலை 2022
3. வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி 20 சூலை 2022 புதன்
4. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 22 சூலை 2022 வெள்ளி
5. தேவைப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதி 6 ஆகத்து 2022 சனிக்கிழமை
6. தேவைப்பட்டால், எண்ணும் தேதி எடுக்கப்படும்

வாக்காளார்கள்

[தொகு]
அவை
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றவைகள்
மக்களவை
349 / 543 (64%)
91 / 543 (17%)
103 / 543 (19%)
மாநிலங்களவை
115 / 237 (49%)
50 / 237 (21%)
74 / 237 (31%)
மொத்தம்
462 / 780 (59%)
141 / 780 (18%)
177 / 780 (23%)

வேட்பாளர்கள்

[தொகு]
பெயர் பிறந்தது கூட்டணி பதவிகளை வகித்தனர் சொந்த மாநிலம் தேதி அறிவிக்கப்பட்டது மேற்கோள்

ஜகதீப் தன்கர்
மே 18, 1951 (1951-05-18) (அகவை 73)
ஜஹஞ்சதுன்னு, ராஜஸ்தான்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
  • மேற்கு வங்க ஆளுநர் (2019-தற்போது)
  • நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் (1990-91)
  • ஜுன்ஜுனுவிலிருந்து எம்.பி (1989-91)
  • கிஷன்கர் எம்.எல்.ஏ (1993-98)
இராசத்தான் 16 சூலை 2022 [2]

மார்கரட் அல்வா
ஏப்ரல் 14, 1942 (1942-04-14) (அகவை 83)
மங்களூரு கருநாடகம்
ஒன்றிணைந்த எதிரணி
  • ஆளுநர், குஜராத் மாநிலம்
  • ஆளுநர், இராஜஸ்தான் மாநிலம்
  • ஆளுநர், கோவா
  • ஆளுநர், உத்தராகண்ட் மாநிலம்
கருநாடகம் 17 சூலை 2022 [7]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

14வது இந்தியக் குடியரசுத் துணைக் தலைவர் தேர்தல் 2022[8]

ed 2022 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர்
கட்சி(கூட்டணி) தேர்தல் வாக்குகள்
வாக்குகளின் %
ஜகதீப் தன்கர் பா.ஜ.க. (தே.ஜ.கூ.) 528 74.37
மார்கரட் அல்வா இ.தே.கா. (ஒ.எ.) 182 25.63
மொத்தம் 710 100
செல்லுபடியாகும் வாக்குகள் 710
செல்லாத வாக்குகள் 15
வாக்குப்பதிவு 725 92.95%
புறக்கணிப்புகள் 55 7.05%
வாக்காளர்கள் 780

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Vice-Presidential poll on August 6" (in en-IN). The Hindu. 2022-06-29. https://www.thehindu.com/news/national/election-for-vice-president-on-august-6-election-commission/article65579489.ece. 
  2. 2.0 2.1 "BJP names Bengal governor Jagdeep Dhankhar as NDA candidate for Vice President". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-07-16. Retrieved 2022-07-16.
  3. https://indianexpress.com/article/india/vice-presidential-poll-live-updates-jagdeep-dhankhar-margaret-alva-nda-congress-8073360/
  4. "How the Vice-President of India is elected: Know what it will take Venkaiah Naidu or Gopalkrishna Gandhi to win". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-07-12. Retrieved 2021-04-18.
  5. MALIK, ZAHOOR. "Jammu and Kashmir continues to be unrepresented in Rajya Sabha". Greater Kashmir (in ஆங்கிலம்). Retrieved 2022-07-16.
  6. "One more Rajya Sabha seat falls vacant after Tripura CM's resignation from Upper House". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-05. Retrieved 2022-07-16.
  7. https://www.hindustantimes.com/india-news/margaret-alva-to-be-opposition-s-vice-president-candidate-says-sharad-pawar-101658056612829-amp.html
  8. Jagdeep Dhankhar is 14th Vice-President of India