காசிகுண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசிகுண்ட்
நகரம்
காசிகுண்ட் is located in Jammu and Kashmir
காசிகுண்ட்
காசிகுண்ட்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காசிகுண்ட்
காசிகுண்ட் is located in இந்தியா
காசிகுண்ட்
காசிகுண்ட்
காசிகுண்ட் (இந்தியா)
ஆள்கூறுகள்: நகரத்தின் அமைவிடம் 33°35′32″N 75°09′56″E / 33.592132°N 75.165432°E / 33.592132; 75.165432ஆள்கூறுகள்: 33°35′32″N 75°09′56″E / 33.592132°N 75.165432°E / 33.592132; 75.165432
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்அனந்தநாக்
ஏற்றம்1,670 m (5,480 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,871
மொழிகள்
 • அலுவல் மொழிகள்காஷ்மீரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுJK03

காசிகுண்ட் (Qazigund), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்த சிறு நகரம் ஆகும். காசிகுண்ட் நகரம் கடல்மட்டத்திலிருந்து 1670 மீட்டர் (5478 அடி) உயரத்தில் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் 33°35′N 75°10′E / 33.59°N 75.16°E / 33.59; 75.16 பாகையில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் 44 மீது அமைந்துள்ள காசிகுண்ட் நகரம், அனந்தநாக்கிலிருந்து 21 கிமீ தொலைவிலும்; ஸ்ரீநகரிலிருந்து 72 கிமீ தொலைவிலும்; ஜம்முவிலிருந்து 187 கிமீ தொலைவிலும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 5 வார்டுகள் கொண்ட காசிகுண்ட் நகராட்சியின் மக்கள்தொகை 9,871 ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர் 90.33%; இந்துக்கள் 9,871%; சீக்கியர்கள் 1.49% மற்றவர்கள் 0.39% ஆகவுள்ளனர். [1]

போக்குவரத்து வசதிகள்[தொகு]

காசிகுண்ட் தொடருந்து நிலையம்

காசிகுண்ட் நகரம், பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்லும் அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர், பட்காம், பாரமுல்லா, பனிஹால் போன்ற நகரங்களை தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா) மற்றும் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது. [2] பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 44, காசிகுண்ட் நகரம், பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை மற்றும் ஜவகர் குகை வழியாக ஜம்மு நகரத்துடன் இணைக்கப்படுகிறது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிகுண்ட்&oldid=2996199" இருந்து மீள்விக்கப்பட்டது