சிகாரா (படகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிகாரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தால் ஏரியில் சிகாரா படகு


சிகாரா (shikara) இந்தியாவின் காஷ்மீர் நகரத்தில் அமைந்த தால் ஏரியை சுற்றிப் பார்க்கும் பயணிகள் பயணிப்பதற்கும், சிறு வணிகர்கள் விற்பனைப் பொருட்களை சுற்றுலாப் பயணிகளிடம் விற்பதற்குமான படகு ஆகும். மரத்தால் ஆன இவ்வழகிய சிறு படகில் இதில் ஆறு முதல் 10 பேர் வரை பயணிக்கலாம். சிகாராப் படகுகளை துடுப்புகளைக் கொண்டு மட்டும் இயக்கப்படுகிறது.

மேலும் தால் ஏரியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுவீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏரியின் கரைக்கு வந்து செல்ல சிகாரா எனப்படும் படகுகளை பயன்படுத்துவர்.[1][2]

சிகாரா படகில் பூக்கடை

சிகாரா படகுகள் தேவதாரு மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படுகிறது. காஷ்மீரி மொழியில் சிகாரா என்பதற்கு படகு எனப்பொருள்.

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

[3]

  1. Kevin Sites (2006). "Boat People, Unable to afford homes on land, the poorest of Kashmir’s poor live on open fishing boats, where life is always unsteady.". Yahoo! News. மூல முகவரியிலிருந்து 20 July 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-06-06.
  2. "Shikaras: The Floating versus on sounds of water". Gaatha. பார்த்த நாள் 3 February 2014.
  3. SHIKARA RIDE IN DAL LAKE
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாரா_(படகு)&oldid=3041528" இருந்து மீள்விக்கப்பட்டது