உள்ளடக்கத்துக்குச் செல்

சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்மு காசுமீர்
லித்தர் பள்ளத்தாக்கு, அக்னூர் கோட்டை
சம்மு காசுமீர்
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் வரைபடம், ஜம்மு மற்றும் காஷ்மீரின் இந்திய நிர்வாகத்தின் யூனியன் பிரதேசத்தைக் காட்டுகிறது
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் வரைபடம், ஜம்மு மற்றும் காஷ்மீரின் இந்திய நிர்வாகத்தின் யூனியன் பிரதேசத்தைக் காட்டுகிறது
நாடுஇந்தியா
மாநிலம்31 அக்டோபர் 2019
தலைநகரம்சிரீநகர் (மே–அக்டோபர்)
சம்மு (நவம்பர்-ஏப்ரல்)[1]
மாவட்டங்கள்20
அரசு
 • நிர்வாகம்சம்மு காசுமீர் அரசு
 • துணைநிலை ஆளுநர்மனோச்சு சின்கா (7 ஆகத்து 2020 - )
 • முதலமைச்சர்பதவியிடம் காலி
 • சம்மு காசுமீர் சட்டமன்றம்ஓரவை முறைமை (114 உறுப்பினர்கள்)[2]
 • நாடாளுமன்றத் தொகுதிகள்மாநிலங்களவை (4)
மக்களவை (5)
 • உயர் நீதிமன்றம்சம்மு காசுமீர் உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்42,241 km2 (16,309 sq mi)
உயர் புள்ளி7,135 m (23,409 ft)
தாழ் புள்ளி247 m (810 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,22,67,013[4]
மொழிகள்
 • அலுவல்காசுமீரி, உருது, இந்தி, தோக்கிரி மற்றும் ஆங்கிலம்[5][6][7]
 • உள்ளூர் மொழிகள்காசுமீரி, தோக்கிரி, பஞ்சாபி, பகாரி மொழி, குருசாரி மொழி, தாத்திரி மொழி[8][9][10] மற்றும் இந்தி
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-JK
வாகனப் பதிவுJK
இணையதளம்https://www.jk.gov.in

சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி (Jammu and Kashmir Union Territory) இந்திய நாடாளுமன்றம் 5 ஆகத்து 2019 அன்று இயற்றிய சம்மு காசுமீர் சீரமைப்புச் சட்டத்தின்படி, சம்மு காசுமீர் மாநிலத்தை சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு ஒன்றியப் பகுதிகளின் ஆட்சி முறை 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் கிரீசு சந்திர முர்மு பதவி ஏற்றது முதல் சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[11][12][13][14][15]

சம்மு காசுமீர் அரசின் அலுவல் மொழிகளாக காசுமீரி, உருது, இந்தி, தோக்கிரி மற்றும் ஆங்கிலம் ஆகியவைகள் இருக்கும் என 1 செப்டம்பர் 2020 அன்று இந்திய அரசு அறிவித்துள்ளது.[16][17]

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகளின் துவக்கம்

[தொகு]
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பின்னர் 31 அக்டோபர் 2019-இல் துவக்கப்பட்ட புதிய ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகளின் வரைபடம்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான 31 அக்டோபர் 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவைகள் தனித்தனி ஒன்றியப் பகுதிகளாக செயல்படும் என இந்திய அரசு அறிவித்தது.[18][19]

எல்லைகள்

[தொகு]

இதன் வடக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு நிலங்கள், கிழக்கில் லடாக், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், மேற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் எல்லைகளாக உள்ளது. புதிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் புதிய வரைபடத்தை 2 நவம்பர் 2019 அன்று இந்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் பாக்கித்தான் ஆக்கிரமிப்பு பகுதிகள் காட்டப்பட்டுள்ளது.[20][21] இந்தியாவின் புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.[22]

பரப்பளவு

[தொகு]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் பகுதிகளின் 78,114 சதுர கிலோ மீட்டர் தவிர்த்த ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் பரப்பளவு 42,241 சகிமீ ஆகும்.

