ரகுநாத் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரகுநாத் கோயில்
ரகுநாத் கோயில் வளாகம்
ரகுநாத் கோயில் is located in Jammu and Kashmir
ரகுநாத் கோயில்
ரகுநாத் கோயில்
ஜம்முவில் ரகுநாத் கோயில்
ஆள்கூறுகள்:32°43′52″N 74°51′50″E / 32.731°N 74.8638°E / 32.731; 74.8638ஆள்கூறுகள்: 32°43′52″N 74°51′50″E / 32.731°N 74.8638°E / 32.731; 74.8638
பெயர்
பெயர்:ரகுநாத் மந்திர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்:ஜம்மு மாவட்டம்
அமைவு:ஜம்மு நகரம்
கோயில் தகவல்கள்
மூலவர்:இராமர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:7
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை:7
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1835–1860
அமைத்தவர்:மகாராஜா குலாப் சிங் மற்றும் மகாராஜா ரண்பீர் சிங், ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
இரகுநாத் கோயில் கோபுரங்கள், 1988

இரகுநாத் கோயில் (Raghunath Temple) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழு சன்னதிகள் கொண்டது. ஏழு சன்னதிகளுக்கும் தனித்தனி கோபுர விமானங்கள் உள்ளது.

இக்கோயில் மூலவர் இராமராக இருப்பினும், சீதை, விஷ்ணு, கிருஷ்ணர், அனுமார், சிவன், பிரம்மா, துர்கை, பார்வதி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உண்டு.

இக்கோயில் கட்டும் பணி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா குலாப் சிங்கால் 1835-இல் துவக்கப்பட்டு, அவரது மகன் மகாராஜா ரண்பீர் சிங் என்பவரால், 1860-இல் கட்டிமுடிக்கப்பட்டது.

லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் இரகுநாத் கோயிலில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதிலும், எறிகுண்டுகளை வீசித் தாக்கியதிலும், பக்தர்கள் பலர் உயிரிழந்தனர்.

அமைவிடம்[தொகு]

இரகுநாத் கோயில் ஜம்மு நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பெரிய கோயில்களில் ஒன்றாகும்.

ரகுநாத் கோயில் தாக்குதல்கள்[தொகு]

இக்கோயிலை 30 மார்ச் 2002இல் பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் துப்பாக்கிகளாலும், குண்டு வீச்சாலும் தாக்கியதில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.[1] இரகுநாத் கோயில் மீதான இரண்டாம் தாக்குதலை நவம்பர் 24, 2002இல் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் மேற்கொண்டனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதிலும், குண்டுகளை வீசியதாலும், 13 பக்தர்கள் இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுநாத்_கோயில்&oldid=2790081" இருந்து மீள்விக்கப்பட்டது