சோபியான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோபியான் மாவட்டம்
शोपियां ज़िला / شوپیاں ضلع
மாவட்டம்
ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்ட அமைவிடம், இந்தியா
ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்ட அமைவிடம், இந்தியா
நாடு  இந்தியா
மாநிலம் ஜம்மு காஷ்மீர்
தலைமையிடம் சோபியான்
மொழிகள்
 • அலுவல் மொழிகள் உருது
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம் http://shopian.nic.in

சோபியான் மாவட்டம் (Shopian District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருப்பத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். காஷ்மீர் சமவெளியில் அமைந்த பதினோறு மாவட்டங்களில் சோபியான் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைமையிடம் சுபியான் நகராகும். இம்மாவட்ட்த்தின் பரப்பளவு 312 சதுர கிலோ மீட்டராகும்.

மாவட்டத்தின் அமைவிடம்[தொகு]

சோபியான் மாவட்டம் வடகிழக்கில் புல்வாமா மாவட்டம், தெற்கில் குல்காம் மாவட்டம், வடமேற்கில் பட்காம் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சோபியான் மாவட்ட மக்கள் தொகை 2,66,215 ஆக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் தொகையில் சோபியான் மாவட்ட மக்கள் தொகை 2.12% ஆகும். அதில் ஆண்கள் 136,480 , பெண்கள் 129,735 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி 25.97% ஆக உள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 853 வீதம் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் தொகையில் சோபியான் மாவட்ட மக்கள் தொகை 2.12% ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் வீதம் உள்ளனர், சராசரி எழுத்தறிவு 60.76% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 70.27% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 50.90% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் தொகை 41,547 ஆக உள்ளது. [1]

சமயம்[தொகு]

சோபியான் மாவட்ட்த்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமயத்தினராக உள்ளனர். சோபியான் மாவட்ட மொத்த மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 2,62,263 (98.52%) ஆகவும், இந்துக்கள் 3,116 (1.17), கிறித்தவர்கள் 429 ஆகவும் (0.16%), சீக்கியர்கள் 178 (0.07%) ஆகவும் உள்ளனர்.[2]

கல்வி[தொகு]

கல்லூரிகள்
  • அரசு இளங்கலை மற்றும் இளம் அறிவியல் இருபாலர் கல்லூரி.
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சோபியான்
பள்ளிகள்
  • பிரிலியண்ட் பொது உயர்நிலை பள்ளி, முல்லா டேஞ்சர்பொரா
  • பொது மாதிரி பள்ளி, ரத்தினபோரா
  • அரசு உயர்நிலை பள்ளி, ரேஷ்னிநகரி
  • அரசு ஆண்கள் துவக்கப் பள்ளி, ரியாசிநகர்
  • அரசு பெண்கள் துவக்கப் பல்ளி, ரியாசிநகர்
  • அரசு இருபாலர் உயர்நிலைபள்ளி, சோபியான்
  • அரசு உயர்நிலை பள்ளி, ராம்நகரி
  • அரசு உயர்நிலைபள்ளி, டி. கே. போரா
  • அரசு உயர்நிலைபள்ளி, காப்ரான்
  • அரசு நடுநிலைப் பள்ளி, மகேஷ்வர்
  • அரசு நடுநிலை பள்ளி, ரெஷிபோரா, சோபியான், ஷெயின்போரா, சோபியான்
  • மத்திய பொது மேல்நிலைப் பள்ளி, சித்ரகாம்
  • அரசு உயர்நிலைப்பள்ளி ஷெயின்போரா

போக்குவரத்து[தொகு]

சோபியான் மாவட்டத்தை, மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்க மாநில சாலைகள் உதவுகிறது. இம்மாவட்டத்தில் தொடருந்து மற்றும் விமான சேவை இல்லை.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியான்_மாவட்டம்&oldid=2046391" இருந்து மீள்விக்கப்பட்டது