வரலாறு

[தொகு]

இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏயும் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 31 அக்டோபர் 2019 முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் ஒன்றியப் பிரதேசமாக நிறுவ வகை செய்யப்பட்டது.[23][24][25][26] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் கிரீஷ் சந்திர முர்மு பதவி ஏற்றது முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[12]

அரசாங்கம் மற்றும் அரசியல்

[தொகு]

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 239ஏ-இன் கீழ் ஜம்மு காஷ்மீர் பிரதேசம், இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக நிர்வகிக்கப்படுகிறது.[27] 25 அக்டோபர் 2019 அன்று ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார்.[28][29][30]

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் சட்டமன்றம் 107 முதல் 114 உறுப்பினர்கள் இருப்பர். சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை துணைநிலை ஆளுநரே நியமிப்பார். சட்டமன்ற நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு அமைச்சரவைக் குழு ஆலோசனைகள் வழங்குவர். மற்ற விசயங்களில் துணைநிலை ஆளுநரே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.[27] சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவ்வொன்றியப் பகுதியின் பொது அமைதி தொடர்பான சட்டங்கள் மற்றும் காவல் துறை ஆகியவைகளை இந்திய அரசே வழிநடத்துகிறது.[27]

நீதி நிர்வாகம்

[தொகு]

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிக்கும் சேர்த்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் செயல்படும்.

காவல் துறை

[தொகு]

இவ்வொன்றியப் பகுதிக்கான புது காவல் துறை உருவாக்கப்படும் வரை, ஏற்கனவே உள்ள ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையே ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கும், லடாக் ஒன்றியப் பகுதிக்கும் பணியாற்றும்.[31]

மாவட்டங்கள்

[தொகு]
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் மாவட்டங்கள்

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் ஜம்மு வருவாய் கோட்டத்தில் 10 மாவட்டங்களும், ஸ்ரீநகர் வருவாய் கோட்டத்தில் 10 மாவட்டங்களும் கொண்டுள்ளது.[32][33]

ஜம்மு வருவாய் கோட்டத்தின் மாவட்டங்கள்

[தொகு]
குறியிடு மாவட்டம் தலைமையிடம் பரப்பளவு (km²) மக்கள் தொகை
2001 கணக்கெடுப்பு
மக்கட்தொகை
2011 கணக்கெடுப்பு
வலைதளம்
JA ஜம்மு மாவட்டம் ஜம்மு 3,097 13,43,756 15,26,406 http://jammu.gov.in/
DO தோடா மாவட்டம் தோடா 11,691 3,20,256 4,09,576 http://doda.gov.in/ பரணிடப்பட்டது 2013-05-01 at the வந்தவழி இயந்திரம்
KW கிஷ்துவார் மாவட்டம் கிஷ்துவார் 1,90,843 2,31,037 http://www.kishtwar.nic.in/ பரணிடப்பட்டது 2019-11-03 at the வந்தவழி இயந்திரம்
RA ரஜௌரி மாவட்டம் ரஜௌரி 2,630 4,83,284 6,19,266 http://rajouri.nic.in/
RS ரியாசி மாவட்டம் ரியாசி 2,68,441 3,14,714 http://reasi.gov.in/
UD உதம்பூர் மாவட்டம் உதம்பூர் 4,550 4,75,068 5,55,357 http://udhampur.gov.in/ பரணிடப்பட்டது 2018-11-09 at the வந்தவழி இயந்திரம்
RB இராம்பன் மாவட்டம் ராம்பன் 1,80,830 2,83,313 http://ramban.gov.in/
KT கதுவா மாவட்டம் கதுவா 2,651 5,50,084 6,15,711 http://kathua.gov.in/ பரணிடப்பட்டது 2019-08-25 at the வந்தவழி இயந்திரம்
SB சம்பா சம்பா 2,45,016 3,18,611 http://samba.gov.in/ பரணிடப்பட்டது 2020-10-30 at the வந்தவழி இயந்திரம்
PO பூஞ்ச் பூஞ்ச் 1,674 3,72,613 4,76,820 http://poonch.gov.in/ பரணிடப்பட்டது 2018-10-29 at the வந்தவழி இயந்திரம்
மொத்தம் 26,293 44,30,191 53,50,811

