பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை

ஆள்கூறுகள்: 33°30′45″N 75°11′50″E / 33.5124345°N 75.1970923°E / 33.5124345; 75.1970923
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை
பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை
மேலோட்டம்
தடம்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
அமைவிடம்ஜம்மு காஷ்மீர்
தற்போதைய நிலைஇயக்கப்படுகிறது
தொடக்கம்பனிஹால், இராம்பன் மாவட்டம்
முடிவுஹில்லார் ஷாகாபாத், காசிகுண்ட்
செய்பணி
உரிமையாளர்இந்திய இரயில்வே
இயக்குபவர்இந்திய இரயில்வே
Trafficஇருப்புப்பாதை
தொழினுட்பத் தகவல்கள்
பாதை நீளம்11.21 கி மீ
இருப்புப்பாதைகள்ஒற்றைத் தட இருப்புப்பாதை
தட அளவுஅகலப் பாதை
தொழிற்படும் வேகம்மணிக்கு 75 கி மீ

பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையின் பீர் பாஞ்சால் மலைத்தொடரை குடைந்து வடித்த இந்தியாவின் 11.2 கிலோ மீட்டர் நீளமான பீர்ப பாஞ்சால் தொடருந்து சுரங்க இருப்புப் பாதை, இராம்பன் மாவட்டத்தின் பனிஹால் மற்றும் அனந்தநாக் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரத்திற்கு அருகே உள்ள ஹில்லார் ஷாகாபாத் ஊரையும் இணைக்கிறது.[1]ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையின் ஓர் அங்கமாக பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப் பாதை நிறுவப்பட்டுள்ளது.

பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பனிஹால் நகரத்திலிருந்து 11.2 (7 மைல்) கிலோ மீட்டர் நிளத்திற்கு இமயமலையின் பீர் பாஞ்சால் மலைத் தொடரைத் குடைந்து அமைக்கப்பட்டது.

நீளம் மற்றும் உயரம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து 1,760 மீட்டர் உயரத்தில் அமைந்த பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை 11.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. [2] இச்சுரங்கப் பாதை 8.40 மீட்டர் அகலமும்; 7.39 மீட்டர் உயரமும் கொண்டது. மேலும் இச்சுரங்க இருப்புப் பாதையை ஒட்டி மூன்று மீட்டர் அகலம் கொண்ட சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடருந்துகள் இச்சுரங்க இருப்புப் பாதையை கடக்க 9 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஆகிறது.[3][4]

பேருந்துகள் காசிகுண்ட்பனிஹால் நகரங்களுக்கிடையே உள்ள 35 கிலோ மீட்டர் நீள சாலை வழியாக பயணித்து கடக்க வேண்டும். ஆனால் இச்சுரங்க இருப்புப்பாதை மூலம் தொடருந்துகள் 17 கிலோ மீட்டர் பயணித்து கடக்கலாம். [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]