ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜம்மு-ஸ்ரீநகர்-பாரமுல்லா இருப்புப் பாதை
See caption
பொதுத் தகவல்
வட்டாரம்ஜம்மு காஷ்மீர்
முடிவிடங்கள்ஜம்மு
பாரமுல்லா
இயக்கம்
உரிமையாளர்இந்திய இரயில்வே
இயக்குவோர்வடக்கு இரயில்வே
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்356 கிமீ
தண்டவாள அகலம்அகலப் பாதை
கற்றா- பனிஹால் நகரங்களை இணைக்கும் 12 கிமீ நீளம் கொண்ட பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை
அனந்தநாக் தொடருந்து நிலையம்

ஜம்மு-ஸ்ரீநகர்-பாரமுல்லா இருப்புப் பாதை (Jammu–Srinagar–Baramulla railway line)[1] இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா - ஸ்ரீநகர் பகுதிகளை, ஜம்முவுடன் இணைக்கும் 356 கிமீ நீளம் கொண்ட இருப்புப் பாதை, ரூபாய் 10,000 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டம் 2002-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.[2] [3] இந்த இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் முழுவதும் முடிவடைந்த பிறகு புதுதில்லியிலிருந்து - ஸ்ரீநகரை 14 மணி நேர பயண நேரத்தில் அடையலாம்.

தற்போது ஜம்மு-வைஷ்ணதேவி கோயில்-உதம்பூரை இணைக்கும் இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[4] கற்றா நகரத்திலிருந்து, பனிஹால் வரையிலான 67 கிமீ நீளத்திற்கு இருப்புப் பாதைகள் அமைக்கும் பணிகள் 2019-இல் முடிவடைந்துள்ளது.[5] 2011-இல் இந்த இருப்புப் பாதைத் திட்டம் குப்வாரா வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[6] மேலும் ஜம்முவின் இராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால்-காசிகுண்ட்-அனந்தநாக்-ஸ்ரீநகர், பட்காம் மற்றும் பாரமுல்லா நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதை பணிகள் முடிவடைந்து தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[7] [8]இதில் விடுபட்ட வைஷ்ணதேவி-பனிஹால் நகரங்களை இணைக்கும் பணிகள் 2021-இல் முடிவடையும்.[9] மேலும் இந்த இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் குப்வாரா வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[10]

இருப்புப் பாதையின் தொலைவை குறைக்க வேண்டி, இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் பல இடங்களில் மலையைக் குடைந்து சுரங்கங்கள் அமைக்கப்படுகிறது. அவைகளில் ஒன்று 12 கிமீ நீளம் கொண்ட பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை ஆகும்.

தொடருந்து சுரங்கப்பாதைகளும், மேம்பாலங்களும்[தொகு]

இருப்புப் பாதை அமைக்க 100 கிமீ நீளத்திற்கு, 27 மேம்பாலங்கள், 37 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது. அவைகளில் நீளமான சுரங்கப் பாதை 11,215 மீட்டர் நீளம் கொண்ட பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை ஆகும்.[3] . [11] மேலும் செனாப் ஆற்றின் மீது 1,178 அடி உயரத்தில், 2156 அடி அகலத்தில், உலகத்தின் மிக உயரமான செனாப் இருப்புப் பாதை மேம்பாலம் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது.[12][13]

ஜம்மு-ஸ்ரீநகர்-பாரமுல்லா இருப்புப் பாதையில் 30 தொடருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 10-12 தொடருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜம்மு - பாரமுல்லா இருப்புப் பாதை முழுமையாக அமைக்கும் திட்டம் 2021-இல் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. [14]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]