ஸ்ரீநகர் வருவாய் கோட்டத்தின் மாவட்டங்கள்

[தொகு]
குறியிடு மாவட்டம் தலைமையிடம் பரப்பளவு (km²) மக்கட்தொகை
2001 கணக்கெடுப்பு
மக்கட்தொகை
2011 கணக்கெடுப்பு
வலைதளம்
SR ஸ்ரீநகர் மாவட்டம் ஸ்ரீநகர் 2,228 9,90,548 12,50,173 http://srinagar.nic.in/
AN அனந்தநாக் மாவட்டம் அனந்தநாக் 3,984 7,34,549 10,69,749 http://anantnag.gov.in/ பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
KG குல்காம் மாவட்டம் குல்காம் 4,37,885 4,23,181 http://kulgam.gov.in/
PU புல்வாமா மாவட்டம் புல்வாமா 1,398 4,41,275 5,70,060 http://pulwama.gov.in/ பரணிடப்பட்டது 2007-07-10 at the வந்தவழி இயந்திரம்
SH சோபியான் மாவட்டம் சோபியான் 2,11,332 2,65,960 http://shopian.nic.in/ பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம்
BD பட்காம் மாவட்டம் பட்காம் 1,371 6,29,309 7,55,331 http://budgam.nic.in/ பரணிடப்பட்டது 2009-04-27 at the வந்தவழி இயந்திரம்
GB காந்தர்பல் மாவட்டம் காந்தர்பல் 2,11,899 2,97,003 http://ganderbal.nic.in
BPR பந்திபோரா மாவட்டம் பந்திபோரா 3,16,436 3,85,099 http://bandipore.gov.in/ பரணிடப்பட்டது 2014-07-04 at the வந்தவழி இயந்திரம்
BR பாரமுல்லா மாவட்டம் பாரமுல்லா 4,588 8,53,344 10,15,503 http://baramulla.nic.in/
KU குப்வாரா மாவட்டம் குப்வாரா 2,379 6,50,393 8,75,564 http://kupwara.gov.in/
மொத்தம் 15,948 54,76,970 69,07,623

