உள்ளடக்கத்துக்குச் செல்

படகுவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளத்தில் ஒரு படகுவீடு

படகுவீடு என்பது, வீடாகப் பயன்படுத்துவதற்காக வடிவமைத்து உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட படகு ஆகும். இவற்றை மிதவைவீடுகள் எனவும் அழைக்கலாம். சில படகுவீடுகளில் இயந்திரங்கள் பூட்டப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பல படகுவீடுகள் கரையை அண்டி நிலையாக நிறுத்தப்பட்டிருப்பதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நிலத்துடன் இணைக்கப்பட்டிருப்பதும் வழக்கம்.

ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா என எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த பல்வேறு நாடுகளில் படகுவீடுகள் பயன்பாட்டில் உள்ளன. இவை வசதிகுறைந்த மக்களின் வாழிடங்களாகத் தொழிற்படும் குடிசை போன்ற படகு வீடுகள் முதல் உல்லாசப் பயணிகளுக்கான வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட வீடுகள் வரை பல்வேறுபட்டுக் காணப்படுகின்றன

"https://ta.wikipedia.org/w/index.php?title=படகுவீடு&oldid=2918786" இலிருந்து மீள்விக்கப்பட்டது