செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கச்சாலை
செனானி–நஷ்ரி சுரங்கச்சாலை
இரவில் சுரங்கச் சாலை
மேலோட்டம்
வேறு பெயர்(கள்)பத்னிடாப் சுரங்கச்சாலை
அமைவிடம்ஜம்மு காஷ்மீர், இந்தியா
தற்போதைய நிலைதிறப்பு விழா 2 ஏப்ரல் 2017
வழித்தடம்தேசிய நெடுஞ்சாலை 44
தொடக்கம்செனானி
முடிவுநஷ்ரி
செய்பணி
பணி ஆரம்பம்23 மே 2011 [1]
உரிமையாளர்இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
Trafficதானியங்கி
Characterபயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து
தொழினுட்பத் தகவல்கள்
வடிவமைப்புப் பொறியாளர்உட்கட்டமைப்பு & நிதிச் சேவைகள் நிறுவனம்
நீளம்9.2 கிலோ மீட்டர் [2]
தண்டவாளங்களின் எண்ணிக்கை2[2]
தொழிற்படும் வேகம்மணிக்கு 50 கிலோ மீட்டர்[3]

செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை, சாலை வழிப் போக்குவரத்திற்கு பயன்படும் இதனை பத்னிடாப் சுரங்கச்சாலை என்றும் அழைக்கப்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முஸ்ரீநகர் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44-இல் இச்சுரங்கச் சாலை, செனானி மற்றும் நஷ்ரி இடையே அமைந்த மலைப்பகுதியை குடைந்து 9.28 கிலோ மீட்டர் நீளத்திற்கு மலையைக் குடைந்து சாலை அமைக்கப்பட்டது. இச்சுரங்கச்சாலை அமைக்கும் பணி 2011-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு, 2 ஏப்ரல் 2017 அன்று நிறைவுற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. 2019-இல் இதன் பெயர் டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கச்சாலை எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4]

இச்சுரங்கச் சாலை அமைத்த பின்னர், ஜம்மு –காஷ்மீருக்கு இடையே பயண நேரம் 2 மணி நேரம் அளவுக்கும், பயண தூரம் 30.11 கி மீ அளவிற்கும் குறைந்துள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையில் இச்சுரங்கசாலை கட்டப்பட்டுள்ளது.

9.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இச்சுரங்கச்சாலை இந்தியாவின் நீளமான சுரங்கச் சாலையாகும்.[3]

2520 கோடி ரூபாய் செலவில் திட்டமிட்ட இச்சுரங்கச்சாலைப் பணி, திட்டம் முடிவுறும் போது 3720 கோடி ரூபாய் செலவானது.[1][3] இச்சுரங்கச் சாலையின் முக்கிய வயிற்றுப் பகுதி 13 மீட்டர் சுற்றளவும்; வாய் பகுதியும்; வெளி பகுதியும் 6 மீட்டர் சுற்றளவும் கொண்டது. இச்சுரங்கச் சாலையில் ஒவ்வொரு 300 மீட்டர் தொலைவிற்கு ஒரு குறுக்கு வழிப் பாதை வீதம் 29 குறுக்குப் பாதைகள் கொண்டது.[3] அவசர உதவிக்கு சுரங்கச்சாலையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

==அமைவிடம இச்சுரங்கச் சாலை, கீழ் இமயமலைத் தொடரில் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள பத்னிடாப் நகரத்தின் தெற்கில் உள்ள செனானி எனும் ஊரில் துவங்கி, பத்னிடாப் நகரத்தின் வடக்கில் உள்ள நஷ்ரி எனும் கிராமத்தில் முடிகிறது. [3]

பிப்ரவரி 2017-இல் இச்சுரங்கச் சாலை போக்குவரத்திற்கு ஏற்றது எனச் சான்று பெறப்பட்டது. [5] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 ஏப்ரல் 2017 அன்று செனானி-நஸ்ரி சுரங்கச் சாலையைத் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். [6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]