இதனுடன் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள, ஜம்மு காஷ்மீரின் பகுதிகளான ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள பூஞ்ச் வருவாய் கோட்டம், முசாஃபராபாத் வருவாய் கோட்டம் மற்றும் மிர்பூர் வருவாய் கோட்டத்தின் 10 மாவட்டங்கள் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் வரைபடத்தில் இந்திய அரசு இணைத்துக் காட்டியுள்ளது.[21]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Jammu and Kashmir is a எல்லைத் தகராறு between இந்தியா and பாக்கித்தான். Jammu and Kashmir has 42,241 km2 of area administered by India and 13,297 km2 of area controlled by Pakistan under Azad Kashmir which is claimed by India as part of Jammu and Kashmir.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Desk, The Hindu Net (8 May 2017). "What is the Darbar Move in J&K all about?" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 10 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171110135648/http://www.thehindu.com/news/national/other-states/what-is-the-darbar-move-in-j-k-all-about/article18409452.ece. 
  2. Shaswati Das. "Jammu and Kashmir transitions from a state into 2 federal units". Live Mint. https://www.livemint.com/news/india/new-dawn-for-j-k-begins-two-new-federal-units-take-shape-11572493040564.html. பார்த்த நாள்: 30 June 2020. "Jammu and Kashmir will also have its own legislative assembly, under which, according to the Act, the number of seats will go up to 114 from 87 currently, following a delimitation exercise." 
  3. "Saser Kangri - AAC Publications - Search The American Alpine Journal and Accidents". Publications.americanalpineclub.org. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  4. https://www.thehindu.com/news/national/other-states/only-jk-will-use-2011-census-for-delimitation/article30952006.ece
  5. President Kovind gives assent to Jammu and Kashmir Official Languages Bill
  6. President gives assent to Jammu and Kashmir Official Languages Bill
  7. https://www.dinamani.com/india/2020/sep/27/president-gives-assent-to-jammu-and-kashmir-official-languages-bill-3473679.html
  8. Khan, N. (6 August 2012). The Parchment of Kashmir: History, Society, and Polity (in ஆங்கிலம்). Springer. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781137029584. Archived from the original on 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
  9. Aggarwal, J. C.; Agrawal, S. P. (1995). Modern History of Jammu and Kashmir: Ancient times to Shimla Agreement (in ஆங்கிலம்). Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170225577. Archived from the original on 24 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
  10. "Bhadrawahi".. அணுகப்பட்டது 6 August 2019. 
  11. ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்: பதவியேற்றனர் துணை நிலை கவர்னர்கள்
  12. 12.0 12.1 President's rule revoked in J&K, 2 Union Territories created
  13. Union Territories of Jammu and Kashmir, Ladakh come into existence
  14. ஜம்மு காஷ்மீர் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
  15. காஷ்மீர், லடாக்கிற்கு புதிய கவர்னர்கள் நியமனம்
  16. ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிகள் 5 : மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!
  17. Cabinet approves Bill to include Kashmiri, Dogri, Hindi as official languages in J-K
  18. அக்டோபர் 31 முதல் யூனியன் பிரதேசங்களாக மாறுகிறது ஜம்மு-காஷ்மீர், லடாக்
  19. அக்டோபர் 31 முதல் ஜம்மு காஷ்மீர் & லடாக் தனி தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படும் - காணொளி
  20. 31 அக்டோபர் 2019-இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் படி வெளியிடப்பட்ட ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)|ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றிப் பகுதிகளின் புதிய வரைபடம்]
  21. 21.0 21.1 Centre releases political map of new Union Territories Jammu & Kashmir and Ladakh
  22. இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: பாகிஸ்தான் எதிர்ப்பு
  23. மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
  24. "Article 370 and 35(A) revoked: How it would change the face of Kashmir". The Economic Times. 5 August 2019.
  25. "Parliament Live | Lok Sabha passes Jammu and Kashmir Reorganisation Bill, Ayes: 370, Noes 70". Thehindu.com. August 6, 2019. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  26. Ministry of Home Affairs (9 August 2019), "In exercise of the powers conferred by clause a of section 2 of the Jammu and Kashmir Reorganisation Act." (PDF), இந்திய அரசிதழ், archived from the original (PDF) on 9 ஆகஸ்ட் 2019, பார்க்கப்பட்ட நாள் 9 August 2019 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  27. 27.0 27.1 27.2 Jammu & Kashmir Reorganisation Bill passed by Rajya Sabha: Key takeaways, The Indian Express, 5 August 2019.
  28. Girish Chandra Murmu appointed first Lieutenant Governor of J&K
  29. Girish Chandra Murmu appointed Lt. Governor of Jammu & Kashmir, Satya Pal Malik moved to Goa
  30. காஷ்மீர் ஆளுநராகும் நரேந்திர மோதியின் முன்னாள் செயலாளர் - யார் இவர்?
  31. Ratan, Devesh; Johri, Iti (7 August 2019). "Salient Features Of Jammu & Kashmir Reorganization Bill [Read Bill]". LiveLaw.in: All about law. பார்க்கப்பட்ட நாள் 7 August 2019.
  32. "The Jammu and Kashmir Reorganisation Bill, 2019". Prsindia.org. August 5, 2019. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  33. "THE JAMMU AND KASHMIR REORGANISATION BILL, 2019" (PDF). Prsindia.org. Archived from the original (PDF) on 6 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]