இராம்பன் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்பன் மாவட்டம்
ஜம்மு காஷ்மீரின் மையம்
மாவட்டம்
காஷ்மீர் இரயில்வேயின் பெரிய தொடருந்து நிலையமான பனிஹால் தொடருந்து நிலையம்.
காஷ்மீர் இரயில்வேயின் பெரிய தொடருந்து நிலையமான பனிஹால் தொடருந்து நிலையம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் மாவட்டத்தின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டத் தலைமையிடம்இராம்பன்
பரப்பளவு
 • மொத்தம்1,329 km2 (513 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்2,83,713
 • அடர்த்தி210/km2 (550/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்182144
வாகனப் பதிவுJK19
இணையதளம்http://ramban.gov.in

இராம்பன் மாவட்டம் (Ramban District), ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மையத்தில், இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. நிர்வாக வசதிக்காக தோடா மாவட்டத்தின் தொலைவான சில பகுதிகளைக் கொண்டு, 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் நாளில் இராம்பன் மாவட்டம் புதிதாக துவக்கப்பட்டது. [2] [3] ஜம்மு - ஸ்ரீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 1 எ யில் அமைந்த இராம்பன் நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இராம்பன் அமைந்துள்ளது. [4]

நிர்வாகம்[தொகு]

இராம்பன் மாவட்டம், ராம்பன் மற்றும் பனிஹால் என இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் இராம்பன், பனிஹால், கோல் மற்றும் இராம்சு என நான்கு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது. இராம்பன் மாவட்டம் 116 கணக்கெடுப்பு கிராமங்களும், 127 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. மேலும் ஹல்கா எனப்படும் 127 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.

புவியியல்[தொகு]

இராம்பன் மாவட்டம், கடல் மட்ட்டத்திலிருந்து 3,792 அடி (1,156 மீட்டர்) உயரத்தில் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில், செனாப் ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கோடைகால தலமான பட்னிடாப் என்ற சிறுநகரம் அமைந்துள்ளது. தோடா மாவட்டம், உதம்பூர் மாவட்டம், ரியாசி மாவட்டம், குல்காம் மாவட்டம் மற்றும் அனந்தநாக் மாவட்டங்களை எல்லைகளாக கொண்டது இராம்பன் மாவட்டம்.[5] [6]

தட்ப வெப்பம்[தொகு]

இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் இம்மாவட்டம் அமைந்திருப்பதால், ஆண்டில் எட்டு மாதங்கள் கடுங்குளிர் கொண்டுள்ளது.

அரசியல்[தொகு]

இராம்பன் மாவட்டம் பனிஹல் மற்றும் இராம்பன் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. [7]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு|இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இராம்பன் மாவட்ட மக்கள் தொகை 2,83,313 ஆக உள்ளது.[8]பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 901 பெண்கள் என்ற அளவில் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 56.9 விழுக்காடாக உள்ளது. இசுலாமியர்கள் எழுபது விழுக்காடாகவும், இந்துக்கள் இருபத்தி எட்டு விழுக்காடாகவும், மற்றவர்கள் இரண்டு விழுக்காடாகவும் உள்ளனர்.

மொழிகள்[தொகு]

இராம்பன் மாவட்டத்தில் கஷ்மீரி மொழி, உருது மொழி, பஞ்சாபி மொழி, டோக்கிரி மொழி, கொஜ்ரி மொழிகள் பேசப்படுகிறது.

பெருந்திட்டங்கள்[தொகு]

பீர்பாஞ்சால் தொடருந்து குகைப்பாதை[தொகு]

இம்மாவட்டத்தில் பரவியுள்ள பீர்பாஞ்சால் மலையைக் குடைந்து வடித்த இந்தியாவின் 11.2 கிலோ மீட்டர் நீளமான பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை மற்றும் பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலைகள் இராம்பன் மாவட்டத்தின் பனிஹால் நகரத்தையும், அனந்தநாக் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரத்தையும் இணைக்கிறது.[9]

பக்லிஹார் புனல் மின் திட்டம்[தொகு]

இராம்பனிலிருந்து 88 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்லிஹார் நீர்த்தேக்கம் மூலம் 900 மொகா வாட் மற்றும் 450 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புனல் மின் நிலையங்கள் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்பன்_மாவட்டம்&oldid=3544121" இருந்து மீள்விக்கப்பட்டது