பனிஹால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிஹால்
சிற்றூர்
பனிஹால் கணவாய்
பனிஹால் கணவாய்
பனிஹால் is located in ஜம்மு காஷ்மீர்
பனிஹால்
பனிஹால்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் பனிஹாலின் அமைவிடம்
பனிஹால் is located in இந்தியா
பனிஹால்
பனிஹால்
பனிஹால் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°25′N 75°12′E / 33.42°N 75.2°E / 33.42; 75.2ஆள்கூறுகள்: 33°25′N 75°12′E / 33.42°N 75.2°E / 33.42; 75.2
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர
மாவட்டம்இராம்பன்
ஏற்றம்1,647 m (5,404 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,900
Languages
 • அலுவல் மொழிகள்காஷ்மீரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்182146
வாகனப் பதிவுJK19
இணையதளம்ramban.gov.in

பனிஹால் (Banihal), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், இராம்பன் மாவட்டத்தில், இமயமலையின் பீர் பாஞ்சால் மலைத்தொடரில் 1647 மீட்டர் உயரத்தில் அமைந்த சிற்றூர் ஆகும்.

இது அனந்தநாக் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை எண் 44 மீது உள்ளது. குவாசிகுண்ட் நகரத்திலிருந்து தொடருந்து மூலம் பனிஹால் செல்ல 18 கிமீ பயணத் தொலைவாகும்.

மலைவாழிடமான இவ்வூரில் காஷ்மீரி, உருது மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது. இவ்வூரில் உள்ள ஜவகர் குகை, ஜம்முவையும், காஷ்மீரையும் இணைக்கும் முக்கிய சுரங்கச் சாலையாகும்.

பனிஹால் கணவாய்[தொகு]

இமயமலையின் பீர் பாஞ்சால் மலைத்தொடரில் 1760 மீட்டர் உயரத்தில் அமைந்த பனிஹால் கணவாய், பனிஹால் நகரத்துடன், மலைத்தொடரின் மறுபக்கத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரத்துடன் இணைக்கிறது. பனிஹால் கணவாயில் 2.8 கிமீ நீளமுள்ள ஜவகர் குகை 1956-இல் நிறுவப்பட்டது. [1]

பனிஹால் மற்றும் காசிகுண்ட் நகரங்களை இணைக்கும் பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை 11.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. [2] இச்சுரங்கப் பாதை 8.40 மீட்டர் அகலமும்; 7.39 மீட்டர் உயரமும் கொண்டது. மேலும் இச்சுரங்க இருப்புப் பாதையை ஒட்டி மூன்று மீட்டர் அகலம் கொண்ட சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடருந்துகள் இச்சுரங்க இருப்புப் பாதையை கடக்க 9 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஆகிறது.[3][4]

பேருந்துகள் காசிகுண்ட் – பனிஹால் நகரங்களுக்கிடையே உள்ள 35 கிலோ மீட்டர் நீள சாலை வழியாக பயணித்து கடக்க வேண்டும். ஆனால் இச்சுரங்க இருப்புப்பாதை மூலம் தொடருந்துகள் 17 கிலோ மீட்டர் பயணித்து கடக்கலாம். [5]

புதிய இருவழி சுரங்கப்பாதை[தொகு]

பனிஹால் நகரத்தையும், காசிகுண்ட் நகரத்தை இணைக்கும் 8.5 கிமீ நீளம் கொண்ட புதிய இருவழி சுரங்கப்பாதைகள் நிறுவுவதற்கான பணிகள் 2011 ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டு, பணி நடந்து கொண்டிருக்கிறது.

பனிஹால் தொடருந்து நிலையம்[தொகு]

பனிஹால் தொடருந்து நிலையம் (2014)

பனிஹால் தொடருந்து நிலையம், கடல் மட்டத்திலிருந்து 1702 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இருப்புப் பாதை 26 சூன் 2013 அன்று நிறுவப்பட்டது. பனிஹால் தொடருந்து நிலையத்திலிருந்து பயணிகள் தொடருந்துகள் காசிகுண்ட், அனந்தநாக், ஸ்ரீநகர், பட்காம் வழியாக வடக்கு காஷ்மீரத்தின் பாரமுல்லா நகரத்தை இணைக்கிறது.[6] [7]மேலும் பனிஹால் - கற்றாவை இணைக்கும் 148 கிமீ தொலைவிற்கான இருப்புப் பாதைகள் அமைக்கும் பணிகள் தொடர்கிறது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 7 வார்டுகள் கொண்ட பனிஹால் சிற்றூரின் மக்கள்தொகை 3,900 ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 27.49%, இசுலாமியர் 71.51% மற்றவர்கள் 0.33% ஆகவுள்ளனர.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". 2012-09-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-03 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  2. "J & K Project Brief". usbrl.org.
  3. "India's longest railway tunnel unveiled in Jammu & Kashmir". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 October 2011. Archived from the original on 29 ஜூன் 2013. https://web.archive.org/web/20130629075419/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-14/india/30278754_1_jawahar-tunnel-tunnel-excavation-baramulla. பார்த்த நாள்: 14 October 2011. 
  4. "Railways' Himalayan Blunder". Tehelka Magazine, Vol 8, Issue 32. 13 Aug 2011. 19 செப்டம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 ஜூலை 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://indiatoday.intoday.in/story/indian-railways-pir-panjal-tunnel-kashmir-valley-asia-second-longest-tunnel/1/239901.html
  6. Banihal Railway Station
  7. "Kashmir – Baramulla To Banihal". 2019-07-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-07-25 அன்று பார்க்கப்பட்டது.
  8. Banihal Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிஹால்&oldid=3620955" இருந்து மீள்விக்கப்பட்டது