மார்கரட் அல்வா
மார்கரட் அல்வா/मार्गरेट अल्वा | |
---|---|
23வது ஆளுநர், குஜராத் மாநிலம் | |
பதவியில் 7 சூலை 2014 – 06 ஆகஸ்டு 2009 5 ஆகஸ்டு 2014 | |
முன்னவர் | கமலா பெனிவால் |
பின்வந்தவர் | ஓம் பிரகாஷ் கோக்லி |
29வது ஆளுநர், இராஜஸ்தான் மாநிலம் | |
பதவியில் 12 மே 2012 – 5 ஆகஸ்டு 2014 | |
முன்னவர் | சிவராஜ் பாட்டீல் |
பின்வந்தவர் | இராம் நாயக் (கூடுதல் பொறுப்பு) |
17வது ஆளுநர், கோவா | |
பதவியில் 12 சூலை 2014 – 7 ஆகஸ்டு 2014 | |
முன்னவர் | பாரத் வீர் வாஞ்சூ |
பின்வந்தவர் | ஓம் பிரகாஷ் கோக்லி |
4வது ஆளுநர், உத்தராகண்ட் மாநிலம் | |
பதவியில் 06 ஆகஸ்டு 2009 – 14 மே 2012 | |
முன்னவர் | பன்வாரிலால் ஜோஷி |
பின்வந்தவர் | அஜிஸ் குறைஷி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 14 ஏப்ரல் 1942 மங்களூரு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பிள்ளைகள் | 3 மகன்கள், 1 மகள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கார்மல் மலை கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி, பெங்களூரு |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
மார்கரட் அல்வா (Margaret Alva) (பிறப்பு:14 ஏப்ரல் 1942) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவரது கணவர் மற்றும் மாமியார் வயலட் அல்வா அகியோர் காங்கிரசு கட்சியின் தலைவர்கள் ஆவார்.தற்போது 2022ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.[1]
அரசியல்[தொகு]
கட்சிப் பதவிகள்[தொகு]
1975 முதல் 1977 முடிய கர்நாடகா மாநில இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இணைச் செயலராகவும், 1978 முதல் 1980 முடிய கர்நாடகா மாநில பொதுச்செயலராகவும் பதவியில் இருந்தவர். இவரது மாமியார் வயலெட் அல்வா, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத் தலைவராக செயல்பட்டவர்.[2] 2004 மற்றும் 2009 ஆண்டுகளிடையே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலராக பணியாற்றியவர்.
நாடாளுமன்ற பதவிகள்[தொகு]
மார்கரட் ஆல்வா மாநிலங்களவையின் உறுப்பினர் பதவிக்கு, 1974, 1980, 1986 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற விவகாரத் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் ராஜங்க அமைச்சராகவும் பணியாற்றியவர்.
ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறையில் கேபினட் தகுதி பெற்ற அமைச்சராக பதவியில் இருந்தவர்.[3]
1999-இல் 13வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
ஆளுநர் பதவியில்[தொகு]
மார்கரட் அல்வா 06 ஆகஸ்டு 2009 5 முதல் ஆகஸ்டு 2014 முடிய உத்தராகண்ட், இராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்தவர்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "துணை ஜனாதிபதி பதவிக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்: மார்கரெட் ஆல்வா வாழ்க்கை வரலாறு". தினத்தந்தி நாளிதழ். 2022-07-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rajya Sabha Members Biographical Sketches 1952 – 2003" (PDF). Rajya Sabha website. 2019-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-12-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jenkins, Laura Dudley (1999). "Competing Inequalities: The Struggle Over Reserved Legislative Seats for Women in India". in Boris, Eileen; Janssens, Angelique. Complicating Categories: Gender, Class, Race and Ethnicity. Cambridge University Press. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521786416. https://books.google.com/books?id=YWPGs-KXry4C&pg=PA66.
- ↑ "Governor of Rajasthan". Legislative Assembly of Rajasthan. 8 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Margaret Alva sworn in as Rajasthan Governor". Press Trust of India. Business Standard. 12 May 2012. http://www.business-standard.com/article/current-affairs/margaret-alva-sworn-in-as-rajasthan-governor-112051200090_1.html. பார்த்த நாள்: 19 February 2014.